Advertisment

சொத்தை பிரித்து கேட்கும் மகன்... காணாமல்போகும் மாமியார் : உண்மைக்கு அண்ணாவின் பதில் என்ன?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
Zee tamil Serial News Update12

ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி  புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

காணாமல் போகும் அபிராமி.‌. கார்த்திக் குடும்பத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் ராஜேஸ்வரியால் வெளியே வந்த ஆனந்த் வீட்டுக்கு வந்து சொத்தை பிடிக்க சொல்லி கேட்க இன்று, கார்த்திக் ஆனந்தை அமைதிப்படுத்த, ஆனந்த் சொத்தை பிரிக்க சொல்லி கேட்டதால் அபிராமி மனம் உடைந்து போகிறார். இதனால் அவருக்கு கார்த்திக் ஆறுதல் கூறுகிறார். அதோட அபிராமி தூங்காமல் இருக்க அண்ணாமலை ஆறுதல் சொல்லி ஒரு சால்வையை போத்தி விட்டு தூங்க வைக்கிறார்.

மறுநாள் காலையில் வீடு முழுவதும் தேடியும் அபிராமியை காணாததால் எல்லாரும் பதற்றம் அடைகின்றனர். கார்த்திக் அம்மாவோட போன் வீட்ல தான் இருக்கு ஏதாவது கோவிலுக்கு போய் இருப்பாங்க என்று வீட்டில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்கிறான். மேலும் அபிராமியை தேடி கோவில் கோவிலாக அலைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

சௌந்தரபாண்டி போடும் பிளான்.. கனிக்காக மனம் இறங்கிய சண்முகம்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியம் கனியை பார்க்க கிளம்ப, சௌந்தரபாண்டி கனியின் உண்மையான அப்பா அம்மாவை கூட்டிக் கொண்டு கிளம்பிய நிலையில் இன்று, பாக்கியம் சண்முகம் வீட்டுக்கு கிளம்ப இசக்கி நானும் வரேன் என்று சொல்ல முதலில் நான் சண்முகத்தை சமாதானப்படுத்திட்டு அதுக்கப்புறம் உன்னை கூட்டிட்டு போறேன் என சொல்கிறாள். மேலும் இந்த விஷயம் பாண்டியம்மாவுக்கு தெரியக்கூடாது எனவும் பேசிக் கொள்கின்றனர்.

பிறகு இருவரும் வெளியே கிளம்பி வர பாண்டியம்மா எங்கடி போறீங்க என்று கேட்க அவங்க வீட்ல ஆள் இல்ல எங்ககிட்ட வாங்கி கட்டிக்காத என்று பாண்டியம்மாவுக்கு வார்னிங் கொடுத்து கிளம்புகிறாள் பாக்கியம். மறுபக்கம் கன்னியாகுமரி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து கனியின் அப்பா என் பொண்ணு எவ்வளவு நாளா எங்க இருக்கா என்று கேட்க சௌந்தரபாண்டி 13 வருஷமா அங்கதான் இருக்கா என்று சொல்கிறார்.

13 வருஷமா சொல்லாம இப்ப சொல்றதுக்கான காரணம் என்ன என்று கேட்க கனி இருக்கிறது என் மச்சான் வீடு தான் எனக்கும் அந்த குடும்பத்துக்கும் பகை இருக்கு என்று சொல்லி அவர்களுடன் திருச்செந்தூர் கிளம்பி வருகிறார். இங்கே பாக்கியம் சண்முகம் வீட்டுக்கு வந்து வெளியே நின்று சண்முகம் கூப்பிடாம வீட்டுக்குள்ள வரமாட்டேன் என்று சொல்ல சண்முகம் அவளை கூப்பிட மறுக்க பிறகு எல்லோரும் கூப்பிட சொல்ல வேண்டா வெறுப்பாக கூப்பிடுகிறான்.

இதனால் பாக்கியம் நான் வரமாட்டேன் என்று சொல்ல கனி அண்ணன் அத்தை கூப்பிடு என்று சொன்னதும் கனிக்காக கூப்பிடுகிறான். இதையடுத்து வீட்டுக்குள் வந்த பாக்கியம் கனிக்கு ஆக வேண்டிய வேலைகளை பார்க்கிறாள். சௌந்தரபாண்டியன் கனியின் பெற்றோருடன் திருச்செந்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து இறங்குகிறார்.

முதலில் இங்க போய் அது உங்க பொண்ணு தானே என்பதை உறுதி பண்ணிக்கங்க அதுக்கப்புறம் செய்ய வேண்டியது நான் சொல்றேன் என்று சௌந்திரபாண்டி மீனாட்சியை அனுப்பி வைக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நினைத்தேன் வந்தாய்:

அலறிய அபி.. உயிரை பணயம் வைத்த சுடர், எழிலுக்குள் ஏற்பட்ட மாற்றம்

நினைத்தேன் வந்தாய் சீரியலில் நேற்றைய எபிசோடில் தீம் பார்க்கில் வேலு மற்றும் இருவரும் சந்தித்துக் கொண்ட வேலுவுக்கு எழிலை போலீஸ் ஸ்டேஷனில் பார்த்த விஷயம் ஞாபகத்துக்கு வந்த நிலையில் இன்று, சுடரை தேடி அலைய வேறு பக்கம் இவர்கள் ராட்டினத்தில் சுற்றும் போது அபி சத்தம் போட அதைக் கேட்டு எழில் பதறி அடித்து ஓடி வருகிறான். அதேபோல் சுடரும் பதறி அடித்து ஓடி வர எழில் எதுக்கு கத்துன என்று கேட்கும் போது சும்மா பன்-க்கு என்று சொன்னது சுடர் உயிரை பணயம் வைத்து ஓடி வந்திருக்கா என திட்டுகிறான்.

மேலும் சுடர் குழந்தைகள் மீதும் காட்டும் அக்கறையை பார்த்து எழிலுக்கு அவள் மீது நல்ல அபிப்பிராயம் உருவாக தொடங்குகிறது. இதைப் பார்த்து மனோகரி கடுப்பாகிறாள். அடுத்ததாக எல்லோரும் ரெஸ்டாரண்டில் சாப்பிட போக எழில் குழந்தைகளுக்கு இதை சாப்பிடக்கூடாது அதை சாப்பிடக்கூடாது என்று கண்டிஷன் போட சுடர் எழிலிடம் பேசி அவன் மனதை மாற்றுகிறாள்.

மறுபக்கம் வேலு எழிலை தேடி பிடித்தால் சுடர் பற்றி தெரிந்து விடும் என தீவிரமாக தேடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment