Advertisment

அம்மாவுக்கு ஆப்ரேஷன்: கண்ணீருடன் தாலியை கழற்றிய மருமகள்; ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்ற வரும் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடுகள்

author-image
WebDesk
New Update
zee tamil serial 155

ஜீ தமிழ், அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தாலியை கழட்டிய தீபா.. கண்ணீருடன் கையெழுத்து போட்ட கார்த்திக், ஹாஸ்பிடலில் நடந்தது என்ன?

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி உயிர் பிழைக்க 20% மட்டுமே வாய்ப்பிருப்பதாக டாக்டர் அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று, போலீசில் சிக்கிய ஐஸ்வர்யா நான் பேசியது அந்த ரியா இல்ல என்று சொல்லி வீடியோ கால் செய்து வேறொரு பெண்ணை காட்டி தப்பித்து விடுகிறாள். இதனை தொடர்ந்து அபிராமியை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்ல அருணாச்சலத்திடம் கையெழுத்து கேட்க அவர் நான் போட மாட்டேன், அவ பிழைத்து வரலைனா கடைசி வரைக்கும் நான் குற்ற உணச்சியிலேயே செத்து போய்டுவேன் என்று உடைந்து அழுகிறார்.

இதையடுத்து அருணிடம் கொடுக்க அவனும் கையெழுத்து போட தயங்க ஆனந்தும் அப்படியே சொல்ல கார்த்திக் கண்ணீருடன் கையெழுத்து போட அபிராமிக்கு 36 மணி நேரம் நடக்க உள்ள ஆபரேஷனுக்கான முதற்கட்ட பரிசோதனைகள் தொடங்குகிறது. எல்லாரும் அப்படியே உடைந்து போய் உட்கார்ந்திருக்க ஐஸ்வர்யா நைசாக நழுவி வெளியே வந்து ஒரு ஓட்டலுக்கு சென்று பரோட்டா, சிக்கன் என்று விதவிதமாக ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருக்க அருண் அங்கு வர இவன் நம்மள பார்த்தா பெரிய பிரச்னையாகிடுமே என்று டேபிளுக்கு அடியில் ஒளிந்து கொள்கிறாள்.

அருண் ஓட்டலில் தண்ணீர் கேட்க உள்ள வந்து குடிங்க என்று சொல்லி கூப்பிட ஐஸ்வர்யா டேபிள் அருகே வந்து தண்ணீர் குடிக்க ஐஸ்வர்யா மறைந்தபடியே இருக்க ஒரு கட்டத்தில் அவளை பார்த்து விட அருண் ஐஸ்வர்யாவை பிடித்து திட்டி விடுகிறான். பிறகு ஹாஸ்பிடலில் முதற்கட்ட பரிசோதனைகள் முடிந்து அபிராமியை ஆபரேஷனுக்கு அழைத்து செல்ல ஆளாளுக்கு அபிராமிக்கு ஆறுதல் சொல்ல தீபா கார்த்திக் சாருக்கும் எனக்கும் நடந்த கல்யாணத்தை நீங்க பார்க்கல, நீங்க வெளியே வந்து கார்த்திக் சார் கையால் என் கழுத்தில் தாலி கட்டுறதை பார்க்கணும், பார்ப்பீங்க அது வரைக்கும் மஞ்ச கயிறோடு தான் இருப்பேன் என்று கழுத்தில் இருக்கும் தாலி ஜெயினை கழட்டி வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஒரே டேபிளில் ஒன்றாக சாப்பிடும் எழில், சுடர்.. மாப்பிள்ளையை வைத்து மனோகரி ஆடிய கேம்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் மனோகரி சுடருக்கு விசா ஏற்பாடு செய்ய அது வீட்டிற்கும் வந்த நிலையில் இன்று, இந்த விஷயம் அறிந்த இந்து சுடர் வெளிநாடு போராளா? அவளோட கண்ணுக்கு மட்டும் தானே நான் தெரிவேன், அவ போய்ட்டா என்ன செய்வது என்று வருத்தப்படுகிறாள். பிறகு சுடர் வர இந்து அவளிடம் நீ வெளிநாடு போக போறியா? போகாத என்று பேசி தடுக்க முயற்சி செய்கிறாள்.

அதன் பிறகு குழந்தைகள் நான்கு பேரும் கூட்டு சேர்ந்து சுடர் நம்மளை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டா, அவ வெளிநாடு போய்ட்டா நமக்கு கஷ்டமாக இருக்கும், சுடரை போக விட கூடாது என்று முடிவு செய்கின்றனர், சுடர் வந்ததும் எங்களை விட்டு போயிடாத என்று வருத்தப்படுகின்றனர்.

அடுத்து மனோகரியின் அப்பா கிஷோர் என்பவரை அழைத்து வந்து இவர் தான் மாப்பிள்ளை என்று அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார். அதன் பிறகு எழில், கிஷோர், சுடர், மனோகரி என நான்கு பேரும் ஒரு ரெஸ்ட்டாரெண்ட் கிளம்பி வருகின்றனர். மனோகரியையும் கிஷோரையும் ஒரு டேபிளில் உட்கார வைத்து விட்டு எழிலும் சுடரும் ஒரு டேபிளில் உட்காருகின்றனர்.

எழில் சுடரிடம் நீ என் பசங்கள நல்லபடியாக மாத்திட்ட, உனக்கு என்ன வேணும் கேளு நான் வாங்கி தரேன் என்று சொல்லி சாப்பாட்டை வர வைத்து இருவரும் சாப்பிடுகின்றனர். அடிக்கடி இவர்களை கவனித்தவாறே இருக்கும் மனோகரி இவர்கள் ஒன்றாக சாப்பிடுவதை பார்த்து கடுப்பாகி மாப்பிள்ளை கிஷோர் மீது டீயை எடுத்து கொட்டி விடுகிறாள். அதன் பிறகு எல்லாரும் அப்செட்டாக வீட்டிற்கு வர கனகவல்லி மாப்பிள்ளை கிட்ட பேசுனியா எல்லாம் ஓகே தானே என்று கேட்க மனோகரி அமைதியாக இருக்கிறாள். 

பிறகு அங்கு நடந்த விஷயத்தை சொல்ல மனோகரி அவன் உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு தப்பா பேசினான், அதனால் தான் அப்படி செய்தேன் என்று சொல்ல அனைவரும் ஷாக்காகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மொத்த ஓட்டையும் வாங்கி ஜெயித்து காட்டிய பரணி.. சௌந்தரபாண்டிக்கு ஆப்பு வைத்தது எப்படி?

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் தேர்தல் முடிந்து ஓட்டுக்களை எண்ண தொடங்கிய நிலையில் இன்று, முதல் ஓட்டில் தொடங்கி அடுத்தடுத்த ஓட்டு என்று மொத்தமும் பரணிக்கு விழ சௌந்தரபாண்டி அதிர்ந்து போகிறார், குழந்தையை கடத்திய பிறகு இதெல்லாம் எப்படி நடந்தது என்று குழப்பம் அடைகிறார். இந்த நேரத்தில் சண்முகம் என்னமா எப்படி நடந்ததுனு யோசிக்கிறீர்களா என்று சொல்ல பிளாஷ்கட்டை ஓபன் செய்கிறான்.

சண்முகம் ஆதார் அட்டை எடுக்க போய் வர லேட்டாச்சுல ஏன் தெரியுமா என்று காரணத்தை உடைகிறான். கனியை வைத்து சனியனின் பேரனை அண்ணன் பேட் வாங்கி தருவார் என்று அழைத்து வர வைக்கிறான். அவன் அண்ணா எனக்கு மட்டும் பேட் வாங்கி தாராள என்று சொல்ல வாடா இப்பவே வாங்கி தரேன் என்று அழைத்து செல்கிறான். ஆனால் ஒன்னு நான் போனை உன் கிட்ட கொண்டு வரும் போது ஐயோ அம்மா காப்பாத்துங்கனு கத்தனும். அப்போ தான் வாங்கி தருவேன் என்று சொல்கிறான்.

அவனும் எப்படி கத்துறேன்னு மட்டும் பாருங்க என்று சொல்கிறான். அவனது உடம்பு முழுக்க வெடி மருந்தை கட்டி விட்டு சனியனுக்கு வீடியோ கால் செய்கிறான். பேரன் ஐயோ அம்மானு கத்துறதை பார்த்து சனியன் அதிர்ச்சி அடைய சண்முகம் உங்க கஷ்டடியில் இருக்க எல்லா பிள்ளைகளையும் ரிலீஸ் செய்து உங்க குழந்தைகளை விட்டாச்சு.. எல்லாரும் பரணிக்கு ஓட்டு போடுங்கனு வீடியோ எடுத்து அனுப்பு என்று மிரட்ட சனியனும் அப்படியே செய்தது தெரிய வருகிறது.

இதை கேட்டு சௌந்தரபாண்டி அதிர்ச்சியடைய சண்முகம் குடும்பம் மொத்தமும் சந்தோசப்படுகிறது. கூடிய சீக்கிரம் உங்களை ஜெயிலில் வந்து பார்க்குறோம் என்று மிரட்டி விட்டு கிளம்பி வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment