Advertisment

பதவிக்காக மகளை கடத்திய வில்லன் : குடும்பத்தை இணைப்பாரா ஹீரோ : ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
zee tamil Serial

ஜீ தமிழ் சீரியல்

அபிராமியை அலறவிட்ட போன் கால்.. கார்த்திக் கொடுத்த வாக்கு

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவிடம் உங்க பிரண்டு அம்முவை வர சொல்லுங்க நேர்ல பார்க்கலாம் என்று சொல்லிய நிலையில் இன்று, வீட்டில் உட்கார்ந்து இருக்க அப்போது திடீரென அவருக்கு ஒரு போன் கால் வர அந்த போனை பார்த்து பயந்துட்டு போன எடுக்கிறார். அபிராமியின் அம்மா போனில் பேச அவர் அருணாச்சலத்துக்கு 60 வயசு ஆகப்போகுது. அதனால உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.

உங்க அப்பா ஊர்ல இல்ல அதனால நானே இந்த கல்யாணத்தை முன்னே நின்னு நடத்தி வைக்க போறேன் என்று சொல்கிறார். அபிராமி எதுக்கு மா அதெல்லாம்..? இப்போதான் வீடு மாதிரி பால் காய்ச்சி இருக்கும் அதனால இதெல்லாம் வேண்டாம் என்று சொல்ல அபிராமி நம்ம நீ கார்த்திக் கிட்ட போனை கொடு என்று அதட்டுகிறார். பிறகு கார்த்திக் ஃபோனை வாங்கி பேச அவரிடம் உங்க அம்மா அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் என்று சொல்ல கார்த்திக் பண்ணிடலாம் உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் நான் செய்கிறேன் என்று சொல்கிறான்.

பிறகு அபிராமி கார்த்தி இடம் எதுக்கு சம்மதம் சொன்ன? இப்ப இருக்கிற நிலைமையில இதெல்லாம் தேவையா மீனாட்சி வெளியே இருக்கா ஐஸ்வர்யா இந்த வீட்ல இல்ல அப்படி இருக்கும்போது நீயும் தீபாவை மட்டும் தான் எங்க கால்ல ஜோடியாக இருந்து ஆசீர்வாதம் வாங்குவீங்க. பையன சரியா வளக்கல கூட்டிட்டு வந்த மருமகள் நல்லவளா இல்ல என்று ஊர் உலகம் பேசறதுக்கா என்று வருத்தப்படுகிறார். பிறகு கார்த்திக் நானும் தீபாவும் ஜோடியாக ஒரு காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குற மாதிரி அருண் ஐஸ்வர்யாவும், ஆனந்த் மீனாட்சியும் உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்குவாங்க என்று வாக்கு கொடுக்கிறான்.

அபிராமி நீ என்னமோ சொல்ற நான் இதை ஃபங்ஷன் வேண்டாம் என்று சொல்லலாம்னு தான் இருந்தேன் ஆனா இப்போ நீ சொல்லவே நடக்கிறது நடக்கட்டும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடத்தப்பட்ட பரணி.. வாயை விட்டு மாட்டிய சௌந்தரபாண்டி, சண்முகம் செய்யப் போவது என்ன?

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி ஏகேஎஸ் அண்ணாச்சியை சந்தித்து பரணியை கடத்த சொல்லிய நிலையில் இன்று சௌந்தரபாண்டி சொன்னதைக் கேட்டு ஏ.கே.எஸ்.அண்ணாச்சி உங்க பொண்ணு பரணியை கடத்தணுமா என்று அதிர்ச்சியோடு கேட்க சௌந்தரபாண்டி ஆமா என்று சொல்ல இதை கேட்க செல்வம் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பரணியை கடத்த திட்டமிடுகிறான்.

இதையடுத்து பரணி கிளினிக்கில் கோபமாக உட்கார்ந்து இருக்க அங்கு வந்த சண்முகம் நான் பேசினது தப்பு தான் என்று மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு கூப்பிட பரணி நீ கூப்பிட்டதும் நான் வந்துவிடணுமா என்று கோபப்படுகிறாள். ஒரு முத்தம் கொடு என்று பரணி சண்முகத்துடன் கேட்க சண்முகம் இங்கே எப்படி முடியாது என்று சொல்ல பரணி அப்படின்னா வரமுடியாது என்று ரூமுக்குள் சென்று கதவை சாற்றிக் கொள்ள பின்பக்கமாக வந்த செல்வத்தின் ஆட்கள் பரணியை கடத்திச் செல்கின்றனர்.

பிறகு சண்முகம் ரூமுக்குள் வந்து பார்க்க பரணி அப்பா வீட்டுக்கு போயிட்டு நினைத்துக் கொண்டு வீடு திரும்புகிறான். பிறகு பாக்கியமும் இசக்கியும் சண்முகம் வீட்டுக்கு வந்து பரணி கேட்க பரணி அங்கதானே வந்தா என்று சொல்ல அவ அங்க வரல என்று சொன்னதும் சண்முகம் அதிர்ச்சி அடைகிறான். மறுபக்கம் செல்வம் பரணி கடத்திச் சென்று ஒரு குடோனுக்குள் கட்டி வைக்க பரணி என் புருஷன் மட்டும் வந்தா சும்மா விட மாட்டான், எங்க முத்துப்பாண்டி வந்தா உன்னை சுட்டு தள்ளிடுவான் என்று சொல்ல கடத்த சொன்னது உங்க அப்பன் சௌந்தரபாண்டி தான் என்று ஷாக் கொடுக்கிறான் செல்வம்.

மேலும் கல்யாணமானத்திலிருந்து உனக்கும் சண்முகத்துக்கும் ஃபஸ்ட் நைட் நடக்கலனு கேள்விப்பட்டேன் நான் இன்னிக்கி நடத்திடுறேன் தப்பாக பேசி பரணியை நெருங்குகிறான். இங்கே சண்முகம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பரணியை காணவில்லை என்று சொல்ல இன்ஸ்பெக்டர் ஏற்கனவே சௌந்தரபாண்டி வந்து கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரு என்று சொல்கிறார். பரணி காணாமல் போன விஷயம் எங்களுக்கே இப்பதான் தெரியும் அப்படி இருக்கும் போது சௌந்தரபாண்டிக்கு எப்படி தெரிந்தது? இதில் ஏதோ திட்டம் இருக்கு, முதலில் பரணியை கண்டுபிடிக்க வேண்டும் என முடிவெடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எழில் கொடுத்த புடவையால் கோபமான இந்து.. ஷாக் கொடுத்த சுடர்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சுடர் மனோகரியை கூட்டி சென்று புடவை வாங்க அவள் தனக்கென்று ஆசையாக புடவையை எடுக்க கடைசியில் அதை சுடருக்கு கொடுக்க மனோகரி அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று, எழில் சுடருக்கு கூட வாங்கிக் கொடுப்பதை பார்த்த இந்துவும் கடுப்பாகிறாள். தீபாவிடம் பேசி கிளம்பி கொண்டிருக்க திடீரென இந்து அங்கு வந்து விடுகிறாள்.

என்னக்கா கோவமா இருக்கீங்களா என்று கேட்டு புடவை எடுத்து நீட்டுகிறாள். இந்தப் புடவை உங்களுக்குத்தான் சரணம் நீங்கதான் எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்ல இந்து புடவை வாங்கினால் தான் ஒரு பேய் என்பது தெரிந்து விடும் என்பதால் அதை நீயே வச்சுக்கோ எல்லாத்துக்கும் நீயும் தான் காரணம் என்று சொல்கிறாள். இதையடுத்து சுடரை பார்க்க அவரது அப்பா வீட்டுக்கு வர இந்து அவரைப் பார்க்க அவரது கண்ணுக்கு இந்து தெரிவது போலவே தோன்றுகிறது.

இது எனக்கு சுடர் வெளியே வர அப்பா சுடரிடம் பேசிக் கொண்டிருக்க குழந்தைகள் வெளியே வந்து தாத்தா நாங்க உங்ககிட்ட பேசியிருக்கோம் என்று சுடரை காப்பாற்றிய விஷயத்தில் சொல்ல அவர் நன்றி கூறுகிறார். கனகவல்லி நீங்கள் போய் விளையாடுங்க அவங்க தனியா பேசட்டும் என்று குழந்தைகளை அனுப்பி விட அப்பா சுடரிடம் உங்க அக்கா சென்னைல தான் இருக்கா அந்த லேடி மீட் பண்ண வர்றதா சொல்லி இருக்காங்க என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment