Advertisment

அக்காவை மாட்டிவிட்ட வில்லன்: மாமனார் திருட்டை மருமகன் கண்டுபிடிப்பாரா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா கார்த்திகை தீபம் மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
zee tamil Serial
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அபிராமி வீட்டு சொத்தை ஆட்டைய போட ஐஸ்வர்யா செய்த தில்லாலங்கடித்தனம், அருணுக்கு வந்த சந்தேகம்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்தி போட்டோகிராபரை பார்க்க சென்ற நிலையில் இன்று, கார்த்திக் போட்டோகிராபரை சந்திக்க சென்றபோது ரியாவை பிடிக்க முயற்சி செய்து கடைசியில் முடியாமல் போகிறது. மறுபக்கம் ரம்யா தீபாவிடம் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம் என்று சொல்ல, அத்தைக்காக நான் கண்டிப்பா இதை செஞ்சு தான் ஆகணும் என்று சொல்கிறாள்.

உனக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பதில் சொல்றது என்று ரம்யா கேட்க உடனே தீபா போனை எடுத்து இந்த பரிகாரத்தை நான் விருப்பப்பட்டு தான் செய்கிறேன். இதுல எனக்கு எந்த பிரச்சினையை ஏற்பட்டாலும் அதற்கு நாம் மட்டுமே பொறுப்பு என்று பேச ரம்யா நம்ப ரூட்டு கிளியர் என சந்தோஷப்படுகிறாள். அடுத்ததாக ஐஸ்வர்யா ரூமில் இருக்க அருண் அவளை எழுந்து சென்று கிளம்பி வர சொல்ல, ஐஸ்வர்யா சென்றதும் தலையணை கீழே அச்சு வைத்த சோப்பு இருப்பதை பார்த்து சந்தேகப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பதவியேற்றதும் பகடையை உருட்ட தொடங்கிய பரணி.. முதல் ஆளாக கைதானது யார் தெரியுமா?

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோட்டில் சௌந்தரபாண்டி பரணி பதவியேற்றதால் அடுத்து என்ன செய்வது என யோசிக்க தொடங்கிய நிலையில் இன்று, சௌந்தரபாண்டி அடுத்ததா நகை விஷயத்தை தான் கையில் எடுப்பா.. அதுக்குள்ள நகையை இடமாற்றி ஆக வேண்டும் என்று திட்டம் போட்டு சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து போலீஸ்களுக்கு டீ-ல் மயக்க மருந்தை கலந்து கொடுத்து நகை பெட்டியை எடுத்துச் செல்கின்றனர்.

மறுபக்கம் பதவியேற்ற பரணி கோவில் நகைகளை பரிசோதனை செய்ய அத்தனையும் கவரிங் என தெரிய வருகிறது. இதனால் நகையை சௌந்தரபாண்டி தான் எடுத்திருக்க வேண்டும் என எல்லோரும் சொல்கின்றனர். சௌந்தரபாண்டி என் மேல சந்தேகப்படுகிறீர்களா? என் வீட்டுக்கு வந்து தேடிப் பாருங்க என்று சொல்கிறார். அடுத்ததாக சௌந்தரபாண்டி வீட்டில் தேடுதல் வேட்டை நடத்த, உடனே சௌந்தரபாண்டி அக்கா நகையை நீயா எடுத்த என்று பாண்டியம்மா மீது பழியை போட்டு நாடகம் போடுகிறார். இதையடுத்து பாண்டியம்மா கைது செய்யப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மணக்கோலத்தில் சுடர்.. அஞ்சலி கொடுத்த ஷாக், கடுப்பான மனோகரி

நினைத்தேன் வந்தாய் சீரியலில் வெள்ளிக்கிழமை எபிசோடில் சுடர் குழந்தைகளுக்கு இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் என்று வாக்கு கொடுத்த நிலையில் இன்று, சுடர் தன்னுடைய தோழிக்கு போன் போட்டு போனை ஹேக் பண்ண தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லு என்று விசாரிக்கிறாள். அடுத்ததாக அஞ்சலி சோகமாக வர சுடர் என்னாச்சு என்று கேட்க அஞ்சலி அப்பாவும் மனோகரி ஆண்டியும் கல்யாணம் பண்ணிக்கிறது பிடிக்கல என்று சொல்கிறாள்.

சுடர் அதுதான் இந்த கல்யாணத்தை நடக்க விடமாட்டேன் என்று சொல்லி இருக்கேன்ல என்று ஆறுதல் சொல்ல அஞ்சலி நீ எங்க நாலு பேரையும் நல்லா தானே பாத்துக்குற.. நீயே எங்க அப்பாவ கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்ல சுடர் ஷாக் ஆகிறாள். பிறகு அஞ்சலியை சமாளித்து அனுப்பி வைக்கிறாள்.

அடுத்ததாக சுடர் தூங்கிக் கொண்டிருக்க மணக்கோலத்தில் இருக்கும் அவளுக்கு யாரோ மெட்டி போட்டு விடுவது போல கனவு கண்டு அதிர்ச்சியாகி எழுந்து கொள்கிறாள். மறுநாள் காலையில் இதே கனவை நினைத்துக் கொண்டு கனகவல்லி, செல்வி, ராமையா என யார் கூப்பிடுவதையும் கண்டு கொள்ளாமல் புலம்பியபடி நடந்து செல்கிறாள்.

அடுத்ததாக மனோகரி எழிலுடன் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்த திட்டம் போட குழந்தைகள் இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என தொடர்ந்து இடையூறு செய்து இருவரும் சேர்ந்து போட்டோ எடுக்க விடாமல் செய்கின்றனர். கடைசியாக ஒரே ஒரு குரூப் போட்டோ மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து எல்லோரையும் கூப்பிட சுடரும் குரூப் போட்டோவில் நிற்க வர மனோகரி அவளது காலால் சுடரை தட்டி விட்டு கீழே விழ வைக்க பிளான் போடுகிறாள்.

ஆனால் எதிர்பாராத விதமாக எழில் அவளை தாங்கி பிடித்து என்ன ஆச்சு சுடர் காலில் சுளுக்கு பிடிச்சி இருக்கா என்று ஒவ்வொரு விரலாக பிடித்து சுளுக்கு எடுக்க மனோகரி இதை பார்த்து கடுப்பாகிறாள். சுடருக்கு எழில் நடந்து கொள்வதும். கனவில் வந்ததும் ஒரே மாதிரி இருப்பதால் குழப்பமடைந்து திடீரென காலை இழுத்துக் கொண்டு ஒன்னும் இல்லை என்று சொல்லி விடுகிறாள்.

அடுத்ததாக சுடர் ரூம் பாயை பார்க்க செல்ல அவன் சுடரை பார்த்ததும் எஸ்கேப் ஆக முயற்சி செய்ய ஓடும் போது போனைத் தவற விடுகிறான். அந்த போனை எடுக்கும் சுடர் மனோகரிக்கு போன் போட்டு ஒரு சாஃப்ட்வேர் உதவியுடன் ஆண் குரலில் பேசுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment