Advertisment

சாட்சியை கடத்திய ஆவி; கணவனை கைவிட்ட மனைவி: ஜீ தமிழ் சீரியல் திருப்பங்கள்!

சாட்சியை ஆவி கடத்தியதால், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்,ஃ கணவனை மனைவி தலை மூழ்கிய காட்சி நடந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Nv Nk Anna Anna

அண்ணா - நினைத்தேன் வந்தாய்- நெஞ்சத்தை கிள்ளாதே

சௌந்தரபாண்டியை தலை முழுகிய பாக்கியம்.. ட்விஸ்ட் கொடுத்த முத்துப்பாண்டி, அடுத்து என்ன?

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னாவின் நிச்சயம் நின்று போக சண்முகம் என் அம்மா உத்தமினு இந்த ஊர் முன்னாடி நிரூபித்து காட்டுவேன் என்று சத்தியம் செய்த நிலையில் இன்று, வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் நடந்த விஷயத்துக்காக மன்னிப்பு கேட்க ரத்னா எல்லாம் நடக்கும் போது அமைதியான தானே இருந்தீங்க, இப்போ இங்கே எதுக்கு வந்தீங்க? எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம் என்று சொல்லி வெங்கடேஷை துரத்தி விடுகிறாள். 

மறுபக்கம் சௌந்தரபாண்டி நினைத்ததை சாதித்த சந்தோஷத்தில் இருக்க சனியன் அவனை பாராட்டி பேச, பாக்கியம் வீட்டிற்கு வருவதை பார்த்து பேச்சை அடக்கி கொள்கின்றனர். வீட்டிற்கு வந்தவள் சிவபாலனிடம் ஒரு பாக்கெட் தண்ணீர் எடுத்து வர சொல்லி சௌந்தரபாண்டியிடம் சண்டையிட்டு தலையில் தண்ணீர் ஊற்றி கொண்டு உங்களை இன்னையோட தலை முழுகுகிறேன். 

இனிமே உங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, நான் இந்த வீட்டை விட்டு வெளியே போறேன் என்று கிளம்புகிறாள். இங்கே சண்முகம் வீட்டில் எல்லாரும் சாப்பிடாமல் இருக்க சண்முகம் சாப்பிட கூப்பிட வைகுண்டம் குடித்து விட்டு வீட்டிற்கு வருகிறார். எனக்கு அவனை கொல்றதுக்கு தைரியம் இல்ல. நான் ஒரு கோழை. அதான் குடிச்சிட்டு வந்திருக்கேன் என்று புலம்புகிறார். 

இங்கே பாக்கியம் இசக்கி மற்றும் சிவபாலனுடன் வீட்டை விட்டு வெளியேற எதிரே வந்த முத்துப்பாண்டி பாக்கியத்தை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறான். ஆனால் பாக்கியம் தனது முடிவில் உறுதியாக இருக்க போறதா இருந்தா என்னை தாண்டி போங்க என்று குறுக்கே படுத்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? பாக்கியம் எடுக்க போகும் முடிவு என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எஸ்கேப் ரூம் பாய்.. எழிலிடம் சிக்கிய சுடர், ட்விஸ்ட் வைத்த இந்து

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் ரூம் பாயை பிடித்து கட்டி வைக்க எழில் அவனைப் பார்க்க கிளம்பி வர மனோகரி பதற்றத்துடன் இருந்த நிலையில் இன்று, எழில் சுடர் சொன்ன இடத்திற்கு வர சுடர் வாங்க சார் இங்க தான் இருக்கான் என்று சொல்லி அவனை அழைத்துச் சென்று ரூம் கதவை திறக்க உள்ளே யாரும் இல்லை. இதனால் எழில் சுடர் மீது கோபப்படுகிறான். 

உன்னால எவ்வளவு முக்கியமான வேலை எல்லாம் விட்டுட்டு வந்தேன் தெரியுமா என்று ஆவேசப்படுகிறான். ரூம் பாய் காணாமல் போனதை நினைத்து மனோகரி நிம்மதி அடைகிறாள். அதன் பிறகு அவளது அப்பாவுக்கு போன் போட்டு நீங்கதான் ரூம் பாயை தப்பிக்க வச்சீங்களா என்று கேட்க, அவர் நான் எதுவும் பண்ணல.. எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல மனோகரி குழப்பம் அடைகிறாள். இருந்தாலும் தலை தப்பித்தது சந்தோஷம் என நினைத்து கொள்கிறாள்.

அடுத்ததாக தீபா மற்றும் இந்து என இருவரும் பேசிக் கொண்டிருக்க இங்கு வரும் சுடர் எல்லாம் போச்சு.. எப்படி தப்பிச்சான் அவன் என்று அந்த ரூம் பாய் மீது இருக்கும் கோபத்தில் அங்கிருக்கும் பீரோவில் குத்த பீரோவுக்குள் ரூம் பாய் கட்டி போடப்பட்டு இருப்பது காட்டப்படுகிறது. பிறகு தீபா சுடர் என்ன பண்ணிட்டு இருக்க அது பழைய பீரோ என்று அவளை தடுத்து நிறுத்துகிறாள். அதன் பிறகு பிளாஷ்க்கட்டில் இந்து ஆவி மற்றும் தீபா இருவரும் சேர்ந்து ரூம் பாயை கடத்தியது தெரிய வருகிறது. 

இதையடுத்து குழந்தைகள் நைட் நேரத்தில் இந்துவை நினைத்து வருத்தப்பட இங்கே இந்துவும் குழந்தைகள் ஞாபகமாக இருப்பதாக சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கல்யாணத்தை நிறுத்திய கௌதம்.. மதுமிதா சொன்ன வார்த்தை

நெஞ்சத்தை கிள்ளாதே, சீரியலின் நேற்றைய எபிசோடில் கௌதம் மாயாவுடன் மதுமிதா வீட்டிற்கு கிளம்பி வந்த நிலையில் இன்று, கௌதம் கல்யாணத்துக்கு முன்னாடியே நீ என் தங்கச்சியை அடிப்பியா? எல்லாம் முடிந்து போச்சு. இனிமே இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறான். மதுமிதா என் தம்பி தப்பு பண்ணான் பண்ணலன்னு நான் பேச விரும்பல, ஒரு அண்ணனா நீங்க என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு சம்மதிக்கிறேன் என்று சொல்கிறாள். பிறகு கௌதம் இந்த கல்யாணம் இதோட நின்னு போச்சு என்று சொல்லி கிளம்பி வருகிறான். வழியில் சந்தோஷ் கௌதமை கூல் செய்ய முயற்சி செய்கிறான். 

மாயா மேலயும் தப்பு இருக்க வாய்ப்பு இருக்கே என்று சொல்ல கௌதம் என் தங்கச்சியை நானே அடித்தது இல்ல, அவன் எப்படி அடிக்கலாம் என்று கோபப்படுகிறான். மதுவின் வீட்டில் ரேணுகா ஜீவாவை திட்டி அழுகிறாள். மதுவின் கல்யாணமும் நின்னு போய்டுமோ என்று பயப்படுகிறான். இங்கே மாயாவுக்காக தான் நான் என் கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன். இனி அதுவும் நடக்காது என்று அதிர்ச்சி கொடுக்கிறான். மறுபக்கம் கௌதமின் மாமா சகுந்தலாவிடம் கௌதமுக்கு இந்த கல்யாணம் மட்டும் நடக்கலனா அவ்வளவு தான் என்று சொல்கிறார். 

இதை தொடர்ந்து கௌதம் வீட்டிற்கு வந்ததும் சகுந்தலா அது வேற கல்யாணம், இது வேற கல்யாணம். ரெண்டும் ஒன்னு இல்ல என்று சொல்கிறாள். மறுபக்கம் மதுமிதாவின் குடும்பத்தினர் கூழ் ஊற்ற போவதாக சொல்லி அப்பார்ட்மென்டில் எல்லாருக்கும் அழைப்பு கொடுக்கின்றனர்.  உங்க வீட்டில் என்ன பிரச்சனை? ஒரே சத்தமா இருந்தது.. ஜீவா கல்யாணம் நின்னு போச்சா என்று கேட்க இல்லை என்று சமாளிக்கினறனர்.

அவர்கள் எல்லாம் மதுமிதா ஜாதகத்தால் என்று சொல்ல மதுவின் அப்பா அம்மா கோபப்பட்டு திட்டி விடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Serial Rating
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment