Advertisment

தப்பித்து சென்ற அம்மா... தேடி அலையும் மகன் : அண்ணா குடும்பம் அமைதியாகுமா?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா கார்த்திகை தீபம், நினைத்தேன் வந்தாய் ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Zee tamil Anna KD mkk
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ரவுடியின் பிடியில் இருந்து தப்பி விபத்தில் சிக்கிய அபிராமி.. அடுத்து நடக்க போவது என்ன?

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஹாஸ்பிடலில் வைத்து ரவுடி மணியை சுற்றி வளைக்க அவன் மூலமாக கார்த்திக்கு அபிராமி இருக்கும் இடம் பற்றி தெரிய வர இன்று, கார்த்திக் போலீசுடன் அபிராமியை அடைத்து வைத்திருக்கும் குடோனுக்கு கிளம்பி வருகிறான். இங்கே அபிராமி தண்ணீர் வேண்டும் என்று சொல்லி கேட்க, ரவுடி ஒருவன் கட்டை அவிழ்த்து விட்டு தண்ணீர் கொடுக்க அபிராமி அவனை கட்டையால் அடித்து விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிறாள்.

இதனையடுத்து மெய்ன் ரவுடிக்கு இந்த விஷயம் தெரிய வர அவனும் அபிராமியை துரத்தி வர போலீசுடன் குடோனுக்கு வந்த கார்த்திக் அபிராமியை தேடி பார்க்கிறான். அங்கு அபிராமி இல்லாத நிலையில் அங்கு இருக்கும் தடயங்களை வைத்து இப்போ தான் தப்பி சென்றிருக்கணும் என்று முடிவெடுத்து அபிராமியை தேடுகின்றனர்.

மறுபக்கம் தப்பி ஓடி வரும் அபிராமி ரோட்டை அடைந்து விட எதிர்பாராத விதமாக ஒரு வண்டி இடித்து விட விபத்தில் சிக்கி சரிந்து விழுகிறாள். உடனே அங்கிருந்தவர்கள் ஹாஸ்பிடலுக்கு ஏற்றி அனுப்ப அந்த வழியாக வரும் ஆட்டோவை கை போட்டு நிறுத்துகின்றனர். அந்த ஆட்டோ ட்ரைவர் கார்த்திக் பாட வைத்த துப்புரவு பணியாளர் பெண் ராணியின் கணவர் தான். ஆனால் அவருக்கு அபிராமியை பற்றி தெரியாது.

இந்த காரணத்தால் ஹாஸ்பிடலில் கொண்டு வந்து அட்மிட் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாண்டியம்மாவை ஓட ஓட விரட்டிய பரணி.. திக்கு முக்காட போகும் சௌந்தரபாண்டி

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் தூக்கத்தில் இருந்து எழுந்து பாண்டியம்மா வந்த பிறகு தான் இவ்வளவு பிரச்சனை, முதலில் அவளை அந்த வீட்டில் இருந்து துரத்தணும் என்று சொல்லிய நிலையில் இன்று, சௌந்தரபாண்டி சும்மாவே உன் பொண்டாட்டி உன்னை மதிக்க மாட்டா, இப்போ அவ அண்ணன் கூட வேற சேர்ந்துட்டா அவ கிட்ட கொஞ்சம் உஷாரா இரு, அவளை உன் கைக்குள்ள வச்சிக்க பாரு என்று சொல்கிறார்.

அடுத்ததாக ஸ்டேஷனலில் யாரோ ஒருவர் ப்ரீயாக புடவைகளை எடுத்து வந்து கொண்டு வந்த நிலையில், அதில் ஒரு புடவையுடன் வீட்டிற்கு வரும் முத்துப்பாண்டி இசக்கியிடம் கொடுத்து அவள் மீது அன்பாக இருப்பது போல் டிராமா போட அவள் அது ப்ரீயா வந்த புடவை என்பதை கண்டுபிடித்து பதிலடி கொடுக்கிறாள்.

பிறகு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாண்டியம்மா சாப்பிட எதுவும் இல்லாமல் பசியில் தவிக்க, பாக்கியமும் இசக்கியும் அவளது கைகளை பிடித்து சொல்ல பரணி ஒரு ஊசியை போட்டு உனக்கு போட்டது விஷ ஊசி. இன்னும் ஒரு மணி நேரத்தில் மாத்து ஊசி போடணும். இல்லனா உன் கை கால் எல்லாம் இழுத்து ரத்தம் சுண்டி செத்து போய்டுவ என்று சொல்ல பாண்டியம்மா பதறுகிறாள்.

ஏண்டி எனக்கு இந்த ஊசியை போட்ட, மாத்து ஊசியை போடு என்று கெஞ்ச உனக்கு 10 நிமிஷம் டைம் தர அதுக்குள்ள உன் துணி மணி எல்லாத்தையும் மூட்டையை கட்டிக்கிட்டு இந்த வீட்டை விட்டு ஓடி போய்ட்டு, உனக்கு மாத்து ஊசி போடுறேன் என்று சொல்கிறாள் பரணி. பாண்டியம்மா முடியாது என்று சொல்லி சௌந்தரபாண்டியை கூப்பிட, பரணி இன்னும் பயம் காட்ட பாண்டியம்மா மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு ஊருக்கு கிளம்பி வெளியே வர ஆட்டோ ரெடியாக இருக்கிறது.

இப்பயாவது ஊசியை போடு டி என்று கேட்க பரணி நீ ஊருக்கு போற வரைக்கும் போட முடியாது என்று சொல்கிறாள். பஸ்ஸில் வைத்து எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு, அதை நான் பார்க்கணும். அதனால் நான் ஊருக்குள் கிளம்பிட்டேன். இனிமே எனக்கு போன் பண்ணாத என்று சொல்ல வைத்து வீடியோ எடுத்து கொள்கின்றனர். பாண்டியம்மாவை ஊருக்கு அனுப்பி வைத்த பிறகு வீட்டிற்கு வந்து இவர்கள் எல்லாரும் சந்தோசமாக இருக்கின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வேலுவிடமிருந்து வந்த போன் கால். நடுங்கி போன சுடர், மனோகரிக்கு அதிர்ச்சி

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் விதவிதமாக சமைத்து வைத்து எழிலை சாப்பிட வைக்க தொடங்கிய நிலையில் இன்று, சுடர் செய்ததை சாப்பிட்டுவிட்டு எழில் சத்தம் போடுவான் என மனோகரி உட்பட எல்லோரும் எதிர்பார்க்க, அவன் அமைதியாக சாப்பிடுவதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

அடுத்ததாக ஹாஸ்பிடல் வந்த மனோகரி சிசிடிவி ஃபுட்டேஜ் பார்த்து அதில் போலீஸூடன் வேலு சுடரை துரத்தியதை பார்த்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் பண்ணி அந்த போலீஸ் பற்றி விசாரிக்க முயற்சி செய்கிறார். ஆனால் அவர் வெளியூர் சென்றிருப்பதாக ஸ்டேஷனில் சொல்லிவிட மனோகரி அப்செட் ஆகி விடுகிறாள்.

பிறகு வேலு சுடருக்கு போன் போட்டு அந்த டாக்டர் எழில் காப்பாத்திட்டானு சந்தோஷமா இருக்கியா? நான் இங்க இருந்து போகும்போது உன் கழுத்துல தாலி கட்டி என் பொண்டாட்டியாக கூட்டிட்டு போவேன் என மிரட்ட சுடர் அதிர்ச்சி அடைகிறாள். வேலுவுக்கு பயந்து ரூமை விட்டே வெளியே வராமல் இருக்க அஞ்சலி சுடரை மிஸ் பண்ண தொடங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment