Advertisment

கொடூர வில்லியாக மாறிய தோழி : நாயகி கொடுத்த தரமான பதிலடி : ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
zee tamil anna KP Nv

ஜீ தமிழ் சீரியல்

கத்தியுடன் தீபாவை குத்த துரத்தும் ரவுடி.. கார்த்திக்கிடம் அடுத்தடுத்து பல்பு வாங்கிய ரம்யா

Advertisment

கார்த்திகை தீபம், சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி வீட்டிற்கு வந்த ரம்யா எல்லாருக்கும் கிப்ட் கொடுத்து விட்டு கிளம்பிய நிலையில் இன்று, ரம்யா யோசனையில் உட்கார்ந்திருக்க அப்போது திடீரென அவளுக்கு ஆபிஸ் கேக் வெட்டி கார்த்திக்கு ஊட்டி விட்டு மோதிரம் போடுவது போல தோன்ற அதை அப்படியே உண்மையாக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறாள், மேனேஜருக்கு போனை போட்டு எனக்கு பிறந்த நாள்னு சொல்லி கேக் வெட்ட எல்லா ஏற்பாடுகளையும் செய் என்று சொல்கிறாள்.

அடுத்து ஆபிஸ் வரும் ரம்யா எல்லாரையும் கூட்டி வைத்து கேக் வெட்டி கார்த்திக்கு ஊட்டி விட போக அவன் கைலயே கொடுத்துடுங்க என்று சொல்லி வாங்கி கொள்கிறான், இதனால் ரம்யா பல்பு வாங்க அடுத்து நல்ல வேலை செய்யுற 5 பேருக்கு நான் மோதிரம் போட போறேன் என்று சொல்லி பெயர்களை படிக்க தொடங்குகிறாள். கார்த்திக் இந்த முறை நோ சொல்ல கூடாது என்பதற்காக ரம்யா எல்லாருக்கும் அவள் கையாலேயே மோதிரம் போட்டு விடுகிறாள்.

அடுத்து ஐந்தாவது ஆளாக கார்த்திக் பெயரை சொல்லி கூப்பிட அவன் நான் வேலைக்கு சேர்ந்தே 10 நாள் தான் ஆச்சு, எனக்கு எதுக்கு மோதிரம் என்று கேட்க ரம்யா உங்களால் கம்பெனிக்கு லாபம் கிடைச்சிருக்கு, நல்லா வேலை செய்யுறீங்க என்று சொல்லி மோதிரத்தை போட போக இந்த முறையும் கார்த்திக் என் கையில் கொடுத்துடுங்க என்று வாங்கி கொள்ள மீண்டும் ரம்யா பல்பு வாங்குகிறாள். இதையெல்லாம் நோட் பண்ண பி.ஏ ரம்யாவிடம் உங்களையும் கார்த்திக்கையும் பார்க்கும் போது ராமன் சீதையை பார்க்குற மாதிரி இருப்பதாக சொல்ல ரம்யா யாரை யாரோட சேர்த்து பேசுற என்று அறைகிறாள்.

அடுத்து தீபா மார்க்கெட்டில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது ரவுடி ஒருவன் வேண்டுமென்றே மோத அவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் தீபா அவனது அறைய அவன் கத்தியை எடுத்து குத்த வர தப்பி ஓடி வரும் தீபா கார் மீது மோதி கீழே விழுகிறாள். தீபா அடிபட்டு கிடப்பதாக கார்த்திக்கு போன் வர அவனும் பதறியடித்து ஓடி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

சுடரிடம் கோபத்தை கொட்டும் எழில்.. புருஷனுக்காக இந்து எடுத்த முடிவு

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் சமைத்த சாப்பாட்டை சாப்பிடாமல் எழில் கோபமாக எழுந்து சென்ற நிலையில் இன்று, சுடர் எல்லாத்துக்கும் கோபப்படுறாரு.. இனிமே நாமும் சார் சார்-னு பின்னாடியே தொங்கிட்டு இருக்க கூடாது என்று கோபப்படுகிறாள். இதனையடுத்து இதையெல்லாம் பார்த்த இந்து எழில் சாப்பிடாமல் போனதை நினைத்து பீல் பண்ணுவதோடு சுடருக்கு அவரை ஹாண்டில் பண்ண தெரியல என்று சமைக்க சொல்லி கொடுக்க முடிவெடுக்கிறாள்.

பிறகு இந்து சுடரிடம் எனக்கு இந்து எப்படி சமைப்பானு தெரியும்.. நீ வா நான் சொல்லி தரேன், நான் சொல்றதை கேட்டு நீ தான் சமைக்கணும் என்று தீபாவை உதவிக்கு வைத்து கொண்டு சமையல் செய்முறைகளை சொல்ல சுடரும் அதை கேட்டு அப்படியே சமைக்கிறாள். சமைத்து முடித்த பிறகு பசங்களை எப்படி சாப்பிட கூப்பிடுவது என்று யோசிக்கிறாள். அந்த நேரத்தில் கவின் கிராஸ் ஆக அவனை சாப்பிட கூப்பிட நீ சமைத்ததை சாப்பிட மாட்டேன் என்று மேலே செல்கிறான்.

அப்போது அவன் திடீரென பிரியாணி வாசனையை வைத்து சாப்பிட வந்து சூப்பரா இருக்கு என்று சொன்னதும் மற்ற குழந்தைகளும் சாப்பிட வந்து விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பஞ்சாயத்தில் மண்ணை கவ்விய சௌந்தரபாண்டி.. இரண்டு மடங்காக திருப்பி அடித்த பரணி

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பஞ்சாயத்தில் பரணி நீங்க இருக்கிற வீடு என் பேர்ல இருக்கு என்று டாகுமென்ட்டை எடுத்து காட்டி அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று, சௌந்தரபாண்டி அது என் பொண்டாட்டி பாக்கியம் பேர்ல தானே இருந்துச்சு என்று பாக்கியம் பக்கம் திரும்ப என் பொண்ணுக்கு நீங்க என்ன பண்ணீங்க? அதனால் வீட்டை அவ பேருக்கு எழுதி கொடுத்துட்டேன் என்று சொல்ல அதை கேட்டு ஷாக் ஆகுகின்றனர்.

பிறகு சௌந்தரபாண்டி நான் சாவியை கொடுத்துறேன், தோல்வியை ஏத்துக்குறேன் என்று சொல்லி பஞ்சாயத்தில் சரண்டர் ஆகிறார். பரணியிடம் வீட்டு சாவியை கேட்க அவள் என் வீட்டில இருந்து தூக்கி வெளியே போட்ட பொருளை எல்லாம் திரும்ப வீட்டுக்குள்ள எடுத்து வச்சா தான் சாவி என்று சொல்ல சௌந்தரபாண்டி சனியனை அனுப்பி எடுத்து வைக்க சொல்ல பரணி தூக்கி போட்டவங்க தான் எடுத்து வைக்கணும் என்று சௌந்தரபாண்டி மறறும் முத்துபாண்டியை வைத்து பொருட்களை எடுத்து உள்ளே எடுத்து வைக்கிறாள்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த சௌந்தரபாண்டி யாரை கேட்டு வீட்டை அவ பேருக்கு எழுதி வச்ச என்று அடிக்க பாய முத்துப்பாண்டி வேண்டாம் பா ஏதாவது பிரச்சனையாக போகுது என்று தடுத்து நிறுத்துகிறான், பாக்கியம் என் பொண்ணுக்கு என்ன பண்ணீங்க? என்று கேட்க முத்துப்பாண்டி அதான் அவ்வளவு செலவு பண்ணி டாக்டருக்கு படிக்க வச்சோமே அப்புறம் என்ன என்று கேட்க கல்யாணத்துக்கு என்ன பண்ணீங்க என்று கேட்கிறாள்.

மேலும் ஒண்ணுமே பண்ணல, அப்பாவோட சொத்துல பொண்ணுக்கும் சரி பாதி பங்கு இருக்கு.. ஆனால் நீங்க என்ன பண்ணீங்க? நான் கேஸ் போடவா என்று ஷாக் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment