Advertisment
Presenting Partner
Desktop GIF

தங்கைகளுக்கு வில்லனாகும் அண்ணன்: முதலிரவு கனவில் சுடர்; திருமணம் நடக்குமா?

ஜீ தமிழின் அண்ணா, நினைத்தேன் வந்தாய் மற்றும் சந்தியா ராகம் சீரியல் குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
zee tamil serial anna NJh

சௌந்தரபாண்டியின் திடீர் முடிவு.. ஷண்முகத்துக்கு அடுத்தடுத்து காத்திருந்த ஷாக்

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சூடாமணி இசக்கியை பார்க்க ஆசைப்பட்டதால் கோவிலுக்கு செல்ல முடிவிடுத்த நிலையில் இன்று, இசக்கி முத்துப்பாண்டி எடுத்து கொடுத்த புடவையை கட்டி வந்து நல்லா இருக்கா என்று கேட்க முத்துபாண்டியும் நன்றாக இருப்பதாக சொல்கிறான். அதே போல் மறுபக்கம் சூடாமணி வைகுண்டம் எடுத்து கொடுத்து புடவையை கட்டி வர அதை பார்த்து வைகுண்டம் சந்தோசப்படுகிறார்.

சூடாமணி முதல் ஆளாக கோவிலுக்கு ரெடியாகி இருப்பதை பார்த்து தங்கைகள் அண்ணன் கோவிலுக்கு கூப்பிட்டா போக கூடாது என்று முடிவெடுக்கின்றனர், பரணி இதை பார்த்து விடுகிறாள்.  இங்கே சௌந்தராண்டி நானும் உங்களோட கோவிலுக்கு வரேன் என்று சொல்கிறார். அடுத்து சூடாமணி தங்கச்சிகளையும் கோவிலுக்கு கூப்பிடு என்று சொல்ல சண்முகம் வேண்டாம் என்று சொல்ல பரணி நீ போய் கூப்பிடு என்று சொல்கிறாள்.

சண்முகம் புரியாமல் பேசாத என்று சொல்ல நீ கூப்பிட்டாலும் அவங்க வர மாட்டாங்க என்று சொல்கிறாள். பிறகு சண்முகம் கூப்பிட பேசியது போலவே வரவில்லை என்று சொல்லி விடுகின்றனர்.  பிறகு சண்முகம், சூடாமணி, பரணி, வைகுண்டம் ஆகியோர் கிளம்ப இசக்கி போன் செய்து சௌந்தரபாண்டி மாமாவும் வராரு என்று சொல்ல ஷாக்காகிறான்.  பின்னாடி திரும்பி பார்க்க தங்கைகளும் தயாராகி வந்து ஷாக் கொடுக்கின்றனர்.

அடுத்து இரண்டு குடும்பமும் கோவிலுக்கு கிளம்பி வருகின்றனர். ஒரு பக்கம் வைகுண்டம் சூடாமணியை அழைத்து சென்று பூ வாங்கி தலையில் வைத்து விட அதே இடத்தில் இன்னொரு பக்கம் முத்துப்பாண்டி இசக்கிக்கு பூ வாங்கி கொடுக்க பாக்கியம் தலையில் வைத்து விட சொல்ல முத்துபாண்டியும் வைத்து விடுகிறான். சௌந்தரபாண்டியும் சனியனும் கோவிலுக்குள் வர ஒருத்தரும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மனோகரிக்கு நோஸ்கட் கொடுத்த குழந்தைகள்.. சுடருக்கு வந்த முதலிரவு கனவு 

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் ராமையா வீட்டை விட்டு கிளம்ப குழந்தைகளும் எழிலும் சேர்ந்து தடுத்து நிறுத்த முயற்சி செய்த நிலையில் இன்று, எழிலும் உங்க மேல தான் எந்த தப்பும் இல்லனு தெரிஞ்சிடுச்சுல இனிமே இந்த மாதிரி நடக்காது என்று மன்னிப்பு கேட்க ராமையா தனது முடிவை கை விடுகிறார். இதையடுத்து சுடர் தூங்கி கொண்டிருக்க அவளுக்கும் எழிலுக்கும் முதலிரவு ஏற்பாடு நடித்திருந்து போல் கனவு கண்டு அலறி எழுகிறாள்.

அடுத்து குழந்தைகள் நான்கு பேரும் எழுந்து உட்கார்ந்து கொண்டிருக்க அங்கு வந்த மனோகரி என்ன ஸ்கூல் கிளம்பாமல் உட்கார்ந்துட்டு இருக்கீங்க என்று சத்தம் போடுகிறாள். உடனே குழந்தைகள் இன்னைக்கு ஸ்கூல் லீவ் ஆண்ட்டி என்று சொல்ல கல்யாணம் ஆன பிறகு ஆண்டினு கூப்பிட கூடாது, அம்மானு தான் கூப்பிடனும் என்று சொல்ல குழந்தைகள் முடியாது என்று சொல்ல அவள் சுடரை திட்ட கிளம்புகிறாள். 

அடுத்து குழந்தைகள் சுடர் வந்ததும் கல்யாணத்தை நிறுத்துறேன்னு சொன்ன, ஒண்ணுமே பண்ணல.. எங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல வாங்க அப்பா கிட்ட சொல்லுங்க என்று கூப்பிட சுடர் உங்க அப்பா கிட்டயா நான் வர மாட்டேன் என்று சொல்ல குழந்தைகள் அடம் பிடித்து இழுத்து செல்கின்றனர். இவர்கள் எழில் ரூமுக்கு வருகின்றனர், எழில் என்ன விஷயம் என்று கேட்க சுடர் சொல்ல முடியாமல் தடுமாறுகிறாள். எழில் சுடரிடம் எனக்கு லேட்டாகிடுச்சு போய் பால் கொண்டு வா என்று சொல்ல சுடருக்கு முதலிரவு நியாபகம் வருகிறது. எழில் மீண்டும் போய் எடுதுட்டு வா என்று அனுப்பி வைக்க அவளும் வெளியே வருகிறாள்.

அதன் பிறகு குழந்தைகள் உங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமா? எங்களுக்கு விருப்பம் இல்லை என்று சொல்ல எழில் எனக்கும் விருப்பம் இல்லை. உங்களுக்காக தான் கல்யாணம் செய்து கொள்வதாக சொல்கிறான். இதை கேட்கும் இந்து எனக்கு உங்களை பத்தி தெரியும்.. நான் எப்பவும் உங்க பக்கம் தான் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வாயை விட்டு மாட்டிக் கொண்ட மாயா.. சீனு கொடுத்த அதிர்ச்சி 

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் லிங்கம் மற்றும் புவனேஸ்வரி ரகுராமுக்கு எதிராக கூட்டு சேர்ந்த நிலையில் இன்று, புவனேஸ்வரி தன்னுடைய அண்ணனிடம் தேவைப்படும் வரை கூட கூட்டு சேர்த்துக்குவோம், வேலை முடிந்ததும் கழட்டி விட்டுடலாம் என்று சொல்கிறாள். அதே லிங்கம் தன்னுடைய மனைவியிடமும் இதே வார்த்தையை சொல்கிறாள். 

இதையடுத்து மாயா தனது அம்மா போட்டோவைபார்த்து வணங்கியபடி இருக்கிறாள், அப்போது ஷாரு மாயாவிடம் வந்து சீனு என்கிட்ட சரியாக பேச மாட்டாரு, கல்யாண பொறுப்பெல்லாம் உங்கிட்ட தானே இருக்கு.. நீங்க சொன்னா அவர் கேட்பாரு என்று சொல்கிறாள். அதன் பிறகு மாயாவும் சீனுவிடம் வந்து நீ ஏ ஷாரு கிட்ட பேச மாட்டற? அவளும் எதிர்பார்ப்போடு இருப்பா, நீ அவளிடம் பேசு என்று சொல்லி முதலில் கோபப்படும் சீனு உனக்காக பேசுறேன் என்று சொல்கிறான். 

இதையடுத்து எல்லாரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் போது சீனு ஷாருவிடம் உரிமையாக பேசி அவளுக்கு அவனது கையால் பூ வைத்து விட மாயா இதை பார்த்து பீலாகிறாள். அதன் பிறகு வெளியே போட்டு வரலாம் வா என்று அழைத்து செல்கிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment