Advertisment

மச்சானுக்கு எதிராக புது ப்ளான்... அண்ணியை எதிர்க்கும் கொழுந்தன் : என்ன நடக்கும்? ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, நினைத்தேன் வந்தாய், கார்த்திகை தீபம் ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
zee tamil serial

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

முத்து பாண்டி போடும் புதிய டிராமா.. பாக்கியம் எடுத்த முடிவு

Advertisment

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் கனிக்காக சாப்பிட ஒத்துக்கொண்டு தங்கச்சிகள் அனைவரையும் சாப்பிட சொன்ன நிலையில் இன்று, சண்முகம் தங்கச்சிகளை சாப்பிட வைத்து அவனும் சாப்பிடுகிறான். இருந்தாலும் இங்கே இவன் பயங்கர கோபத்தில் இருக்க மறுப்பக்கம் பாண்டியம்மா இப்போதைக்கு இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க ஒரே வழி இசக்கியை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுதான் என்று சொல்கிறார்.   

பாண்டியம்மாவின் இந்த ஐடியாவை கேட்டு சௌந்தரபாண்டி முத்துப்பாண்டி மறுப்பு தெரிவிக்க, இப்போதைக்கு இந்த பிரச்சனை தீர்க்க இது ஒன்று மட்டும்தான் வழி பாக்கியம் மனசை மாத்தி இசக்கியை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லணும் என்று சொல்ல சௌந்தரபாண்டி ஒப்புக்கொள்கிறார்.   பிறகு பாக்யாவிடம் நீ போய் சண்முகம் வீட்டில் பேசி இசக்கியை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வா என்று சொல்ல சிவபாலன் வாழ வேண்டிய வாழ்க்கை, இசக்கியை இங்க கூட்டிட்டு வந்தா அவ மனசு என்ன பாடு படும் என்று கேட்கிறாள்.

அப்படின்னா பஞ்சாயத்தை கூட்டி இசக்கி கழுத்துல இருக்க தாலியை அறுத்து எறிஞ்சிடலாம் திரும்பவும் உன் புள்ள ரத்னா கழுத்துல தாலி கட்டுறேன்னு அலையட்டும் ரெண்டு பொண்ணோட வாழ்க்கை கெட்டுப் போகட்டும் என்று சொல்கிறான். இதனால் பாக்கியம் இசக்கியை கூட்டிவர சண்முகம் வீட்டிற்கு வருகிறாள். சண்முகம் இல்லாத நிலையில் எல்லோரிடமும் இசக்கிய என் கூட அனுப்புங்க நான் நல்லபடியா பாத்துக்குறேன் என்று சொல்ல அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.

இசக்கியை அனுப்பலன்னா சண்முகம் முத்துப்பாண்டியை கொன்னுட்டு ஜெயிலுக்கு போய் விடுவான். அப்புறம் தங்கச்சிங்களோட நிலைமை என்ன ஆகிறது.? அதுக்கப்புறம் என் புருஷன் சும்மா இருப்பானா? அவன் ஏதாவது பண்ணா எப்படி சமாளிப்பீங்க என்று கேள்வி கேட்கிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அம்மாவின் பாசத்திற்காக ஏங்கிய குழந்தைகள்.. பணமில்லாமல் தவித்த சுடர்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் குழந்தைகள் சுடருடன் மாலுக்கு வர எழில் குழந்தைகள் காணவில்லை என தகவல் அறிந்து தேட தொடங்கிய நிலையில் இன்று, மாலுக்கு வந்த குழந்தைகள் ஐஸ் கிரீம் சாப்பிட ஆசைப்பட சுடர் எல்லாருக்கும் வாங்கி கொடுத்து விட்டு விலையை கேட்க 1500 ருபாய் என்று சொன்னதும் அதிர்ச்சி அடைகிறாள், என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல 60 ரூபாய் தான் இருக்கு என்று சொல்லி தவிக்க கவின் எங்க கிட்ட பணம் இருக்கு என்று எடுத்து கொடுக்கின்றனர்.

அதனை தொடர்ந்து உள்ளே சென்று கேம்ஸ் விளையாடி சந்தோஷமாக இருக்கின்றனர், குழந்தைகள் ஹாப்பியாக இருப்பதை பார்த்து ரசிக்கிறாள் சுடர். மறுப்பக்கம் கனகு போன் செய்து குழந்தைகள் கிடைச்சிட்டாங்களா? இல்லையா என்று விசாரித்து நீ அன்பா இருந்து இருக்கலாம் என்று திட்டுகிறார். இங்கே எல்லாரும் சாப்பிட வர சுடர் காசு இல்லை என்று சொல்ல குழந்தைகள் எங்ககிட்ட இருக்கு என்று விதவிதமாக ஆர்டர் செய்து சாப்பிட தொடங்குகின்றனர்.

அங்கே ஒரு அம்மா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவதை பார்த்த அஞ்சலி அம்மாவை நினைத்து பீல் செய்து சாப்பிடாமல் இருக்க, சுடர் விளையாட்டின் மூலமாக அவளுக்கு அம்மாவாக மாறி சாப்பிட வைக்கிறாள். அடுத்து அபிக்கு அம்மா ஞாபகம் வர எல்லாரும் துணி கடைக்கு செல்கின்றனர். இந்த கடையில் அஞ்சலி காணாமல் போய் விட எல்லாரும் பதற்றம் அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐஸ்வர்யாவிடம் கார்த்திக் கேட்ட கேள்வி.. வீட்டில் வெடித்த பிரச்சனை

கார்த்திகை தீபம் சீரியலில், நேற்று துணிக்கடையில் ஆனந்த் பெண்ணுடன் வந்திருக்க கார்த்திக், மீனாட்சி அதே கடைக்கு வந்த நிலையில் இன்று, ஆனந்த் ஓரிடத்தில் ஒளிந்து கொள்ள கார்த்திக் மீனாட்சியை பார்க்க மீனாட்சி துணி எடுக்க வந்ததாக சொல்ல, அவன் அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டு ஆனந்தை தேடி மேலே செல்ல ஆனந்த் அந்த பெண்ணை கூட்டி கொண்டு வெளியே எஸ்கேப் ஆகி விடுகிறான்.

பிறகு அங்கிருந்து கிளப்பி வீட்டிற்கு வரும் கார்த்திக் ஐஸ்வர்யாவை முறைத்து கொண்டே ரூமுக்கு சென்று என்ன தீபா கல்யாணம் எல்லாம் எப்படி நடந்தது என்று கேட்க அவள் உண்மையை மறைத்து நல்லா நடந்தது என சொல்கிறாள். புடவையை பார்த்து என்ன சொன்னாங்க என்று கேட்க நல்லா இருந்ததாக சொன்னாங்க என்று சமாளிக்கிறாள். எல்லாமே எனக்கு தெரியும் என கார்த்திக் சொன்னதும் தீபா கலங்கி அழுகிறாள்.

இது எப்படி நடந்தது? யார் பண்ணாங்கனு எனக்கு தெரியும் என சொல்லி வெளியே வந்து ஐஸ்வர்யாவை பார்த்து எதுக்கு கடைக்கு வந்தீங்க, எதுக்கு எங்க ரூமுக்கு வந்தீங்க. புடவையை நீங்க தான் மாத்தி வச்சிருப்பீங்கனு எனக்கு தெரியும் என சொல்ல ஐஸ்வர்யா நான் ஒன்னும் பண்ணல என்று சொல்கிறாள். கார்த்திக் ஐஸ்வர்யாவை கேள்வி கேட்டு கொண்டிருக்க அருண் ஐஸ்வர்யாவுக்கு சப்போர்ட் செய்து தீபா உண்மையை மறைத்த விஷயத்தை எடுத்து பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது.

அபிராமி இதுக்கு தான் கார்த்திக்கிட்ட நடந்த விஷயத்தை சொல்லாதேன்னு சொன்னேன் என்று கோபப்பட கார்த்திக் தீபா சொல்லல பெரியம்மா தான் சொன்னாங்க என்று கூறுகிறான்.  ஐஸ்வர்யா பொண்டாட்டியை விட்டு கொடுக்கிறானா பாரு என சொல்ல கார்த்திக் தேவையில்லாமல் பேசாதீங்க என்று சொல்ல மீண்டும் அருணுக்கும் கார்த்திக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. இதனால் கோபமடையும் அபிராமி போதும் நிறுத்துங்க என சத்தம் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment