Advertisment

மாமியாரை தீர்த்துகட்ட மருமகளின் மாஸ்டர் ப்ளான்... அடுத்து என்ன நடக்கும்? ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
zee tamil Anna NV KD

ஜீதமிழ் சீரியல்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

அபிராமியை தீர்த்து கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்தியின் மீது வரும் சந்தேகம்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் டெட் பாடியை அடையாளம் காண போக அது அபிராமி இல்லை என்று தெரிய வந்த நிலையில் இன்று, அபிராமியுடன் இன்றைய எபிசோட் தொடங்குகிறது. அபிராமி தூரத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வந்து அங்கு படுத்திருக்கிறாள். ஐயர் கோவிலை மூட போகும் சமயத்தில் அபிராமியை பார்த்து யாரு நீங்க? கோவிலை மூடனும் என்று சொல்ல அபிராமி வீட்டில் ஒரு பிரச்சனை அதனால் இன்னைக்கு மட்டும் இங்க தங்கிக்கிறேன் என்று அனுமதி கேட்க அய்யரும் சம்மதம் சொல்கிறார்.

மறுபக்கம் ஐஸ்வர்யா ரியாவை சந்தித்து நீ எங்க கூட கூட்டு சேர்ந்துடு, அபிராமி எங்கே இருப்பாங்கனு எனக்கு தெரியும். அவங்க மனசு கஷ்டமா இருந்தா ஒரு கோவிலுக்கு போவாங்க, இப்பவும் அங்கே இருக்க தான் வாய்ப்பு இருக்கு, அங்கேயே வச்சு அவங்கள தீர்த்து கட்டிடலாம், மீனாட்சியை வீட்டை விட்டு வெளியே துரத்தி இந்த வீட்டை நம்ம கண்ட்ரோல்ல கொண்டு வரலாம் என்று சொல்ல ரியா பயந்து நடுங்குகிறாள்.

ஐஸ்வர்யா அவளது மண்டையை கழுவி கூட்டு சேர்கிறாள், மறுபக்கம் ஆனந்த் நீ தான் அம்மாவை எங்கயோ மறைச்சு வச்சிருக்க, எனக்கு நல்லாவே தெரியும் என கார்த்தியிடம் சண்டையிடுகிறான். அபிராமி கோவிலில் திருப்பணி செய்து மன நிம்மதியை தேடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

கனி பிரிந்து போய்டுவா.. பரணி சொன்ன வார்த்தையால் கோபமான சண்முகம்.. நடக்க போவது என்ன?

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் கனியை ரியல் பெற்றோர் கடத்தி செல்ல சண்முகம் வழி மறித்து காப்பாற்றிய நிலையில் இன்று, கனி சண்முகத்திடம் என்னை கடத்திட்டு போய் கொன்னுடுவாங்கனு பயந்துட்டேன், உன்னை விட்டு நான் போக மாட்டேன் அண்ணா என்று அழ சண்முகம் அவளுக்கு ஆறுதல் சொல்லி தூங்க வைக்கிறான். மறுபக்கம் மீனாட்சி தனது கணவர் வேலு மாணிக்கத்திடம் அவ நம்ப பொண்ணு தான். அவ வயசுக்கு வந்து இருக்கா. ஊரையே கூட்டி கிராண்டா செய்ய வேண்டியதை நாளே பேரை வச்சி கொண்டாட்டு இருக்காங்க. அவளை நம்ம கூட கூட்டிட்டு போய்டணும் என்று சொல்லி புலம்பி அழுகிறாள்.

இதையடுத்து சௌந்தரபாண்டி வேலு மாணிக்கத்தை தனியாக கூட்டி சென்று இதை வேற மாதிரி தான் டீல் பண்ணுனும். அதுவரைக்கும் பொறுமையாக இருங்க என்று சொல்கிறார். சனியனிடம் இவர்களை நான் சொல்ற வரைக்கும் பாத்திர கடை அண்ணாச்சி கெஸ்ட் ஹவுசில் தங்க வைக்க ஏற்பாடு பண்ணு என்று சொல்கிறார். பிறகு சண்முகம் ரமேஷ், வெட்டுக்கிளி என தன்னுடைய நண்பர்கள் எல்லாரையும் வரவைத்து அருவாளை கொடுத்து வீட்டுக்கு காவல் இருக்க சொல்கிறான்.

உள்ளே வந்து தங்கைகள் எல்லாரையும் சாப்பிட வைக்கிறான். கனி திரும்பவும் நான் உங்களை விட்டு போக மாட்டேன் என்று பீல் பண்ண சண்முகம் ஆறுதல் சொல்கிறான். பிறகு ரூமுக்கு போக பரணி நீ ரொம்ப நல்ல அண்ணன். கனியையும் உன்னையும் பிரிக்க முடியாது என்று சொல்கிறாள். அதே சமயம் கனி நம்ம வீட்டு பொண்ணு இல்ல, நமக்கு கிடைச்சவள் தான். அவங்க கோர்ட் கேஸ்னு போய் கனி அவங்க பொண்ணு தான் என்று நிரூபித்து விட்டால் கனியை அவங்க கூட அனுப்பிடுவாங்க என்று சொல்ல சண்முகம் கோபப்பட்டு வெளியே வர பரணியும் பின்னாடியே வர வெளியே ஆட்கள் ஆயுதங்களை தயார் செய்வதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நினைத்தேன் வந்தாய்:

வேலுவுக்கு தண்ணி காட்டிய சுடர்.‌. எழில் செய்யும் உதவி

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடரை வேலு பார்த்துவிட்டு பின் தொடர்ந்த நிலையில் இன்று, வேலு போலீசுக்கு போன் போட்டு சுடர் வரும் காரை டோல்கேட்டில் மடக்கிப்பிடிக்க சொல்கிறான். இதையடுத்து போலீசும் டோல்கேட்டில் சோதனை போட சுடர் ஒரு வழியாக அவர்களிடம் சிக்காமல் எஸ்கேப் ஆகி விடுகிறாள்.

பிறகு எழில் ஹாஸ்பிடல் செல்வதற்காக வழியில் இறங்கிக் கொள்ள இவர்கள் வீட்டுக்கு வந்ததும் கனகவல்லி சுடரை பார்த்து என்னாச்சுமா ஒரு மாதிரி இருக்க என்று கேட்க நடந்த விஷயங்களை சொல்ல அவர் சரி நீ போய் ரெஸ்ட் எடுமா நான் சாப்பாடு கொடுக்கிறேன் என அனுப்பி வைக்கிறார்.

அடுத்ததாக லேட்டாக வீட்டுக்கு வரும் எழில் எல்லோரும் தூங்கிய பிறகு குழந்தைகளிடம் சென்று அன்பாக கேட்டுவிட்டு வெளியே வரும்போது சுடர் ரூமில் ஏதோ சத்தம் கேட்டு உள்ளே செல்ல அவள் காய்ச்சலால் தவித்துக் கொண்டிருக்கிறாள். இதனால் எழில் சுடருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment