Advertisment

ரவுடிகளிடம் மாட்டிக்கொண்ட நாயகன் : அதிரடியாக மோதும் வில்லன் - வில்லி ; அடுத்து என்ன?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா கார்த்திகை தீபம் மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Zee tamil Serial News 123

அண்ணா - கார்த்திகை தீபம் - நினைத்தேன் வந்தாய்

கனவில் வந்த அதே ரவுடிகள்.. ஷண்முகத்தை ரவுண்டு கட்டியதும் பரணி கொடுத்த ஷாக்

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் திருவனந்தபுரம் பஸ் ஏறிய நிலையில் பரணி கனவில் கண்ட பஸ் தான் இது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று, இதை பார்த்த பரணி ஆட்டோவில் பின்தொடர்ந்து பஸ்ஸில் ஏறி விடுகிறாள், அவளது போனை ஆட்டோவில் மிஸ் செய்து விடுகிறாள், இதையடுத்து மறுபக்கம் சௌந்தரபாண்டி யாகம் நடத்தி கொண்டிருக்கு ஒரு அய்யர் மூலமாக பாக்கியத்துக்கும் இசக்கிக்கும் இந்த யாகம் எதற்காக என்பது தெரிய வருகிறது.

சண்முகத்தை அழிக்க தான் இந்த யாகம் என்பதை புரிந்து கொண்டு பரணிக்கு போன் செய்ய அவள் போன் மிஸ் ஆனதால் போனை எடுக்காமல் இருக்கிறாள். இங்கே பஸ்ஸில் ஏறிய பரணியும் போலீசும் கேப் விட்டு உட்கார்ந்திருப்பதை பார்த்து சந்தேகமடைகிறாள், அடுத்த ஸ்டாப்பில் முத்துப்பாண்டி ஏற்பாடு செய்த ஆட்கள் உள்ளே ஏற சண்முகத்தை அழைத்து வந்த லேடி போலீஸ் இவனை தான் போடணும் என்று கண்ணை காட்டி விட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிறாள். இதை பார்த்து பரணிக்கு சந்தேகம் அதிகமாகிறது.

ரவுடிகள் முத்துபாண்டிக்கு போன் போட்டு பஸ்ல இப்போ நிறைய பேர் இருக்காங்க, எல்லாரும் அடுத்த ஸ்டாப்ல இறங்கிடுவாங்க, அப்புறம் இவனை போடுறோம் என்று போனை வைக்க முத்துப்பாண்டி சந்தோஷப்படுகிறான். ரவுடிகள் சண்முகத்திற்கு முன்னும் பின்னுமாக சுத்து போட்டு உட்காருகின்றனர். திடீரென ஒரு ரவுடி இடுப்பில் இருந்து கத்தி கீழே விழ அதை பார்த்து விடும் பரணி ஓடி வந்து சண்முகம் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள பரணியை பார்த்த சண்முகம் ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எழிலுக்கு நடந்த விபத்து.. சுடரை வறுத்தெடுத்த மனோகரி, வேலு வைத்த ட்விஸ்ட்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் எழில் காரில் சென்று கொண்டிருக்க வேலு ஏற்பாடு செய்த வேன் அவனை கொல்ல வேகவேகமாக வந்த நிலையில் இன்று, சுடர் எழிலை காப்பாற்ற ஆட்டோவில் பின்தொடர்ந்து வர வேன் எழில் கார் மீது மோதி விபத்து ஏற்படுகிறது, விபத்தை நேரில் கண்டு பதறும் சுடர் அவனை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து கனகவல்லிக்கு தகவல் கொடுத்து வேலுவால் தான் இப்படி ஆச்சு, அவன் எனக்கு போன் பண்ணி இருந்தான் என்று அழுகிறாள்.

விஷயம் அறிந்து ஹாஸ்பிடல் வந்த மனோகரி உன்னால் தான் எழிலுக்கு இந்த நிலைமை, உன்ன சும்மா விட மாட்டேன் என்று சத்தம் போட கனகவல்லி எழிலுக்கு இப்படி நடந்ததுக்கு அவ என்ன பண்ணுவா என்று கேள்வி கேட்க இவளால் தான் அந்த வேலுவால் பிரச்சனை வருது, பார்க்க வேண்டியவர்களை பார்த்து வந்து உன்ன வசிக்கிறேன் என்று கோபப்பட்டு கிளம்பி செல்கிறாள்.

சுடர் எழிலுக்கு எதுவும் ஆக கூடாது என்று பதற மறுபக்கம் மனோகரி வேலுவை சந்தித்து நீ எதுக்கு எழிலை கொல்ல பார்க்குற, அந்த சுடரை என்ன வேணா பண்ணிக்க, ஆனால் என் எழில் மேல கையை வச்சா உன்ன சுட்டு தள்ளிடுவேன் என்று துப்பாக்கி முனையில் மிரட்டுகிறாள். வேலு உன்னுடைய மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். உன்னை பத்தி எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா என்று பிளாஷ்கட்டை ஓபன் செய்ய மனோகரி பற்றிய விஷயங்களை போட்டு உடைக்கிறான் வேலு. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காதலனாக கார்த்திக்கை அறிமுகம் செய்ய போகும் ரியா.. தீபாவுக்கு தெரிய வருமா உண்மை?

கார்த்திகை தீபம் சீரியலின்  நேற்றைய எபிசோடில் தீபா ரம்யா வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று, ரம்யாவின் அப்பா அவளுக்காக மாப்பிள்ளை பார்க்க ஒரு 15 ப்ரொபைல் வந்திருக்கு இதில் எதாவது சூஸ் பண்ண சொல்லு என்று சொல்லு என்று சொல்கிறார். அதன் பிறகு ரம்யாவிடம் பொறுமையாக எடுத்து பேசுவதாக சொல்லி தீபா வீட்டிற்கு கிளம்பி வருகிறாள். இங்கே அபிராமி வீட்டில் ரியா பெயருக்கு ஒரு கொரியர் வர அதை பிரிந்து பார்க்கும் போது ஆனந்த் ரியாவின் கல்யாண போட்டோ என்பது தெரிய வருகிறது.

ரியா இதை வீட்டு ஹாலில் மாட்ட வேண்டும் என்று சொல்ல அபிராமி, அருணாச்சலம் ஆகியோர் அதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் ரியா மாட்டியே ஆக வேண்டும் என்று வாக்குவாதம் செய்ய தீபா வீட்டிற்குள் நுழைகிறாள். இங்கே நடப்பதை தெரிந்து கொண்ட தீபா அதான் மாட்ட வேண்டாம்னு சொல்றாங்கல என்று பேச ரியா அப்போதும் தனது முடிவில் உறுதியாக இருக்க தீபா அந்த போட்டோவை பிடிங்கி கொண்டு போய் வெளியில் போட்டு உடைக்கிறாள்.

ரியா இதை விட பெரிய போட்டோவை நான் மாட்டி காட்டுறேன் என்று சவால் விடுகிறாள். அடுத்து கார்த்திக் வர தீபா தன்னுடைய ப்ரண்ட் அம்மு வீட்டிற்கு சென்றிருந்ததாக சொல்கிறாள், அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கணும் 15 ப்ரொபைல் வந்திருக்கு, இதுல ஏதாவது பேஸ்ட்டா சொல்லுங்க என்று கார்த்திக்கிடம் கேட்க அவன் மற்றவங்க வாழ்க்கைக்கு நான் எப்படி மாப்பிளை பார்க்க முடியும் என்று நோ சொல்கிறான்.

இந்த நேரம் பார்த்து ரம்யா போன் செய்ய தீபா போனை எடுத்து அம்மு என்று இன்னொரு பெயரை சொல்லி பேசுகிறாள். கார்த்திக்கிடம் என் ப்ரண்ட் கிட்ட பேசுங்க என்று போனை கொடுக்க கார்த்திக் வேண்டாம் என்று மறுக்க அவர் கூச்சப்படுகிறார் என்று சொல்லி விடுகிறாள் தீபா. மறுநாள் தீபாவும் ரம்யாவும் கோவிலில் சந்திக்க தீபா கல்யாண பேச்சை எடுக்க ரம்யா அமைதியாகவே நிற்கிறாள்.

இதனால் தீபா நீ யாரையாவது லவ் பண்ணுறியா என்று கேட்க ரம்யா ஆமாம் என் ஆபீஸ் எம்பிளாயி ஒருத்தரை லவ் பண்றேன் என்று சொல்லி கார்த்திக்கை அறிமுகம் செய்து வைக்க அழைத்து செல்கிறாள். இதையெல்லாம் கேட்ட ஐஸ்வர்யா ஒருவேளை அந்த நபர் கார்த்தியாக இருக்குமோ என்று சந்தேகம் கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment