Advertisment
Presenting Partner
Desktop GIF

இந்த பக்கம் வில்லி, அந்த பக்கம் நாயகி: படையெடுக்கும் போலி சாமியார்கள்; ஜீ தமிழ் சீரியலில் அடுத்து என்ன?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
zee tamil Serial
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஒரே கேள்வி.. செல்வியின் கழுத்தை நெரித்த மனோகரி.. வலை வீசு தேடும் ரவுடிகள்

Advertisment

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் போலி சாமியார் வேடத்தில் வந்த ராமையா மனோகரியை தீ சட்டியை எடுக்க வைத்த நிலையில் இன்று, மனோகரி பரிகாரம் செய்து கஷ்டப்படுவதை சுடரும் நான்கு குழந்தைகளும் பார்த்து சந்தோசப்படுகின்றனர். இதனையடுத்து வீட்டிற்கு வந்த மனோகரி சாப்பிட போக நான்கு குழந்தைகளும் சேர்ந்து நீங்க விரதம், சாப்பிட கூடாது என்று சாப்பாட்டை பிடுங்க சாப்பிட போன மனோகரி கடுப்பாகிறாள்.

அடுத்து மீண்டும் சாமியாராக வரும் ராமையா மனோகரி தலை மேல் கையை தூங்கி கும்பிடு போட்டு கொண்டு துளசி மாடத்தை சுற்ற வேண்டும் என்று சொல்லி சுற்ற விட சுடர் ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க என்று கேட்க அவ என்னை எல்லாம் கொஞ்சம் நஞ்சமா படுத்தினா என்று சொல்கிறார். தூரத்தில் இருந்து இதையெல்லாம் இந்து பார்த்து விடுகிறாள்.

அதன் பிறகு இந்து தீபாவிடம் சுடர் எதுக்கு மனோகரியை அவ்வளவு கஷ்டப்படுத்துறா என்று கேட்க, எனக்கும் அந்த மனோகரி மேல் சந்தேகம் இருக்கு.. அவ நல்லவ மாதிரியே தெரியல என்று சொல்கிறாள், அடுத்து செல்வி சோகமாக உட்கார்ந்திருக்கும் மனோகரியுடம் வந்து எழில் ஐயாவும் இந்துவும் சேர்ந்து வாழ்ந்த 10 வருஷம் நீங்க எங்க போய் இருந்தீங்க என்று கேள்வி கேட்கிறாள். இதனால் பயங்கர கோபமடையும் மனோகரி செல்வி கழுத்தை நெரித்து இது மாதிரி கேள்வி எல்லாம் கேக்க கூடாது என்று வார்னிங் கொடுக்கிறாள்.

அதன் பிறகு நான்கு ரவுடிகள் மனோகரி போட்டோவை காட்டி இவளை பார்த்தீங்களா? என்று விசாரிக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பதவி ஏற்ற பரணி.. சௌந்தரபாண்டி ட்விஸ்ட் கொடுத்த ஷண்முகம், நடந்தது என்ன?

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி பதவியேற்று விழாவில் சௌந்தரபாண்டிக்கு கை, கால் வராததால் கையெழுத்து போட முடியாது என்று முத்துப்பாண்டி சொல்லிய நிலையில் இன்று, சௌந்தரபாண்டி கையெழுத்து போட்டால் தான் பரணி பதவியேற்று கோவில் சொத்துக்களை பார்வையிட முடியும் என்று சொல்ல, சௌந்தரபாண்டி தரப்பு உடம்பு சரியாகும் வரை கையெழுத்து போட முடியாது என்று சொல்கின்றனர்.

சண்முகம் உன் அப்பனை இப்போ எப்படி ஓட விடுறேன் பாரு என்று சொல்ல பரணி உடம்பு முடியாதவரை எதுக்கு இப்படி சொல்ற என்று கேள்வி கேட்க சண்முகம் அவளை தனியாக அழைத்து சென்று சௌந்தரபாண்டு நாடகம் போடும் விஷயத்தை உடைக்கிறான். இதையடுத்து சண்முகம் சௌந்தரபாண்டியால் கையெழுத்து போட முடியலைன்னா என்ன? அவர் ஏற்கனவே கையெழுத்து போட்டு கொடுத்துட்டாரு என்று சொல்ல எல்லாரும் ஷாக் ஆகின்றனர்.

பதவியில் இருப்பவருக்கு உடம்பு முடியாமல் போய்ட்டாள் அவருக்கு பதிலாக அவரது மனைவி கையெழுத்து போடலாம், அதான் என் அத்தை நேத்தே கையெழுத்து போட்டு கொடுத்துட்டாங்க என்று சொல்லபாக்கியம் டாகுமெண்ட்டுடன் வருகிறாள். இதை பார்த்து அதிர்ச்சியாகும் சௌந்தரபாண்டி பக்கவாத நாடகத்தால் எதுவும் செய்ய முடியாமல் இருக்க பரணி தர்மகத்தாவாக பதவி ஏற்கிறாள். இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்துடன் சௌந்தரபாண்டி வீல் சேரில் வெளியே வருகிறார்.

சண்முகம் எதிரே வந்து உங்களை ஓட விடுறேனு சொன்னேனே செய்ய வேண்டாமா என்று கேட்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

போலி சாமியார் சொன்ன பரிகாரம்.. உயிருக்கு வர போகும் ஆபத்து என்ன?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவும் தீபாவும் சாமியாரை பார்க்க வந்த நிலையில் இன்று, சாமியார் உங்க பிரச்சனை சரியாகணும்னா தண்ணீரில் மிதக்கும் பரிகாரம் ஒன்று இருக்கு என்று சொல்ல, தீபா தனக்கு நீச்சலும் தெரியாது, தண்ணீரில் மிதக்கவும் தெரியாது என்கிறாள், ரம்யாவும் என்ன நீங்க இவ்வளவு கஷ்டமானதை பரிகாரம்னு சொல்றீங்க என்று கேட்கிறாள். சாமியார் பீப்பாயில் உட்கார வைத்து தண்ணீரில் மிதக்க விடுவோம். காலையில் இருந்து சூரிய அஸ்தமனம் வரைக்கும் நம்பிக்கையான ஒருவரிடம் பீப்பாயில் கட்டிய கயிறை கொடுத்து விடுவோம்.. இந்த பரிகாரத்தை செய்யலனா நான் சொல்ற மாதிரி தான் நடக்கும் சொல்லி பயம் காட்டுகிறார்.

அடுத்து ஐஸ்வர்யா வீட்டில் உடம்பு முடியாமல் படுத்து இருக்க அருணாச்சலம் அவளை கூப்பிட்டபடி இருக்க ஐஸ்வர்யா அப்படியே படுத்து இருக்கிறாள். அவரும் ரூமுக்குள் வந்து நான் கூப்பிட்டு கொண்டே இருக்கேன், நீ இப்படி படுத்து இருக்க, அங்க அபிராமி ஹாஸ்பிடலில் இருக்கா நீ ஹாயா தூங்கிட்டு இருக்க என்று கோபப்படுகிறார்.

ஐஸ்வர்யா அத்தைக்காக வேண்டிக்கிட்டு அலகு குத்திய விஷயத்தை சொல்ல அருணாச்சலம் இதை முதல்லயே சொல்லி இருக்கலாம்ல என்று மனம் இறங்குகிறார், ஐஸ்வர்யா என்ன விஷயம் என்று கேட்க அருணாச்சலம் பீரோவில் இருந்து பணம் எடுக்கணும் என்று சொல்வதோடு நீ ரெஸ்ட் எடு, நானே எடுத்துகிறேன் என்று சொல்கிறார்.

ஐஸ்வர்யா பணம் என்றதும் நானே எடுத்துகிறேன் என்று சாவியை வாங்கி போய் பீரோவை திறக்க பீரோ முழுவதும் நகையும் பணமுமாக இருப்பதை பார்த்து வாயை பிளக்கிறாள். தனது அம்மாவுக்கு வீடியோ கால் செய்து காட்ட அவள் மொத்தத்தையும் ஆட்டைய போட்டுடலாம் நான் கிளம்பி வரேன் என்று சொல்ல ஐஸ்வர்யா இப்போ எதுவும் செய்ய முடியாது, சந்தேகம் வராத மாதிரி செய்யணும் அதுக்கு ஐடியா சொல்லு என்று கேட்க ராஜேஸ்வரி ஒரு ஐடியா சொல்கிறாள்.

பிறகு ஐஸ்வர்யா பணத்தை அருணாச்சலத்திடம் கொண்டு போய் கொடுக்க அவர் பணத்தை மட்டும் வாங்கி கொண்டு சாவியை மறந்து செல்ல ஐஸ்வர்யா சந்தோசப்படுகிறாள், இந்த நேரம் பார்த்து மீனாட்சி அங்கு வந்து சாவியை கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment