Advertisment

முறை தவறிய காதல் : தோழியை பைத்தியம் ஆக்கிய வில்லி; இது எங்க போய் முடியுமோ!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
KD ANNA AND Ninai

கார்த்திகை தீபம் - அண்ணா - நினைத்தேன் வந்தாய்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

குழந்தைகளுக்காக எழிலை எதிர்த்து சவால் விட்ட சுடர்.. மனோகரி போடும் திட்டம்

Advertisment

நினைத்தேன் வந்தாய் சீரியலில் நேற்றைய எபிசோடில் குழந்தைகள் சாக்லேட் எடுக்க போக இந்து தடுக்க முடியாமல் தவித்த நிலையில் இன்று, இந்த நேரம் பார்த்து சுடர் இங்கு வர இவ கண்ணில் பட கூடாது என மறைந்து கொள்கிறாள். அதன் பிறகு காவியா சாக்லேட்டை கொடுக்க மாட்டேன் என அடம் பிடிக்க கவின் ஜூஸ் பாட்டிலை எடுத்து அடிக்க அது டாக்டர் மீது பட்டு விட எழில் கோபப்பட்டு கவினை அறைய கை ஓங்குகிறான்.

சுடர் ஓடி வந்து எழிலை கையை பிடித்து சார் அவங்க குழந்தைங்க.. எல்லோரும் உங்களை தான் பாக்குறாங்க என்று சொல்ல எழில் வீட்டுக்கு வாங்க உங்களுக்கு இருக்கு என ஆவேசப்படுகிறான். வீட்டுக்கு வந்ததும் குழந்தைகளை பிடித்து திட்ட மனோகரி நீ நினைக்கிற மாதிரி பசங்க வளரணும்னா அதுக்கு ஒரே வழி தான் இருக்கு, அது ஹாஸ்டலில் சேர்க்கிறது தான் என்று சொல்ல எல்லோரும் ஷாக் ஆகின்றனர்.

சுடர் எந்த குழந்தைகளால் உங்க பேரு கெட்டு போச்சோ அதே குழந்தைகளால் உங்க பேரை காப்பாத்துகிறேன். பசங்க ஸ்கூல்ல நடக்கிற போட்டியில் அவங்களை கலந்துக்க வச்சி ஜெயிக்க வைக்கிறேன் என்று சொல்கிறாள். எதிலும் இதை சவாலாக எடுத்து அப்படி உன்னால பண்ண முடியலனா நீ இந்த வீட்டை விட்டு வெளியே போகணும் என்று கண்டிஷன் போடுகிறான்.

மனோகரி இதை நடக்க விட கூடாது. இந்த சுடரை வீட்டை விட்டு வெளியே துரத்தணும் என பிளான் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சண்முகத்தை ஜெயிலுக்குள் தள்ள சௌந்தரபாண்டி போட்ட திட்டம்.. நடக்க போவது என்ன?

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சண்முகத்தை தோற்கடிக்க வேண்டும் என்று ஒற்றை காலில் பூஜை செய்ய தொடங்கிய நிலையில் இன்று, சௌந்தரபாண்டி பூஜை செய்வதை பார்த்து இசக்கி, பாக்கியம் ஆகியோர் கலாய்க்க தொடங்குகின்றனர். சிவபாலன் உன்னால் மாமாவை ஒன்னும் செய்ய முடியாது என்று சொல்ல சௌந்தரபாண்டி கோபப்பட்டு அவனை அடிக்க துரத்த இசக்கி மாமா காலை கீழே ஊனிட்டீங்க என்று கலாய்க்கிறாள். அப்படியே மறுபக்கம் சண்முகம் தூங்கி கொண்டிருக்க பரணி அவன் பக்கத்தில் உட்கார்ந்து தனது மனதில் இருக்கும் காதலை பேசுகிறாள்.

சண்முகம் தூங்குவது போல் நடித்து பேசுவது அனைத்தையும் கேட்கிறான். அடுத்த நாள் காலையில் சௌந்தரபாண்டி சண்முகத்தை தேர்தலில் நிற்க விடாமல் செய்ய என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கிறான். இந்த சமயத்தில் சனியனின் மனைவி போன் செய்து தண்ணீர் வரல என்று சொல்ல சௌந்தரபாண்டி தண்ணீர் டேக்கை மூடி அதில் விஷத்தை கலந்து சண்முகம் கையால் திறக்க வைத்து அவன் மீது விஷம் கலந்ததாக பழியை போட்டு ஜெயிலுக்குள் தள்ளி தேர்தலில் நிற்க விடாமல் செய்யலாம் என்று திட்டம் தீட்டுகிறார்.

அடுத்து செய்ய வேண்டிய ஏற்பாடுகளை செய்து முடித்த பிறகு சனியனின் மனைவி சண்முகத்திற்கு போன் செய்து தண்ணீர் வரல, வீராச்சாமி போனை எடுக்கல. நீங்க தான் எதாவது பண்ணனும் என்று சொன்னதும் சண்முகம் தண்ணீர் திறந்து விட கிளம்ப பரணி வேண்டாம் எனக்கு ஏதோ தப்பா தோணுது என்று சொல்கிறாள். சண்முகம் அதெல்லாம் ஒன்னும் இல்ல புள்ள என்று சொல்லி தண்ணீர் திறக்க கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரம்யா செய்த சதி.. பைத்தியமாகும் தீபா, கார்த்திக் செய்ய போவது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கம்பெனியில் கார்த்திக் ரம்யா பெயர் சேர்த்து எழுதப்பட்டு இருந்ததை பார்த்து ரம்யா கோபப்பட்ட நிலையில் இன்று, ரம்யா யார் இப்படி எழுதினது என்று சத்தம் போட எல்லாரும் நாங்க இல்ல என்று சொல்கின்றனர், பிறகு வேலையை பாருங்க போங்க என்று துரத்தி விட்டு கார்த்திக்கிடம் சாரி என்று கேட்க அவன் நான் எதுவும் தப்பா எடுத்துக்கல என்று சொல்கிறான். 

அடுத்து ரம்யா சுவற்றில் இப்படி எழுதியவனை கூப்பிட்டு அவனுக்கு பணத்தை கொடுத்து இந்த உன்னுடைய செட்டில்மென்ட் இனிமே உனக்கு இங்க வேலை இல்ல என்று துரத்த அவன் நீங்க சொல்லி தானே மேடம் அப்படி எழுதினேன் என்று கேட்க நீ எதிர்பார்த்ததை விட இதுல நிறைய பணம் இருக்கு. இனிமே நீ இங்க இருந்தா நல்லது இல்ல என்று அனுப்பி வைக்கிறாள்.

அதனை தொடர்ந்து கார்த்திக் தீபாவுடன் ஹாஸ்பிடல் வர அப்போது தீபாவை குத்த வந்த ரவுடி மாட்ட கார்த்திக் அவனது துரத்தி செல்கிறான், தப்பி வந்த ரவுடி ரம்யாவுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்ல அவள் உஷாரா இரு, அவன்கிட்ட மாட்டிடாத என்று சொல்கிறாள். பிறகு ரம்யா தீபாவுக்கு போனை போட்டு நலம் விசாரிக்க அவள் என் ஹஸ்பண்ட் கிட்ட பேசு என்று கார்த்திக்கிடம் போனை கொடுக்க கடுப்பாகும் ரம்யா பேசாமல் அமைதியாகவே இருக்க கார்த்திக் லைன்ல தான் இருக்காங்க ஆனால் பேச மாட்றாங்க என்று தீபாவிடம் போனை கொடுக்கிறான்.

பிறகு தீபா பேச ரம்யா எனக்கு வேறொரு கால் வருது.. அப்புறம் பேசுறேன் என்று போனை வைத்து விடுகிறேன் என்று சொல்லி போனை கட் பண்ணி விட்டு ஒரு டேப்லட் குறித்து தேடுகிறாள், பிறகு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்யும் ஒருவரை கூப்பிட்டு அந்த மாத்திரையை வாங்குகிறாள், மாத்திரையை கொண்டு வந்து கொடுத்தவர் பார்த்து யூஸ் பண்ணுங்க.. இது ரொம்ப மோசமான மாத்திரை என்று சொல்லி கிளம்புகிறார்.

அடுத்து பழத்துடன் அபிராமி வீட்டிற்கு வரும் ரம்யா தீபாவுக்கு ஜூஸ் போட்டு கொடுங்க.. நீங்க போடுறீங்களா? இல்ல நானே போடவா என்று கேட்க அபிராமி நானே போட்டு தரேன் என்று ஜூஸ் போட்டு கொண்டு வர நீங்க தீபாவை உட்கார வைங்க நான் குடிக்க வைக்கிறேன் என்று சொல்லி ஜூஸில் மாத்திரையை கலந்து கொடுக்க அதை குடித்த தீபா கொஞ்ச நேரத்தில் எல்லாரிடமும் கோபப்பட்டு பொருட்களை தூக்கி போட்டு சைக்கோ போல் நடந்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment