Advertisment

அம்மாவை காப்பாற்றிய மகன்... மாட்டிக்கொண்ட மருமகள் : அடுத்து என்ன நடக்குமோ!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
zee tamils seria

ஜீ தமிழ் சீரியல்கள்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

கண் விழித்த அபிராமி.. ஆதாரங்களுடன் சிக்கிய ஐஸ்வர்யா

கார்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் காரத்திக் உயிரோடு புதைக்கப்பட்ட அபிராமியை மீட்டெடுத்த ஹாஸ்பிடலில் அனுமதித்த நிலையில் இன்று, வீட்டிற்கு வரும் கார்த்திக் அம்மாவோட இந்த நிலைமைக்கு ஐஸ்வர்யா அண்ணி தான் காரணம், அவங்க தான் எல்லா வேலையும் பண்ணி இருக்காங்க என்று சொன்னதும் அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ஐஸ்வர்யா எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, என்னை உனக்கு பிடிக்காது என்பதால் தேவையில்லாமல் பழி போடாத என்று வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறாள். கார்த்திக் அண்ணி எனக்கு எல்லாமே தெரியும், தயவு செய்து பொய் சொல்லிட்டு இருக்காதீங்க என்று சொல்ல ஐஸ்வர்யா ஆதாரம் இல்லாமல் எதுவும் பேசாத என்று சொல்ல அந்த நேரம் போலீஸ் வீட்டிற்கு வருகிறது.

ஐஸ்வர்யா வாட்சப் காலில் பேசிய அனைத்து ரெக்கார்டும் இருக்கும் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர். ஐஸ்வர்யாவை காப்பாற்ற ராஜேஸ்வரி நான் தான் எல்லாத்தையும் பண்ணேன், என் பொண்ணை அவங்க அடிச்சதால் அந்த கோபத்தில் இப்படி பண்ணிட்டேன் என்று சொல்ல கார்த்திக் அதை நம்ப மறுக்கிறான், எல்லாரும் கேள்வி கேட்க ஐஸ்வர்யாவும் ஏன் மா இப்படி பண்ணீங்க என்று கேள்வி கேட்டு டிராமா போட போலீஸ் ராஜேஸ்வரியை கைது செய்து ஜெயிலில் அடைகிறது.

பிறகு ஐஸ்வர்யா ஸ்டேஷனுக்கு வந்து அம்மாவிடம் நல்ல வேளை என்னை காப்பாத்தீட்டீங்க, இல்லனா என் வாழ்க்கையே போய் இருக்கும் என்று சொல்லி அந்த தீபாவையும் கார்த்தியையும் சும்மா விட மாட்டேன் என்று சொல்ல ராஜேஸ்வரி எதுவும் செய்து மாட்டிக்காத, என்று சொல்கிறாள்.

மறுபக்கம் அபிராமி கண் விழிக்க கார்த்திக் ஏன் மா இப்படி பண்ணீங்க என்று கேள்வி கேட்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

அடிக்க வந்த முத்துப்பாண்டி... இசக்கி கொடுத்த பதிலடி, சண்முகத்துக்கு ஷாக் கொடுத்த பரணி

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஒருவன் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி கொள்ள முடிவெடுக்க முத்துப்பாண்டி அது போலீஸ் கேஸ் என்று பேசிய நிலையில் இன்று,  இதெல்லாம் போலீஸ் கேஸ் என்றால் எல்லா புருஷன் பொண்டாட்டியும் ஸ்டேஷனலில் தான் இருக்கணும் என்று சண்முகம் சொல்ல ஊர் மக்களும் ஆமாம் சண்முகம் சொல்றது தான் சரி, இதை பஞ்சாயத்தில் பேசி சரி செய்து கொள்ளலாம் என்று சொல்கின்றனர். இதனால் முத்துப்பாண்டி அவமானப்பட்டு அந்த இடத்தில் இருந்து வெளியேறுகிறான்.

வீட்டில் சௌந்தரபாண்டி தனது திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததை நினைத்து கவலையில் இருக்க பாக்கியத்திடம் குடிக்க சுடு தண்ணி கேட்க பாக்கியம் தண்ணீர் சூடாக இருப்பதால் ஆற்றி கொண்டிருக்க சௌந்தரபாண்டி குடு டி என்று பிடிங்கி குடிக்க வாய் வெந்து போகிறது. சூடா இருக்குனு ஆத்திட்டு தானே இருக்கேன், அவ்வளவு அவசரம் என்ன என்று திட்டி மீண்டும் ஆற்றுகிறாள். அப்போது மீண்டும் சௌந்தரபாண்டி தண்ணீரை கேட்க சூடா இருக்கு வேணுமா என்று பாக்கியம் பதிலடி கொடுக்கிறாள்.

பயங்கர கடுப்பில் வீட்டிற்கு வரும் முத்துப்பாண்டி நடந்த விஷயங்களை சொல்ல இசக்கி என் அண்ணன் கிட்ட தோக்குறதே உங்களுக்கு வேலையா போச்சு என்று நக்கல் அடிக்க, முத்துப்பாண்டி அவளை அடிக்க பாயா அடி பார்க்கலாம், என் அண்ணனுக்கு தெரிஞ்சா என்னவாகும்னு யோசிச்சி பாரு என்று முத்துபாண்டிக்கு ஷாக் கொடுக்கிறாள். உடனே சௌந்தரபாண்டி உன் பொண்டாட்டிய அடக்கி வை என்று சொல்ல முத்துப்பாண்டி முதலில் நீ உன் பொண்டாட்டியை அடக்கி வை. அவங்க அடங்கி இருந்தால் இவளும் இருப்பா என்று கோபப்பட்டு அங்கிருந்து நகர்கிறான்.

இங்கே சண்முகம் ஒரு புருஷன் பொண்டாட்டிகிட்ட எப்படி நடந்துக்கணும்னு சொன்ன விஷயங்களை நினைத்து பார்க்க பரணி ஊருக்கு தான் உபதேசம், உனக்கு இல்லையா? நீ ஒரு நல்ல அண்ணனா, நல்ல ப்ரெசிடெண்ட்டா நடந்துக்கிற, ஆனால் நல்ல புருஷஷனா நடந்துக்கல என்று சொன்னதும் சண்முகம் நாளைக்கு பஞ்சாயத்துக்கு இருக்கு நான் தூங்கணும் என நழுவி கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நினைத்தேன் வந்தாய்:

மனோகரி கையில் சிக்கிய தாலி.. சுடர் சிக்கினாளா? தப்பினாளா?

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் கரண்ட் கட் ஆனதால் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்திருக்க சுடர் பாட்டு பாடி எழிலை கலாய்த்த நிலையில் இன்று, எல்லாரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நேரத்தில் மனோகரி சுடரின் பைலுக்குள் ஏதோ ஒன்று இருக்கு, அதை கண்டு பிடிக்க வேண்டும் என்று பிளான் போட்டு அவளது ரூமுக்குள் சென்று தேடுகிறாள். அந்த நேரத்தில் சுடர் பைலில் தாலி இருக்கும் சுருக்கு பை அவளது கையில் சிக்குகிறது.

உடனே அந்த சுருக்கு பையை திறந்து பார்க்க முயலும் சமயத்தில் கரண்ட் வந்து விட மனோகரி வேகவேகமாக வெளியே வந்து விடுகிறாள், மறுபக்கம் பாட்டு பாடி கொண்டிருந்தவர்கள் கரண்ட் வந்து விட்டதால் அவரவர் ரூமுக்கு கிளம்பி செல்கின்றனர். அப்போது சுடர் மீண்டும் எழில் குடிபோதையில் பாடிய பாடலை பாட எழில் அவளை முறைக்க ரூமுக்கு வந்து விடுகிறாள். எழிலும் ரூமுக்கு சென்று நடந்ததை நினைத்து பார்த்து சிரிக்கிறான்.

இதனையடுத்து மறுநாள் காலையில் குழந்தைகள் எல்லாரும் ஸ்கூலுக்கு கிளம்ப கவின் மட்டும் ரெடியாகாமல் இருக்கிறான். மனோகரி ஸ்கூல் போகலையா என்று கேட்க நீங்க சொன்னதால் ரேங்க் ஷீட்டில் அப்பா கையெழுத்தை நானே போட்டுட்டேன். இன்னைக்கு பேரன்ட்ஸ் மீட்டிங். அப்பா வந்தா நான் மாட்டிக்குவேன் என்று பயப்பட மனோகரி சரி அப்பாவோட சேர்ந்து நானும் வரேன் என்று சொல்கிறாள். கவின் எழில் கையெழுத்து போட்டதை பெரிய பிரச்சனையாக்கி குழந்தைகளை ஹாஸ்டலில் சேர்த்து விட வேண்டும் என்று கணக்கு போடுகிறாள். 

அதற்கேற்றார் போல எழிலிடம் பேசி சம்மதிக்க வைத்து அவனை ஸ்கூலுக்கு அழைத்து கொண்டு கிளம்ப தடுத்து நிறுத்தும் கனகவல்லி சுடரை கூட்டிட்டு போங்க, குழந்தைகளோட கேர் டேக்கர் அவ தானே, குழந்தைகளை பற்றி அவளுக்கு தான் தெரியணும் என்று சொல்ல மூவரும் காரில் கிளம்புகின்றனர். காருக்குள் சுடரும் மனோகரியும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்து கொள்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment