மாமனாரை வீழ்த்த தயாராகும் மருமகன் : ஹீரோ வில்லிக்கு வைத்த செக் : ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Anna KD NV

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

பதவியை இழந்து கதறும் முத்துப்பாண்டி.. சௌந்தரபாண்டி எடுத்த முடிவு

அண்ணாசீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி சண்முகத்தை வெளியே கொண்டு வந்து முத்துபாண்டியை சஸ்பெண்ட் செய்ய வைத்த நிலையில் இன்று, முத்துப்பாண்டி சஸ்பெண்ட் ஆகி யூனிபார்மை கழட்டி விட்டு வெளியேற பரணியும் சண்முகமும் ஜெயித்ததை நினைத்து சந்தோசப்படுகின்றனர். வீட்டில் எல்லாரும் சண்முகத்திற்காக காத்திருக்க பரணி ஆட்டோவில் வந்து இறங்க சண்முகத்தை ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்கின்றனர்.

Advertisment

இதையடுத்து பரணி நான் சொன்ன மாதிரி ரெண்டு விஷயத்தையும் செய்து விட்டதாக சொல்கிறாள். மறுபக்கம் வீட்டிற்கு வந்த முத்துப்பாண்டி என் பவர் எல்லாம் போச்சு என்று அழுது புலம்பி கொண்டிருக்க பாக்கியமும் சிவபாலனும் இவனுக்கு இதெல்லாம் தேவை தான் என்று நக்கல் அடிக்க இசக்கி அவனை பார்த்து வருத்தப்படுகிறாள். இசக்கி அவனை நெருங்க முயற்சிக்க பாக்கியம் நீ வா என்று அழைத்து சென்று விடுகிறாள்.

அதன் பிறகு சௌந்தரபாண்டி என்ன இருந்தாலும் தர்மகத்தா பதவியை விட்டுட கூடாது என்று சொல்ல, முத்துப்பாண்டி எல்லாம் எதுவும் பண்ண முடியாது என்று கோபபடுகிறான். பாண்டியம்மா அவன் அப்படி சொன்னாலும் நாம அமைதியாக இருக்க கூடாது. அந்த சண்முகம் ஜெயித்த நம்ம ரெண்டு பேருக்கு தான் பிரச்சனை என்று சொல்கிறாள்.

இதையடுத்து பஞ்சாயத்துக்கு வரும் சௌந்தரபாண்டி தர்மக்கத்தா தேர்தலில் நான் நின்னா என்ன? என் மாப்பிள்ளை நின்னா என்ன? ரெண்டு பேரும் ஒரே குடும்பம் தானே.. ஒரு கடையை வச்சிட்டு பார்த்திருந்த என் மாப்பிளையை பிரசிடெண்ட் ஆக்கிடீங்க, இப்போ தர்மகத்தாவும் ஆகிட்டா அவரால் எல்லா பொறுப்பையும் எப்படி பார்க்க முடியும். அதனால் நானே தர்மகத்தாவாக இருக்கேன் என்று டிராமா போடுகிறார்.

Advertisment
Advertisements

இதை கேட்ட சண்முகம் உங்களுக்கு வயசாகிடுச்சு மாமா.. அதனால் நீங்க ஒய்வு எடுங்க.. எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன் என்று பதிலடி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பெங்களூர் போக பிளான் போட்ட ரம்யா.. தீபாவால் கார்த்திக் கொடுத்த ஷாக்

கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மீனாட்சி மறந்துவைத்து விட்டு வந்த புடவை எடுப்பதற்காக ரம்யா வீட்டிற்கு திரும்பிய நிலையில் இன்று, ரம்யா அவர்கள் விட்டுச் சென்ற புடவை எடுத்து கட்டி பார்த்துக் கொண்டிருக்க மீனாட்சி காலிங் பெல் அடித்ததும் அதை கவனித்த ரம்யா புடவையை எடுத்து வைத்து மீனாட்சியிடம் கொடுத்து அனுப்புகிறாள். கூடவே மீனாட்சி ரம்யா கார்த்திக் வைத்திருந்த சீதாராமன் சிலையையும் கொண்டு செல்கிறார்.

இதை அடுத்து வீட்டுக்கு வந்த மீனாட்சி அந்த சிலையை தீபாவிடம் கொடுப்பதற்காக ரம்யாவிடம் சொல்லாமலே கொண்டு வந்ததாக சொல்கிறார்.இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வரும் கார்த்திக் ரம்யாவுடன் பெங்களூரு செல்வதாக சொல்ல தீபா பொசசிவ்வில் கோபப்படுகிறாள். இதைப் புரிந்து கொண்ட கார்த்திகை இங்கிருந்து நகர்ந்து வருகிறான். மறுபக்கம் ரம்யா பெங்களூருக்கு கிளம்ப தயாராக இருக்க டிரைவரையும் வேண்டாம் என்று சொல்கிறாள்.

கார்த்தியே காரை ஓட்டுவான் எனவும் கணக்கு போட அங்கு வந்த கார்த்தி என்ன தப்பா நினைச்சுக்காதீங்க.. என்னால உங்க கூட பெங்களூரு வர முடியாது என்னுடைய மனைவிக்கு உடம்பு சரியில்ல இப்ப நான் அங்க கூட இருக்கணும் என்று சொல்ல ரம்யா வேறு வழி என்று ஓகே சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கண் கலங்க வைத்த குழந்தைகள்.. சுடருக்கு நன்றி சொன்ன எழில்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபி மேடை ஏறி அசத்த மனோகரி அதிர்ச்சியான நிலையில் இன்று, அபி ஜெயித்ததை பார்த்து எழிலும் சந்தோஷப்படுகிறான், இந்த நேரத்தில் அஞ்சலி காணாமல் போய் விட அவளை தேட மைக் டெஸ்டில் ஒன் டூ த்ரீ என்று மைக்கில் சொல்கிறாள், அதன் பிறகு அஞ்சலி பெஸ்ட் ஸ்டுடென்ட்டாக தேர்வாக எழில் மேலும் சந்தோஷப்படுகிறான். 

இதையடுத்து எழில் கையால் அஞ்சலிக்கு விருது கொடுக்கிறான், அதன் பிறகு சுடர் ஒரு டைரியை கொடுத்து படிக்க சொல்ல அதில் குழந்தைகள் எழிலை பெஸ்ட் அப்பாவாக எழுதி இருக்க அதை பார்த்து எழில் கண் கலங்குகிறான், மேலும் சந்தோசப்படுகிறான்.

இதை தொடர்ந்து சுடரிடம் என் குழந்தைக்குள்ள இவ்வளவு திறமை இருக்கா.. இதையெல்லாம் வெளியே கொண்டு வர நீ தான் காரணம் என்று நன்றி சொல்கிறான், பிறகு இவர்கள் வீட்டிற்கு வர குழந்தைகள் இனிமே எங்களை ஹாஸ்டலுக்கு அனுப்ப மாட்டீங்க தானே என்று கேட்க எழில் இல்ல அனுப்ப மாட்டேன், எப்பவும் எங்க கூட தான் இருப்பீங்க என்று சொல்ல குழந்தைகள் சந்தோசப்படுகின்றனர்.

அப்போ சுடரையும் வீட்டை விட்டு அனுப்ப மாட்டீங்க தானே என்று கேள்வி கேட்கின்றனர். இப்படியான நிலையில டுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: