Advertisment

மாமியாருக்காக அப்பாவை எதிர்க்கும் மகள்: தோழியின் சூழ்ச்சி தெரியவருமா? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Zee tamil serial143

அண்ணா, கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஆடாத ஆட்டம் போடும் மனோகரிக்கு ஆப்பு வைத்த சுடர்.. அதிரடி கிளப்பும் பரிகார ட்விஸ்ட்

Advertisment

நினைதேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் எழிலுக்கு சாப்பாடு கொடுக்க போன நேரத்தில் கழுத்தில் இருந்து தாலி வந்து கீழே விழுந்த நிலையில் இன்று, சுடர் தாலி வந்து விழுந்ததும் அதிர்ச்சி அடைவதோடு எழில் பார்ப்பதற்குள் அதை மறைத்து சமாளிக்கிறாள், இதனையடுத்து எழில் சாப்பிட்டு முடித்ததும் நான் வரேன் மாப்பிள்ளை சார் என்று கலாய்க்கிறாள்.

அடுத்து எழிலுக்கும் மனோகரிக்கும் ஜாதகம் பார்ப்பதற்காக ஜோதிடர்கள் வீட்டிற்கு வருகின்றனர். முதலில் ஒரு ஜோதிடர் எழிலுக்கும் மனோகரிக்கும் 10 பொருத்தமும் பக்காவாக பொருந்துவதாக சொல்ல மனோகரி சந்தோசப்படுகிறாள். இதையடுத்து இரண்டாவதாக மாறுவேடத்தில் ஜோசியராக வந்துள்ள ராமையா இந்த இரண்டு பேருக்கும் அவ்வளவா பொருத்தம் சரியில்ல என்று ஷாக் கொடுக்கிறான்.

மேலும் கல்யாணத்திற்கு முன்னாடி மனோகரி அலகு குத்தி தீ சட்டி எடுக்கணும் என்று சொல்ல குழந்தைகள் ராமையாவை பார்த்து சந்தேகப்பட சுடர் அது ராமையா தான் யார் கிட்டயும் எதுவும் சொல்ல கூடாது என்று சொல்கிறாள். அடுத்து கோவிலில் ராமையா ஜோசியர் வேடத்தில் மனோகரிக்கு அலகு குத்தி தீ சட்டி எடுக்க வைக்க மனோகரி என்ன இப்படியெல்லாம் நடக்குது என்று கடுப்பாகிறாள்.

அடுத்த காட்சியில் இங்கு நடப்பதையெல்லாம் சுடரும் நான்கும் குழந்தைகளும் தூரத்தில் பார்த்து சந்தோசப்படுகின்றனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பதவி ஏற்க வந்த பரணி எடுத்த சபதம்.. சௌந்திரபாண்டிக்கு ஆப்பு மேல ஆப்பு

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணியும் சண்முகமும் சௌந்தரபாண்டியை பதவியேற்பு விழாவுக்கு அழைத்து செல்ல முடிவெடுத்த நிலையில் இன்று, சௌந்தரபாண்டி எனக்கு உடம்பு முடியல, வர மாட்டேன் என்று சொல்ல சண்முகம் வீல் சேரை கொண்டு வந்து சௌந்தரபாண்டியை உட்கார வைத்து அழைத்து செல்கிறான். 

அடுத்ததாக சௌந்தரபாண்டியுடன் சண்முகம் கோவிலுக்கு வர ஒருத்தரும் சௌந்தரபாண்டியை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் சௌந்தரபாண்டி நான் தர்மகத்தாவாக இருந்த போது எல்லாரும் வாசல் வரைக்கும் வந்து வணக்கத்தை வச்சி கூட்டிட்டு போவாங்க, ஆனால் இப்போ ஒருத்தனும் கண்டுக்க மாட்டுறான் என்று கடுப்பாகிறார்.

மேலும் பரணிக்கு பெரிய வரவேற்பு கொடுத்து எங்க புள்ளைங்க எல்லாம் இன்னைக்கு உயிரோட இருக்க நீங்க தான் காரணம், நீங்க நல்லா இருக்கனும். நீ பதவி ஏற்று கோவில் நிர்வாகத்தை சிறப்பா நடத்தணும் என்று வாழ்த்து சொல்கின்றனர். கோவில் பூசாரி முதலில் உங்க பேருக்கு அர்ச்சனை பண்ணிட்டு அதுக்கு அப்புறம் பதவி ஏற்று கொள்ளுங்கள் என்று சொல்ல பரணி சூடாமணி பெயருக்கு அர்ச்சனை செய்ய சொல்கிறாள்.

இதை கேட்டு அனைவரும் ஷாக் ஆகின்றனர். சூடாமணி ரொம்ப நல்லவங்கனு நான் கூடிய சீக்கிரம் ஆதாரத்தோடு நிரூபித்து காட்டுறேன் என்று சொல்கிறான். அடுத்து கோவிலில் பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் நடக்க ஜெயிலில் சூடாமணி இந்நேரம் என் மருமகள் பதவி ஏற்று இருப்பாள் என்று பரணியை நினைத்து சந்தோசப்பட்டு கொண்டிருக்கிறாள், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

போட்டோகிராபரை சுற்றி வளைத்த அருண், ஆனந்த்.. ரம்யாவுக்கு ஷாக் கொடுத்த சாமியார்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா ரம்யாவுடன் சாமியாரை பார்க்க வந்த நிலையில் இன்று, ரியா ஐஸ்வர்யாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்ட அவள் உன்னை மாட்டி விட நான் போலீசை கூட்டிட்டு வரல என்று சமாளிக்கிறாள். இதையடுத்து போட்டோகிராபர் சுரேஷ் வீடு காட்டப்படுகிறது. சுரேஷ் ரியா அபிராமியை சுட்டு தள்ளிய வீடியோவை பார்த்து பயந்து கொண்டிருக்க ரியா போன் செய்து மரியாதையா அந்த வீடியோவை என்கிட்ட கொடுத்துடு, உனக்கு தேவையான பணத்தை நான் தரேன் என்று மிரட்டுகிறாள். 

அடுத்து போலீசும் சுரேஷை கூப்பிட்டு வார்னிங் கொடுத்து அனுப்ப அடுத்து அருண், ஆனந்த் சுரேஷ் வீட்டை சுற்றி வளைத்து கதவை தட்ட இவர்களை பார்த்த போட்டோகிராபர் இது பெரிய பிரச்சனை போல, இங்க இருந்து எஸ்கேப் ஆகிறது தான் நமக்கு நல்லது என்று பின்பக்கமாக தப்பி ஓட முயற்சி செய்கிறான். அருண், ஆனந்த அவனை துரத்தி பிடிக்க முயற்சி செய்து முடியாமல் விட்டு விடுகின்றனர்.

அடுத்து தீபாவும் ரம்யாவும் ஆசிரமத்திற்கு வருகின்றனர், அங்கு 20 பேர் வெளியே தூங்கி கொண்டிருக்க ஒருவன் வாங்க வாங்க சாமியார் உங்களுக்காக தான் காத்திட்டு இருக்காரு. இந்த சாமியாரை நினைத்த உடனே எல்லாம் பார்க்க முடியாது, யாரை பார்க்கணும் என்பதை அவர் தான் முடிவு பண்ணுவார் என்று ஓவர் பில்டப் கொடுக்கின்றனர். ரம்யாவும் நானும் விசாரிச்சேன், அவரே நம்ம பேர் என்னனு கூட சொல்வாருன்னு கேள்வி பட்டேன் என்று அளந்து விடுகிறாள்.

பிறகு உள்ளே சென்று சாமியாரை சந்திக்க அவர் உங்க பேர் ரம்யா.. உங்க பேர் தீபா என்று பெயரை மாற்றி சொல்ல ரம்யா ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment