Advertisment

மாமியாரை ஏமாற்ற ட்ராமா போடும் மருமகள்... மச்சானை கலாய்க்கும் மாமா : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
zee tamil serial 223

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, நினைத்தேன் வந்தாய், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

மேனேஜரை வைத்து கார்த்தியை சீண்டும் ஆனந்த்.. நடந்தது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மில்லுக்கு வந்த முதல் நாளே கார்த்திக் மிஷினை சரி செய்து ஆனந்துக்கு ஷாக் கொடுத்த நிலையில் இன்று, ஆனந்த் இவனை ஏதாவது பண்ணி இங்க இருந்து துரத்தணும் என்று கார்த்திக்கு எதிராக சதி செய்ய யோசித்து கொண்டிருக்கிறான், பிறகு மேனேஜரை வைத்து ஒரு திட்டத்தை தீட்டுகிறான்.

அடுத்ததாக மேனேஜர் கார்த்தியை கூப்பிட்டு எனக்கு டீ குடிக்கணும் போல் இருக்கு, போய் டீ போட்டு எடுத்துட்டு வா என்று சொல்லி ஒரு மேஜை மீறி ஏறி உட்காருகிறான். அடுத்து கார்த்தியும் டீயை போட்டு கொண்டு வந்து மேனேஜரிடம் கொடுக்காமல் அவரை கீழே இறங்க வைத்து கார்த்திக் அந்த மேஜை மீது உட்கார்ந்து டீ குடிக்கிறான், மேனேஜர் நான் எனக்கு டீ கொண்டு வர சொன்னேன் என்று சொல்ல வேலை விஷயமா என்ன வேணாலும் சொல்லுங்க, நாய் செய்கிறேன்.

ஆனால் உங்களுடைய பெர்சனல் வேலையெல்லாம் பார்க்க முடியாது என்று எதிர்த்து பேச தொழிலார்கள் கை தட்டி கொண்டாடுகின்றனர். மறுபக்கம் அபிராமி வீட்டில் ஐஸ்வர்யாவும் ரியாவும் கூட்டு சேர்ந்து கொண்டு ரியாவின் அத்தை மாமா என்று சீரியல் ஆர்டிஸ்ட் சிலரை வர வைத்து அபிராமியிடம் பேசி சமாதானம் செய்து வைப்பது போல் நடிக்க வைக்க ஏற்பாடு செய்கின்றனர். அவர்களும் சீக்கிரம் நடிச்சிட்டு நாங்க கிளம்பனும், சீரியலுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கோம் என்று பேசுகின்றனர்.

இதையெல்லாம் மைதிலி ஒட்டு கேட்டு விடுகிறாள். அடுத்து ரியாவின் அத்தை மாமாவாக வந்தவர்கள் அபிராமிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

முத்துபாண்டியை வெறுப்பேற்றிய ஷண்முகம்.. பரணி எடுத்த முடிவு, எஸ்.பி தந்த ஷாக்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் முத்துபாண்டியை விருந்துக்கு அழைத்து வந்து வெங்கடேஷை சிறப்பு விருந்தினர் என அறிமுகமப்படுத்தி கடுப்பாக்கிய நிலையில் இன்று, வெங்கடேஷை பார்த்து முத்துப்பாண்டி இவன் எதுக்கு இங்க வந்தான் என்று கோபப்பட அவரும் இந்த வீட்டு மாப்பிளை தான் என்று பதிலடி கொடுத்து உள்ளே அழைத்து செல்கிறான். முத்துப்பாண்டி கடுப்பாக இருக்க அங்க பாரு எஸ்.பி என்று சொல்ல அவன் பயந்து போய் சல்யூட் அடிக்கிறான்.

கடைசியில் அங்கு யாரும் இல்லை என்பதால் முத்துப்பாண்டி இன்னும் கோபமாகி அவன் கிடக்குறான் விளக்கெண்ணெய் என்று திட்ட முத்துப்பாண்டி உண்மையாக எஸ்.பி வந்து ஷாக் கொடுக்கிறார். மேலும் எஸ்.பி மச்சான் வீட்டிற்கு விருந்துக்கு வந்திருக்க மாப்பிள்ளையா நடந்துக்கயா, அதை விட்டுட்டு இங்கேயும் போலீசா நடந்துக்கற என்று சொல்கிறார். அடுத்து விருந்து ஆரம்பிக்க ரத்னாவையும் வெங்கடேஷையும் ஒன்றாக உட்கார வைத்து ஊட்டி விட வைத்து வெறுப்பேற்றுகின்றனர்.

வீட்டிற்கு வந்து முத்துப்பாண்டி அந்த சண்முகத்தை சும்மா விட மாட்டேன் என்று கொதிக்க இசக்கியும் பரணியும் தனியாக சந்தித்து நீ என் அண்ணனை மாத்து, நான் உன் அண்ணனை மாத்துறேன் என்று பேசி கொள்கின்றனர். அடுத்து ரத்னா பரணி எல்லாரும் கோவிலுக்கு வர பரணி என்ன விஷயம் என்று கேட்க பால் குடம் எடுக்க போவதாக சொல்கிறாள். பால் குடம் எடுத்தா எல்லாம் நல்லதா நடக்கும்னு என் ஸ்கூல் டீச்சர் எடுத்தாங்க என்று சொல்ல கனி கல்யாணம் நல்லபடியாக நடக்கணும்னு பால் குடன் எடுக்க போறியா என்று கலாய்க்கிறாள்.  இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நினைத்தேன் வந்தாய்

எழிலுக்குள் இருக்கும் காதல்.. சுடருக்குள் உருவாகும் மாற்றம்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடர் எழில், இந்து காதல் குறித்து வார்டனிடம் கேட்க பிளாஷ்கட் ஓபனான நிலையில் இன்று, இந்துவை பார்த்த எழில் காதலில் விழ மறுநாள் காலையில் ரெடியா இரு என்று சொல்லி விட்டு வீட்டிற்கு சென்ற நிலையில் தன்னுடைய குடும்பத்தை கூட்டி சென்று ஸ்டேஜை டெக்கரேட் செய்து இந்துவை அறிமுகம் செய்து வைத்து சர்ப்ரைஸ் கொடுக்கிறான்.

இந்துவை தான் கல்யாணம் செய்து கொள்ள போவதாக சொல்லி குடும்பத்தாரிடம் அனுமதி வாங்க இந்துவும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறாள். இதனையடுத்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது என வார்டன் பிளாஷ்கட்டை சொல்லி முடிக்கிறார்.

இதை எல்லாம் கேட்ட சுடருக்கு எழில் மீது ஒரு சாப்ட் கார்னர் உருவாகிறது, கோவக்கார எழிலுக்குள் இப்படி ஒரு காதல் கதை இருக்கா என்று ஆச்சரியப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment