Advertisment
Presenting Partner
Desktop GIF

அண்ணி - நாத்தனார் அதிரடி மோதல்: விவாகரத்து கேட்கும் கணவன்; சிக்கல் சரியாகுமா?

ஜீ தமிழின் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Zee tamil anna KD andf Nc

மீண்டும் மீண்டும் உருவாகும் மோதல்.. ரத்னா நோ சொல்லியும் பரணி செய்த விஷயம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Advertisment

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் ரத்னாவை வெங்கடேஷ் வீட்டிற்கு அழைத்து வந்திருக்க பாண்டியம்மா சண்முகம் கடையை அடமானம் வைத்த விஷயத்தை பரணிக்கு அதில் விருப்பமில்லை என்று கொளுத்தி போட்ட நிலையில் இன்று, பாண்டியம்மா சொன்ன விஷயத்தை கேட்டு எல்லோரும் அதிருப்தி அடைகின்றனர். ஒரு கட்டத்தில் சிவபாலன் பாண்டியம்மாவை திட்டி வெளியே துரத்துகிறான்.

வெளியே வந்த பாண்டியம்மா சௌந்தர பாண்டிக்கு போன் போட்டு இந்த மாதிரி கொளுத்தி போட்டு இருக்கேன். பரணிக்கும் ரத்னாவுக்கும் மோதல் உருவாகி இருக்கு. இதுல சண்முகம் யார் பக்கம் நிற்கிறது என்று குழம்புவான். இதனால் இந்த குடும்பம் உடையும் என்று சொல்கிறாள். அதன் பிறகு ரத்னாவை வெங்கடேஷ் வீட்டில் விட்டுவிட்டு எல்லோரும் வீடு திரும்ப தயாராக ரத்னா பாக்கியத்திடம் வந்து அம்மா எங்களை விட்டுட்டு போன சோகத்துல இருக்கேன் இந்த நேரத்துல முதலிரவு வேண்டாம் என்று சொல்லி பேசுகிறாள்.

ஆனால் பரணி வெங்கடேஷின் அம்மாவிடம் வந்து அவ சின்ன பொண்ணு தெரியாம பேசுறா நீங்க செய்ய வேண்டியத செய்யுங்கள் என்று சொல்கிறாள். இதைக் கேட்டு வெங்கடேஷ் சந்தோஷப்படுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தீபாவுக்காக தர்மலிங்கம் எடுத்த முடிவு.. கார்த்திக் காப்பாற்ற போவது எப்படி? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷூட்டிங் ஸ்பாட்டில் போலீஸ் துப்பாக்கிக்கு பதிலாக ரியல் துப்பாக்கி மாறிவிட கடைசி நொடியில் தீபா கார்த்தியை காப்பாற்றிய நிலையில், இன்று, வீட்டில் தர்மலிங்கம் தீபா சின்ன வயசுல இருந்து ரொம்ப கஷ்டப்பட்ட பொண்ணு தன்னுடைய தம்பியோட மருத்துவ செலவுக்காக தன்னுடைய குரலையே அடமானம் வச்சுட்டா.

உங்கள கல்யாணம் பண்ண பிறகுதான் அதை கொஞ்சம் சந்தோஷமா இருக்க ஆரம்பிச்சா. நீங்க அவளுக்கு கிடைத்தது அதை செய்த பாக்கியம். எப்படியாவது தீபாவை கண்டு பிடிக்கணும் என்று சொல்லி வருத்தப்பட்டு பேச கார்த்திக் கூடிய சீக்கிரம் கண்டுபிடித்து விடலாம் சார் என்று ஆறுதல் சொல்கிறான். 
இன்னொரு பக்கம் ஆசிரமத்தில் இருக்கும் சக்தி தீபாவை தேடி யாரும் வராத காரணத்தினால் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விஷயத்தை சொல்லலாம் என்று முடிவெடுக்கிறாள்.  சக்தி ஸ்டேஷனுக்கு வர அதற்கு முன்னதாக துங்கா ஐஸ்வர்யாவை பார்க்க ஸ்டேஷனுக்கு வந்திருக்க அதைப் பார்த்து சக்தி தனது மனதை மாற்றிக் கொள்கிறாள்.

அடுத்து கோவிலுக்கு வந்த தர்மலிங்கம் தீபா கிடைக்கும் வரை வாசித்துக் கொண்டே இருக்கப் போவதாக சொல்லி உட்கார்ந்து நாதஸ்வரம் வாசிக்க தொடங்குகிறார்.  இது சமயத்தில் ஷக்தி கோவிலுக்கு வர இங்கு நடப்பதை அறிந்து ஒருவேளை தர்மலிங்கம் தான் தீபாவோட அப்பாவாக இருப்பாரோ என யோசிக்கிறாள். அதே நேரத்தில் தூங்க அனுப்பிய ஆள் சக்தியை பார்த்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுடருக்கு பேரதிர்ச்சி கொடுத்த எழில்.. மனோகரியின் ட்ராமாவால் நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

நினைத்தேன் வந்தாய் சீரியலில் நேற்றைய எபிசோடில் எழில் மீண்டும் கோபத்தை காட்ட தொடங்கியதால் சுடர் சோகமான நிலையில் இன்று, சுடர் சோகமாக இருக்க அஞ்சலி என்னாச்சு என்று கேட்க சுடர் ஒன்றும் இல்லை என சொல்லி சமாளிக்கிறாள். அதன் பிறகு அஞ்சலி விளையாடிக் கொண்டிருக்க அங்கு வந்த மனோகரி சுடருக்கு இன்னொரு குழந்தை பிறந்தால் உன் மேல இருக்க பாசம் போயிடும். அப்புறம் நீ அவளை அம்மானு கூப்பிடக்கூடாது சித்தினு தான் கூப்பிடனும் என்று சொல்லி ஏற்றி விடுகிறாள். 

உடனே அஞ்சலி சுடரிடம் வந்து உனக்கு இன்னொரு பாப்பா பிறந்தா என் மேல பாசம் போயிடுமா உன்ன சித்தியின்னு தான் கூப்பிடனுமா என்று கேள்வி கேட்க உனக்கு யார் இப்படி சொன்னது என்று சுடர் திருப்பி கேட்க மனோகரி தான் இப்படி சொன்னதாக சொல்கிறாள். உடனே சுடர் மனோகரிடம் வந்து சத்தம் போட்டு அவளை அறைந்து விடுகிறாள்.

எழில் கீழே இறங்கி வர உடனே மனோகரி ஒரு நாடகத்தை போட சுடர் சொல்ல வருவதை கேட்காமல் எழில் அவளை திட்டி விடுகிறான்.  அதோடு நிறுத்தாமல் சுடரை தனது ரூமுக்குள் அழைத்துச் சென்று ஏற்கனவே தயார் செய்திருக்கும் டாக்குமெண்டில் கையெழுத்து போட சொல்கிறான். அந்த டாக்குமெண்டில் கனகவல்லி அம்மாவுக்கு உடம்பு சரியாகும் வரை நான் இந்த வீட்ல இருக்கிறேன் அவங்களுக்கு உடம்பு சரியானதும் நான் இந்த வீட்டை விட்டு போயிடுவேன் என எழுதி இருக்க அதைப் பார்த்து சுடர் அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment