Advertisment

அப்பாவை வெட்ட அரிவாளுடன் வந்த மகள் : குழந்தையை காப்பாற்ற வந்த ஆவி : ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழின் அண்ணா, கார்த்திகை தீபம், மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியல் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
zee tamil serial 124
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கார்த்திக்காக போட்டி போட்டு கிப்ட் வாங்கும் தீபா, ரம்யா.. கல்யாண கொண்டாட்டத்தில் நடக்க போவது என்ன?

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி குடும்பத்தினர் வீடு மாறி தீபா கையால் பால் காய்ச்சி குடியேறிய நிலையில் இன்று, மீனாட்சியும் மைதிலியும் தீபாவிடம் இந்த வீடு இன்னும் பெருசா தாராளாக இருக்கு என்று பேசுகின்றனர், அடுத்து தீபாவிடம் இன்னைக்கு சாயங்காலம் நடக்க போற பங்ஷனில் கார்த்திக்கு என்ன கிப்ட் கொடுக்க போற என்று கேட்க தீபா இதுவரைக்கும் யோசிக்கல என்று சொல்கிறாள். திடீரென அவளுக்கு ஒரு யோசனை வந்து கடைக்கு கிளம்பி வருகிறாள்.

அதே போல மறுபக்கம் ரம்யா தன்னுடைய அப்பாவிடம் இன்னைக்கு ஒரு பங்ஷனுக்கு போகணும் என்று சொல்ல ரம்யாவிடம் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்து சந்தோசப்படுகிறார். பிறகு ஒரு கிப்ட் வாங்கணும் என்று சொல்லி அவளும் கிளம்பி கடைக்கு வருகிறாள். கடைசியாக இருவரும் ஒரே கடைக்கு வர இரண்டு பேரும் சந்தித்து கொள்கின்றனர்.

இந்த சந்திப்பை தொடர்ந்து ரம்யா உன் ஹஸ்பண்ட்டுக்கு என்ன கிப்ட் வாங்க போற என்று கேட்க, தீபா அபிராமி மற்றும் கார்த்தியின் சிறு வயது போட்டோக்களை ஒன்று சேர்த்து ஒரு பிரேம் போட போவதாக சொல்கிறாள். பிறகு தீபா ரம்யாவிடம் இதே கேள்வியை கேட்க அவள் ராமன் சீதை போட்டோ ஒன்றை வாங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரத்னாவுக்காக பொங்கல் வைக்கும் பாக்கியம்.. சௌந்தரபாண்டி கொடுத்த ஷாக், கோபத்தில் கொதிக்கும் பரணி

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி நகை போலீஸ் ஸ்டேஷனில் இருக்கலாம் என்று சந்தேகப்பட வைகுண்டமும் சண்முகமும் அதுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லி விட்ட நிலையில் இன்று, பாக்கியம் ரத்னா பிரின்சிபால் ஆனா முருகனுக்கு பொங்கல் வைப்பதாக வேண்டி கொண்டிருந்ததாக சொல்லி எல்லாரையும் பொங்கல் வைக்க செல்கிறாள். சௌந்தரபாண்டியிடம் நீங்க நல்லா இருக்கணும்னு வேண்டிகிட்டு பொங்கல் வைக்க போவதாக சொல்கிறாள். 

மறுபக்கம் பரணி ஹாஸ்பிடலில் இருக்க சண்முகம் அவளை விட்டு எங்கும் போகாமல் அங்கேயே இருக்க பரணி ஒரு டீ குடிக்க கூப்பிட்டா கூட வர மாட்ட, இப்போ என்ன இங்கேயே இருக்க என்று கேட்க அவன் ஒன்றும் இல்லனு சொல்ல பரணி அருவாளை தூக்கிட்டு என் அப்பாவை வெட்ட போய்டுவேன்னு பயமா என்று கேட்கிறாள். சண்முகம் அய்யய்ய அப்படியெல்லாம் இல்ல என்று சொல்கிறான்.

மறுபக்கம் பாக்கியம் சண்முகத்தின் தங்கைகளை வர வைத்து கோவிலில் பொங்கல் வைத்து கொண்டிருக்க கோவிலில் வேலை செய்யும் கோபால் என்னம்மா பொங்கல் வைக்கறீங்க என்ன விஷயம் என்று கேட்க அவள் ரத்னாவுக்காக வைப்பதாக சொல்கிறாள். பிறகு சௌந்தரபாண்டி கோவிலில் கணக்கு வழக்குகளை பார்க்க வருகிறார். கோபால் அம்மா பொங்கல் வைக்க வந்திருக்காங்க என்று சொல்ல சௌந்தரபாண்டி எனக்காக தான பொங்கல் வைக்கிறா என்று சொல்கிறார்.

கோபால் அம்மா அப்படி சொல்லலையே என்று ரத்னா பற்றி சொல்ல சௌந்தரபாண்டி ஷாக் ஆகிறாள். திரும்பவும் கோபாலை அனுப்பி பாக்கியத்திடம் திரும்ப கேட்க சொல்லி சௌந்தரபாண்டி மறைந்து பார்க்க பாக்கியம் ரத்னாவுக்காக சொன்னதும் ஏன்டி என் வீட்டில இருந்துட்டு என்னை தோற்கடித்த குடும்பத்துக்கு பொங்கல் வைக்கறியா என்று பானையை எட்டி உடைத்து உடைக்கிறார். இங்கே ஒரு பெண்மணி காது அறுந்து ஹாஸ்பிடலுக்கு வர பரணி என்னாச்சு என்று கேட்க கோவிலில் வேலை செய்யும் கோபால் தான் என் புருஷன், குடிக்க காசு தரலைனு காதை அறுத்திட்டான் என்று சொல்கிறாள்.

இதே நேரத்தில் கனி போன் செய்து பரணியிடம் கோவிலில் நடந்த விஷயத்தை சொல்ல பரணி அந்த ஆளுக்கு இருக்கு என்று கோபத்துடன் கிளம்பி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வீட்டிற்குள் நுழைந்த இந்துவின் ஆத்மா.. எழிலால் காத்திருந்த ஷாக்

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரவுடிகள் அஞ்சலியை பிடித்து வைத்து மற்ற குழந்தைகளை மிரட்டிய நிலையில் இன்று, ரவுடிகள் அஞ்சலியை தூக்கி போட இந்துவின் ஆவி தோன்றி அஞ்சலியை அலேக்காக பிடித்து காப்பாற்றுகிறது, ரவுடிகளை அடி வெளுத்தெடுக்க இங்க ஏதோ இருக்கு என ரவுடிகள் பயந்து ஓடுகின்றனர். அதனை தொடர்ந்து வீட்டில் கனகவல்லி குழந்தைகளை காணவில்லை என்று பதற நான்கு பேரும் வீட்டிற்கு வந்து நிற்கின்றனர், கனகவல்லி சொல்லாமல் எங்க போனீங்க என்று கேள்வி கேட்டு சரி வாங்க அம்மாவை கும்பிட்டுக்கோங்க என்று சாமி கும்பிட சொல்கிறாள்.

இதனை தொடர்ந்து இந்துவும் பின்னாடியே இந்த வீட்டிற்கு வருகிறாள். கனகவல்லி சோபாபில் கண் மூடி சாய்ந்திருக்க அத்தை நான் வந்துட்டேன்.. குழந்தைங்க எங்க போனாங்கனு தெரியுமா? ஏன் அத்தை அவங்களை கவனிக்காமல் இப்படி விட்டீங்க என்று கேள்வி கேட்க கனகவல்லி தனக்கு தானே புலம்பி கொள்கிறாள்.

இதை பார்த்த இந்து நான் பேசுறது அத்தைக்கு கேட்கிறது என நினைத்து சந்தோசப்பட கனகவல்லி எழுந்து உள்ளே செல்ல அத்தை நான் கேட்டுட்டே இருக்கேன் நீங்க போயிட்டே இருக்கீங்க என்று குழப்பம் அடைகிறாள். பிறகு எழில் ரூமுக்கு வர அவன் போட்டோவை பார்த்து குடித்தபடி இருக்க குடிக்க கூடாதுனு சொன்னா கேட்கறீங்களா என்று இந்து கேள்வி கேட்கிறாள்.

அவனும் போட்டோவை பார்த்து புலம்ப இந்து தான் பேசுவது கேட்பதாக நினைக்கிறாள். சரி வாங்க என்று இந்து அவனை கட்டி அணைக்க போக எழில் போட்டோ அருகே சென்று நின்று பீல் பண்ண நான் பேசுறது இவங்களுக்கு கேக்கல என்று அறிந்து இந்து கண்ணீர் விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment