Advertisment

அண்ணி கொடுக்கும் ஐடியா... சிக்குவாரா நாயகன்? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியல்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Anna Nskd

ஜீ தமிழ் சீரியல்

கனியை பார்க்க விலை பேசிய வேலு மாணிக்கம்.. ஜகா வாங்கிய பரணி, ண்முகம் கொடுத்த பதிலடி 

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் கனியின் அப்பா பணத்துடன் ஷண்முகம் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று, வேலு மாணிக்கம் நீங்க கேட்குற பணத்தை கொடுக்கிறேன், ஒரே ஒரு முறையாவது என் பொண்ணை பார்க்க விடுங்க என்று சொல்ல சண்முகம் எவ்வளவு கோடி கொடுத்தாலும் என் தங்கச்சியை விட்டு தர மாட்டேன் என்று சொல்ல கனி வெளியே வந்து நான் என் அண்ணனை விட்டு வர மாட்டேன் என்று சொல்ல வேலு மாணிக்கம் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறார்.

அடுத்து எல்லாரும் சாப்பிட உட்கார வைகுண்டம் எப்படியும் 1 கோடி ஆகும் போல, நம்மால் வாங்க முடியாது. இதை விட்டுடலாம் என்று சொல்ல ரத்னாவும் ஆமாம் அண்ணா, நான் ஏதாவது ஒரு ஸ்கூல்லேயே வேலை பார்த்துக்கறேன் என்று சொல்ல பரணியும் இப்போ இருக்கிற சூழ்நிலையில் கஷ்டம் தான் போல என்று சொல்கிறாள்.

இதை கேட்ட சண்முகம் நீ தானே கல்யாணம் பண்ணலாம் என்று சொன்னதுக்கு தங்கச்சியோட கனவை நிறைவேற்றுபவன் தான் நல்ல அண்ணன்னு சொன்ன, என்ன நடந்தாலும் என் தங்கச்சியோட கனவை நான் நிறைவேற்றுவேன் என்று சொல்லி சாப்பிடாமல் எழுந்து செல்கிறான். சண்முகம் சாப்பிடாமல் போக கனி அண்ணன் சாப்பிடும் போது தான் இப்படியெல்லாம் பேசுவியா என்று அப்பாவை திட்டி அவளும் சாப்பிடாமல் எழுந்து செல்ல வைகுண்டம் நானும் சாப்பிடல என்று சென்று விடுகிறார்.

நைட் நேரத்தில் சண்முகம் தூங்காமல் யோசனையில் இருக்க பரணி என்னாச்சு என்று கேட்க எனக்கு என்ன பண்றதுனு தெரியல என்று வருத்தப்படுகிறான். இருந்தாலும் என் அப்பன் முருகன் என்னை கைவிட மாட்டான் என்றும் சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனந்த்தை சந்தித்து உண்மையை உடைத்த ரியாவின் கணவர்.. அடுத்து நடக்க போவது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்தியும் தீபாவும் ரியா பற்றி ஆனந்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்த நிலையில் இன்று, மதுவை வீட்டிற்கு வரவைத்து ஆனந்திடம் அவளை பற்றிய எல்லா விஷயங்களையும் தெரியப்படுத்துகின்றனர், அதன் பிறகு தீபாவும் ஆமாம் மாமா அவர் சொல்றது எல்லாமே உண்மை தான் என்று சொல்ல ஆனந்தால் அதை முழுமையாக நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

பிறகு மது வெளியே கிளம்பி வரும் போது ரியா இதை பார்த்து விட ஆனந்துக்கு எல்லா உண்மையும் தெரிந்துடுச்சோ என்று அதிர்ச்சி அடைகிறாள், ஆனந்திடம் வந்து தீபா தன்னை அறைந்து விட்டதாகவும் அத்தை எதுவுமே கேட்கவில்லை என்றும் பிளேட்டை மாற்றி பேசுகிறாள். இதனால் ஆனந்த் அப்படியா? நீ அவளை சும்மாவா விட்ட என்று கேட்க ரியா வேண்டாம் நீ அவகிட்ட எதுவும் கேட்க வேண்டாம், இந்த விஷயம் உங்களுக்கு தெரிய வேண்டாம், பிரச்சனை வேண்டாம்னு தான் சொல்லாமல் இருந்தேன் என்று நல்லவள் வேஷம் போட்டு ஆனந்த் மனசை கலைக்கிறாள்.

அதன் தொடர்ச்சியாக ஐஸ்வர்யா ஆனந்தை கூப்பிட்டு கார்த்திக்கை வேலையில் இருந்து அனுப்ப என்னிடம் ஒரு வழி இருப்பதாக சொல்லி எதையோ ஒன்றை சொல்ல ஆனந்த் நீ சொன்ன மாதிரியே செஞ்சிடுறேன் என்று கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுடரை தேடி வந்து சிக்கிய குழந்தைகள்.. அபி கழுத்தில் கத்தியை வைத்த வேலு

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபி, கவின் ஆகியோர் சுடரை தேடி செல்ல முடிவெடுத்த நிலையில் இன்று, வேலு ரூமுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் சுடரிடம் உனக்கும் எனக்கும் கல்யாணம், ஒழுங்கா ரெடியாகிட்டு வா என்று சொல்ல சுடர் எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் தவிக்கிறாள். மறுபக்கம் அபி, கவின் ஆகியோர் சுடரை தேடி அலைகின்றனர். 

இன்னொரு பக்கம் எழிலும் சுடரை தேடி அலைந்து கொண்டிருக்கிறான், மனோகரி வேலுவுக்கு போன் செய்து அவளை தேடி குழந்தைகள் வந்தாலும் வருவாங்க என்று தகவல் கொடுத்து விடுகிறான். அதே போல் கவினும் அபியும் ஒரு வீட்டின் கதவை தட்ட வேலு வெளியே வருகிறான்.

சுடரின் போட்டோவை காட்டி இவங்களை பார்த்தீங்களா என்று விசாரிக்க வேலு ரவுடிகளை வைத்து குழந்தைகளை கடத்துகிறான், கல்யாணத்துக்கு நோ சொல்லி கொண்டிருக்கும் சுடர் கவினின் குரலை கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். அபி அஞ்சலி நீ வந்தா தான் கண் முழிப்பா என்று ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்ல சுடர் அதிர்ச்சி அடைகிறாள்.

வேலு ஒழுங்கு மரியாதையா கல்யாணத்துக்கு ஒத்துக்க என்று மிரட்ட சுடர் முடியாது என்று சொல்ல அபி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்ட சுடர் வேறு வழியின்று கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறாள். சுடரை தேடி அலையும் எழில் கவின் வரைந்த டிராயிங் பேப்பரை பார்த்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment