Advertisment

குழந்தையை கடத்தும் பெற்றோர்கள்... அம்மாவை தேடி அலையும் மகன் : அடுத்து என்ன?

ஜீ தமிழில் அதிக TRP புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
zee tamil Anna NV KD

ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக TRP புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

சடலத்தை அடையாளம் காண வந்த கார்த்திக்.. நடந்தது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் டெட் பாடியை பார்த்து அபிராமியா அது என பார்க்க போன நிலையில் இன்று, கார்த்திக் பயங்கர பதற்றத்துடன் டெட் பாடியை பார்க்க அது அபிராமி இல்லை என்று தெரிந்து நிம்மதி அடைகிறான், உடனே வீட்டிற்கு வந்து விஷயத்தை சொல்ல எல்லாரும் சந்தோசப்பட ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் கடுப்பாகின்றனர்.

இதனையடுத்து கார்த்திக் மீண்டும் அபிராமியை தேடி அலையும் போது வழியில் ஒரு பெண்மணி பார்க்க அபிராமியை போலவே நடந்து செல்ல கார்த்திக் அது அம்மா என நினைத்து ஓடி போய் பேச அது அபிராமி இல்லை, வேறு யாரோ என்பது தெரிய வருகிறது. பிறகு மீண்டும் அபிராமியை தேடி செல்ல வழியில் காரின் குறுக்கே கார்த்தி பாட வைத்த துப்புரவு பணியாளர் ராணி வந்து விட கார்த்திக் அவரை காப்பாற்றுகிறான்.

அடுத்து கோவிலுக்கு வரும் கார்த்திக் கடவுளிடம் அபிராமி வேண்டும் என பிராத்தனை செய்கிறான். மேலும் அம்மாவுடனான சிறு வயது நினைவுகளை நினைத்து பார்த்து கண் கலங்குகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

கனியை தூக்கிய ரியல் பெற்றோர்.. மடக்கி பிடித்த சண்முகம், சௌந்தரபாண்டியின் அடுத்த திட்டம் என்ன?

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் கனியின் ரியல் பெற்றோர் ஷண்முகம் இல்லாத நேரத்தில் வீடு புகுந்து கனியை கடத்திய நிலையில் இன்று, கனியை கடத்தி விட்ட தகவல் சண்முகத்துக்கு தெரிய வர கார் எந்த பக்கம் போச்சு என்று விசாரிக்க கன்னியாகுமரி பக்கம் சென்றதாக சொன்னதும் ஷண்முகம் காரை மடக்கி பிடிக்க கிளம்புகிறான். மறுபக்கம் காருக்குள் மீனாட்சி நீ என்னுடைய பொண்ணு, உன் பேரு கனி இல்ல தேன்மொழி என்று சொல்ல கனி கிடையாது நான் கனி தான் என்னை இறக்கி விட்டுடுங்க என்று அடம் பிடிக்கிறாள்.

இதனையடுத்து இவர்கள் திருச்செந்தூர் ஊர் எல்லையை தாண்டும் நேரத்தில் சண்முகம் தன்னுடைய உறவினர்கள் மற்றும் டிராக்ட்ர் டிராக்டராக ஊர் காரர்களுடன் காரை மடக்கி பிடிக்கிறான், கனியை அங்கிருந்து மீட்டு வீட்டுக்கு அழைத்து வருகிறான், கனியை வீட்டிற்குள் அழைத்து செல்ல சொல்ல ரத்னாவும் அவளை உள்ளே கூட்டி செல்கிறாள். மீனாட்சி அவ என் பொண்ணு தேன்மொழி. 13 வருஷமா அவளை துளைத்து விட்டு தேடிட்டு இருக்கோம், அவளை எங்ககிட்ட கொடுத்துங்க என்று சொல்கிறார்.

சண்முகம் அவ என் தங்கச்சி கொடுக்க முடியாது என்று சொல்லி விடுகிறான். இருந்தாலும் அந்த அம்மா சொன்னதை எல்லாம் நினைத்து கலங்கி போய் இருக்க பரணி சண்முகத்துக்கு ஆறுதல் சொல்கிறாள். இருந்தாலும் அந்த அம்மா சொல்றதெல்லாம் உண்மையா இருக்குமோ என்று சொன்னதும் சண்முகம் அப்படியல்லாம் சொல்லாத, அப்படி இருக்க கூடாது என கோபப்படுகிறான்.

ஸ்டேஷனுக்கு வரும் மீனாட்சி அவ என் பொண்ணு தான், என் பொண்ணு இல்லாமல் இந்த ஊரை விட்டு போக மாட்டேன் என்று அடம் பிடிக்க சௌந்தரபாண்டி முத்துபாண்டியிடம் பத்திரக்கடைக்காரர் கெஸ்ட் ஹவுசில் தங்க வைக்க சொல்வதோடு இதுல நாம தலையிட்டு இருக்க விஷயம் வெளியே தெரிய கூடாது எனவும் சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நினைத்தேன் வந்தாய்:

அடுத்தடுத்து நடந்த விபத்து.. சுடரை மடக்கிய பிடிக்க போகும் வேலு

நினைத்தேன் வந்தாய், சீரியலின் நேற்றைய எபிசோடில் கவின் நீச்சல் குளத்தில் தத்தளிக்க அவனை காப்பாற்றிய நிலையில் இன்று, வேலு ஒரு பக்கம் சுடரை தேட கவினை காப்பாற்ற சுடர் நீச்சல் குளத்தில் குதிக்க அவளும் நீச்சல் தெரியாமல் சிக்கி கொள்கிறாள். பிறகு எழில் நீச்சல் குளத்தில் குதித்து இருவரையும் காப்பாற்றுகிறான். சுடர் தண்ணீரை குடித்து மயங்கி கிடக்க எழில் முதலுதவி கொடுத்து அவளை காப்பாற்றுகிறான்.

இதையெல்லாம் பார்த்து மனோகரி மேலும் கோபம் அடைகிறாள், திரும்பவும் ஏதாவது செய்ய வேண்டும் என்று பிளான் போட்டு அபி ரைட் சென்று கொண்டிருக்கும் போது ராட்டினத்தில் இருந்து தண்ணீர் விழ வைக்கிறாள், இதனால் மீண்டும் எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர். இனிமேலும் இங்கு இருக்க கூடாது என்று எழில் முடிவெடுக்க எல்லாரும் வீட்டிற்கு கிளம்புகின்றனர்.

இந்த நேரத்தில் வேலு சுடரை பார்த்து விட அவளை துரத்தி வர ஒரு கட்டத்தில் சுடர் எஸ்கேப் ஆகிறாள், உடனே தனது பொலிஸ் நண்பனுக்கு போன் போட்டு தீம் பார்க் பக்கத்திலேயே இருக்கும் டோல்கேட்டில் போலீஸ் சிலரை விட்டு அந்த காரை பிடிக்க சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment