Advertisment

சொத்தை பிரிக்கும் அம்மா... கணவரை பழிவாங்குவாரா மனைவி? ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
Zee tamil Ser

கார்த்திகை தீபம் - அண்ணா - நினைத்தேன் வந்தாய்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

வீட்டுக்கு வந்ததும் அபிராமி எடுத்த முடிவு.. மீனாட்சி சொன்ன வார்த்தை

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜேஸ்வரி கைது செய்யப்பட அபிராமி கண் விழித்த நிலையில் இன்று, ஹாஸ்பிடல் வந்த கார்த்திக் ஏன் மா இப்படி பண்ணீங்க என்று சொல்ல அபிராமி கார்த்திக்கிடம் சாரி கேட்கிறாள்.

இதனையடுத்து அபிராமி கண் திறந்த விஷயம் அறிந்து தீபாவும் மீனாட்சியும் அபிராமியை வீட்டுக்கு அழைத்து வருவதால் வீட்டை அலங்கரிக்கும் வேலையில் இறங்குகின்றனர். மீனாட்சி அத்தை நல்லபடியா வீட்டுற்கு வந்தா கோவிலுக்கு வரதா வேண்டிட்டு இருந்தேன், நான் போய் என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிட்டு வரேன் என்று கிளம்பி செல்கிறாள். அபிராமியை வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். தீபா ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்கிறாள்.

தீபாவை பார்த்த அபிராமி உன்னை பத்தி நான் முழுசா புரிஞ்சிக்கிட்டேன். நானே தேடி இருந்தால் கூட உன்னை மாதிரி ஒரு பெண்ணை கார்த்திக்கு கட்டி வச்சிருக்க முடியாது. அவனுக்கு ஏற்ற பொண்ணு நீ தான் என்று சொன்னதும் தீபா சந்தோசப்படுகிறாள். அடுத்து மீனாட்சி வீட்டிற்கு வர அபிராமி அவளை பார்த்து உன் வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன் என்று கண் கலங்க மீனாட்சி என்னைக்கும் நீங்க தான் என் அத்தை என்று சொல்கிறாள்.

அபிராமி நீ தான் என் மருமகள். ஆனால் உனக்கு என்ன பண்ண போறேன்னு தெரியல என்று கண் கலங்குகிறாள். பிறகு ஆனந்த நான் சொத்தை பிரிக்க சொன்னதால் தான் வீட்டை விட்டு வெளியே போனீங்களா என்று கேட்க அபிராமி நீ கேட்டதிலும் தப்பு இல்ல, நான் போனதிலும் தப்பு இல்ல. நான் ஒரு நல்ல முடிவோட தான் திரும்பி வந்திருக்கேன், நாளைக்கு லாயரை வர சொல்லி இருக்கேன் என்று சொல்கிறாள்.

அடுத்து ரியா ஆனந்திடம் என்ன கேட்க போறீங்க என்று ஏற்றி விட அவன் காஸ்மெட்டிக் கம்பெனி, இந்த வீடெல்லாம் எனக்கு வேண்டும் என்று சொல்கிறான். மறுபக்கம் ஐஸ்வர்யா அருணிடம் நமக்கு கம்பெனி எல்லாம் வேண்டாம், ரிசார்ட் இருக்குல அது போதும். ஆனால் இந்த வீடு நமக்கு வரணும். நீங்க கேட்கலனாலும் நான் கேட்பேன் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

அரிவாளை காட்டி அலற விட்ட இசக்கி.. பஞ்சாயத்தில் சௌந்தரபாண்டி செய்யும் பிரச்சனை

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி முத்துபாண்டியை பார்த்து உங்களுக்கு என் அண்ணன் கிட்ட தொற்று போறதே வேலையா போச்சு என்று சொல்லி அவமானப்படுத்திய நிலையில் இன்று, இசக்கி தூங்கி கொண்டிருக்கும் நேரத்தில் முத்துப்பாண்டி எழுந்து அவளை காலால் எட்டி உடைத்து போய் தண்ணி எடுத்துட்டு வா என்று சொல்ல அவள் உங்களுக்கு தானே தாகமா இருக்கு, போய் எடுத்துக்கோங்க என்று சொல்கிறாள்.

இதை கேட்ட முத்துப்பாண்டி மீண்டும் அவளை எட்டி உதைக்க இசக்கி தலையணைக்கு கீழே இருந்து அரிவாளை எடுத்து காட்ட அவன் அலண்டு போகிறான். தண்ணீ தானடி கேட்டேன், அதுக்கு எதுக்கு அறுவாளை நீட்டுற என்று கேட்க, இனிமே அப்படி தான் என்று சொல்கிறாள், உங்களுக்கு தாகம் எடுத்தா நீங்க போய் எடுத்து குடிங்க என்று சொல்ல, அவன் நானே எடுத்துக்கறேன் என்று எழுந்து வெளியே வருகிறான்.

மறுபக்கம் சௌந்தரபாண்டியும் இரும்பி விட்டு பாக்கியத்தை தண்ணீர் எடுத்துட்டு வர சொல்கிறார். பாக்கியமும் இசக்கியை போல நீங்களே போய் எடுத்து குடிங்க என்று சொல்கிறாள், உடனே சௌந்தரபாண்டி அதட்டி கேட்க பாக்கியமும் அடங்காமல் அதட்டி பதிலை சொல்ல சரி டி நீ தூங்கு நானே எடுத்துக்கறேன் என்று சொல்லி வெளிய வருகிறார். மறுநாள் காலையில் முத்துபாண்டியை இசக்கியை ஷூவுக்கு பாலிஸ் போட சொல்ல அவள் பாலிஷ் தானே போடணும், போட்டுடலாம் என்று சிரித்து கொண்டே சொல்ல முத்துபாண்டிக்கு பிளாஷ் கட் நியாபகம் வந்து நானே போட்டுக்கறேன் என்று சொல்கிறான்.

அடுத்து பஞ்சாயத்து கூட முத்துபாண்டியும் அங்கு வந்து விட சண்முகம் என்ன பிரச்சனை என்று விசாரிக்க மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக்கொள்ள பார்த்தவள் என் பொண்டாடி என் கூட வாழ மாட்டேன்னு சொல்றா, சேர்த்து வையுங்க என்று சொல்கிறான் இதை கேட்ட சண்முகம் அந்த பெண்ணிடம் பேச அவள் அவர் என்னை நெறைய கொடுமை படுத்திட்டாரு என்னால் வாழ முடியாது என்று சொன்னதும் அந்த நபர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க அவளும் மன்னித்து விடுகிறாள்.

இந்த நேரத்தில் அங்கு வரும் சௌந்தரபாண்டி ஊருக்கு தான் உபதேசம், இவனுக்கு இல்ல, இவனுக்கும் என் பொண்ணுக்கும் எப்படி கல்யாணம் நடந்தது என்று ஊருக்கே தெரியும், என் பொண்ணு இவன் கூட சந்தோசமாக வாழல என்று பிரச்சனை செய்ய சண்முகம் நாங்க சந்தோசமாக தான் வாழறோம் என்று பதில் சொல்ல அதை நீ சொல்லாத, என் பொண்ணு சொல்லட்டும் என்று சொல்கிறார். பிறகு சனியனை அனுப்பி பரணியை கூப்பிட்டு வர சொல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நினைத்தேன் வந்தாய்:

எழிலுக்கு ரூட் விடும் டீச்சர்.. சுடர் விட்ட சவால்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் எழில், சுடர், மனோகரி என்று மூவரும் ஸ்கூலுக்கு கிளம்பி வந்த நிலையில் இன்று, மனோகரி எழிலிடம் பேச போகும் போதெல்லாம் சுடர் எதையாவது பேச மனோகரி கடுப்பாகிறாள். இதனையடுத்து இவர்கள் ஸ்கூலுக்குள் வந்து இறங்குகின்றனர். அப்போது, அஞ்சலி டீச்சரை பார்க்க எதிர்பாராத விதமாக எழில் மீது மோதி விடும் டீச்சர் எழிலை பார்த்து இம்ப்ரெஸ் ஆகிறார்.

அடுத்து அஞ்சலி டீச்சரை பார்க்கணும் என்று சொல்ல வாங்க நான் தான் அஞ்சலி டீச்சர் என்று அழைத்து சென்று உட்கார வைத்து பேசுகிறாள், பக்கத்தில் சுடர் இருக்க நீங்க யாரு? குழந்தைக்கு அம்மாவா என்று கேட்க சுடர் இல்ல கேர் டேக்கர் என்று சொல்கிறாள். அப்போ உங்க வைப் இல்லையா என்று கேட்க எழில் அவங்க இல்ல, இப்போ நான் சிங்கிள் என்று சொல்ல ஏன் சார் இவ்வளவு ஹாண்ட்ஸமாக இருந்திட்டு சிங்கிள்னு சொல்றீங்க என்று பேச டீச்சர் பேசுவதை புரிந்து கொண்ட எழில் அங்கிருந்து எஸ்கேப் ஆக முயற்சி செய்கிறான்.

பிறகு போன் அபி, காவியா, கவின் டீச்சரை பார்க்க போகும் அங்கும் வரும் அஞ்சலி டீச்சர் எழிலிடம் போன் நம்பர் கேட்க அவன் ஒரு போன் கால் வந்திருப்பதாக சொல்லி எஸ்கேப் ஆகிறான். இறுதியான கவின் டீச்சர் ரேங்க் காரட்டை எடுத்து நீட்ட எழில் வேண்டாம் எவ்வளவு மார்க் எடுத்து இருப்பான்னு தெரியும் என்று சொல்லி விடுகிறான், டீச்சர் அவனோட பெர்பாமன்ஸ் சரியில்ல என்று சொல்ல சுடர் அடுத்த எக்ஸாம்க்குள்ள நான் அவனை மாத்துறேன் என்று சவால் விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment