Advertisment

அண்ணனுக்கு எதிராக தங்கை ஆக்ஷன் : வில்லியிடம் மன்னிப்பு கேட் நாயகன் : ஏன் இப்படி நடக்குது?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
zee tamil anna KP Nv

ஜீ தமிழ் சீரியல்

ரம்யாவிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக்.. மீனாட்சியிடம் சிக்க போகும் ரம்யா?

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமியும் மீனாட்சியும் ரம்யா வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று, மீனாட்சி ரம்யா ரூமுக்குள் செல்ல அங்கு ஆங்கரில் ஒரு சட்டை தொங்குவதை பார்த்து இது அவரோட சட்டையா? உன் காதல் கதையை தீபா சொல்லி இருக்கா என்று கலாய்க்கிறாள். அதன் பிறகு ரம்யா இவர்களுக்கு தெரியாமல் கோவிலில் இருந்து வாங்கி வந்த புடவையை எடுத்து விடுகிறாள், அந்த புடவை இருக்கும் பையிலேயே மீனாட்சியின் பர்ஸ்ஸும் சிக்கி கொள்கிறது.

இதனை தொடர்ந்து அபிராமியும் மீனாட்சியும் புடவையை மறந்து கிளம்பி விடுகின்றனர், கார்த்திக் கோவிலில் தீபாவுக்காக பதிலாக பரிகார பூஜையை முடித்து விட்டு வருகிறான். அப்போது தனது மோதிரத்தை கழட்டி கொடுத்தவரை பார்க்க அவர் மோதிரத்தை ரம்யா திரும்பி வாங்கிட்டாரு, அதன் பிறகு பணத்தை கொடுத்தாங்க என்று சொல்ல கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்து மோதிரத்தை கொடுத்ததற்காக மன்னிப்பு கேட்கிறான்.

ரம்யா உங்க மேல எனக்கு கோபம் இல்ல, அந்த மோதிரம் உங்க கிட்ட இருக்கனும்னு நினைச்சேன் அவ்வளது தான் என்று சொல்கிறாள். நாளைக்கு மோதிரத்தை உங்க கிட்ட திரும்பி கொடுக்கிறேன் என்று சொல்லி போனை வைக்கிறாள். அடுத்து அபிராமிக்கும் மீனாட்சிக்கும் புடவையை மறந்துட்டு வந்த விஷயம் நினைவுக்கு வர மீனாட்சி மட்டும் தனியாக ரம்யா வீட்டிற்கு திரும்பி வருகிறாள்.

இங்கே வீட்டில் ரம்யா கார்த்தியை நினைத்து கொண்டு அந்த புடவையை கட்டி பார்த்து கொண்டிருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அபியின் துணியை கிழித்த மனோகரி.. ஆவேசமான இந்து, அடுத்து நடந்தது என்ன?

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் கவின் கண்ணை மூடி கொட்டி கிடக்கும் பெயிண்டை வைத்து தனது கையால் அம்மா போட்டோவை வரைந்த நிலையில் இன்று, கவின் அம்மாவை வரைந்து இருப்பதை பார்த்து எல்லாரும் ஆச்சரியமடைய எழில் ஓடி போய் அவனை கட்டி பிடித்து முத்தமிட்டு கண் கலங்குகிறான், இதனை தொடர்ந்து எழிலை பார்த்து விடும் டீச்சர் ஒருவர் மீண்டும் மீண்டும் வந்து அவனிடம் பேசி வழிய இதை இந்து பார்த்து விடுகிறாள்.

என் புருஷன் கிட்டயா வழிய வழிய பேசுற என்று கோபப்பட்டு தீபாவை வைத்து டீச்சருக்கு அடி கொடுத்து ஓட விடுகிறாள், அடுத்து அபி டிரஸ் கம்பிட்டேஷனில் கலந்து கொள்ள தயாராகிறாள். இதற்காக செலக்ட் செய்து வைத்திருந்த ட்ரஸ்ஸை மனோகரி கத்தரி வைத்து கிழித்து விடுகிறாள். இதை அஞ்சலி பார்த்து விடுகிறாள். பிறகு அபியின் டிரஸ் கிழிந்து கிடப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியாகின்றனர்.

அஞ்சலி மனோகரி ஆண்ட்டி தான் ட்ரெஸ்ஸ கிழிச்சாங்க, நாம ஜெயிக்க கூடாதுனு தான் இப்படி பண்ணி இருக்காங்க என்று சொல்ல இந்து சுடரிடம் அந்த ட்ரெஸ்ஸை நான் சொல்ற மாதிரி தைக்க சொல்ல சுடரும் அப்படியே தைக்கிறாள். மனோகரி அபி மேடை ஏற மாட்டா, அப்படியே ஏறினாலும் கிழிந்து போன துணியுடன் தான் ஏறுவா என்று சொல்லி கொண்டிருக்க அபி மேடை ஏற எல்லாரும் அவளது ட்ரெஸ்ஸை பார்த்து வாவ் என்று வாயை துறக்கின்றனர்.

இதனால் மனோகரி ஷாக்காகிறாள், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட முத்துப்பாண்டி.. பரணி கொடுத்த ட்விஸ்ட் என்ன?

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகத்தை என்கவுண்டரில் போட்டு தள்ள பிளான் போட முப்பிடாதி மூலமாக பரணிக்கு விஷயம் தெரிய வந்த நிலையில் இன்று, ண்முகம் ஸ்டேஷனலில் வயிறு வலியில் துடிப்பது போல் ட்ராமா போட்டு பொருட்களை தூக்கி போட்டு உடைக்க முத்துப்பாண்டி சாப்பிட என்னடா குடுத்தீங்க என்று கோபப்பட கான்ஸ்டபிள் உங்களுக்கு கொடுத்த டீ தான் கொடுத்தோம் என்று சொல்கின்றனர். அதன் பிறகு சண்முகத்தை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்ல வெளியே கூட்டி வர டி.எஸ்.பி வந்து இறங்கி ஷாக் கொடுக்கிறார், எதுக்கு கைது பண்ணீங்க? எங்க கூட்டிட்டு போறீங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்க முத்துப்பாண்டி குடிநீரில் விஷத்தை கலந்ததுக்காக கைது செய்ததாக சொல்லல் ஆதாரம் இருக்கா என்று கேட்க முத்துப்பாண்டி இல்லை என்று சொல்கிறான்.

பிறகு எதுக்கு விலங்கு மாட்டி இருக்கு, கழட்டு என்று கழட்ட சொல்கிறான். அடுத்து எங்க கூட்டிட்டு போற என்று கேள்வி கேட்க நடுவரிடம் ஒப்படைக்க செல்வதாக சொல்ல ஜட்ஸ் பெயரை கேட்க முத்துப்பாண்டி ஒரு பெயரை சொல்ல அவர் ரிட்டையர் ஆகி ஒரு வருஷம் ஆகுது என்று டி.எஸ்.பி முத்துபாண்டிக்கு ரைடு விடுகிறார். பிறகு பரணி சிசிடிவி ஆதாரத்தை காட்டி சண்முகத்தின் மீது தவறு இல்லை என்று நிரூபிக்க முத்துப்பாண்டி சஸ்பெண்ட் செய்து சண்முகத்தை விடுவிக்கிறார்.

பிறகு ரிலீசான சண்முகம் முத்துபாண்டியை கிண்டல் அடித்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment