Advertisment

மருமகனை மாட்டிவிட்ட மாமனார் : மனைவிக்கு நடந்ததை கண்டுபிடிப்பாரா கணவன்? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், சந்தியா ராகம் சீரியல் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee tam

கார்த்திக்கு வந்த சந்தேகம்.. அடுத்தடுத்து வலை வீசும் ரம்யா.. நடக்க போவது என்ன?

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் அபிராமி கொண்டு வந்த ஜூஸில் ரம்யா மாத்திரையை கலந்து தீபாவுக்கு கொடுத்த நிலையில் இன்று, தீபா ஜூஸ் குடித்த கொஞ்ச நேரத்தில் பொருட்கள் எல்லாவற்றையும் தள்ளி விட்டு சைக்கோ போல் நடந்து கொண்டு மயக்கம் போட்டு விழுகிறாள், உடனே கார்த்திக்கு இந்த விஷயத்தை சொல்ல அவன் ஆபிசில் ரம்யாவிடம் பெர்மிஷன் கேட்டு வீட்டிற்கு வருகிறான்.

பிறகு தீபாவை ஹாஸ்பிடல் அழைத்து செல்ல டாக்டர் பயப்படுற மாதிரி எதுவும் இல்ல, டேப்ரெஷனால் இப்படி ஆகி இருக்கும் என்று சொல்லி அனுப்ப மீனாட்சி எதையோ கேட்க வர கார்த்திக் எதுவாக இருந்தாலும் வீட்டிற்க்கு பொய் பேசி கொள்ளலாம் அண்ணி என்று வீட்டிற்கு அழைத்து வருகிறான். பிறகு தீபாவிடம் என்னாச்சு என்று கேட்க அவள் அத்தை ஜூஸ் குடுத்தாங்க, அதை குடிச்ச பிறகு தான் இப்படி ஆச்சு என்று சொல்ல தீபா குடித்து வைத்த ஜூஸ் டம்பளரை எடுத்து கொண்டு கிளம்புகிறான்,

அடுத்த நாள் ரம்யா ஆபிஸ்க்கு அவளை பார்ப்பதற்காக தோழி ஒருவர் வருகிறார், ரம்யா இல்லாத நிலையில் அவளுக்கு போன் செய்து கல்யாண பத்திரிக்கை கொண்டு வந்திருப்பதாக சொல்கிறார். வீட்டு முகவரியும் தெரியாது என்பதால் ஆபிஸிலேயே அம்மு என்று பெயர் எழுதி பி.ஏ-விடம் கொடுக்க ரம்யா அதை தனது கேபினில் வைக்க சொல்கிறாள்.

பிறகு கார்த்திக்கு அம்மு என்ற பெயர் தெரிய கூடாது என்று பதறியடித்து ஆபிஸ் ஓடி வருகிறாள். இங்கு கார்த்திக் ரம்யா ரூமுக்குள் செல்ல அதற்குள் ரம்யா வந்து அந்த பத்திரிகையை மறைத்து விடுகிறாள். அடுத்து ரம்யா கம்பெனிக்கு ஐ.டி ரைடு வருகின்றனர். கணக்கில் காட்டாத பணம் இருப்பதாக சொல்லி எடுத்து செல்ல ரம்யா யார் இப்படி பண்ணது என்று சத்தம் போட ஒருவன் கார்த்திக் தான் ஐ.டி இது அதுனு போன்ல பேசி கொண்டிருந்ததாக சொல்கிறான்

இதை கேட்ட, ரம்யா அவர் இப்படி பண்ணி இருக்க மாட்டாரு என்று ரம்யா சப்போர்ட் செய்து பேசுகிறாள். பிறகு அந்த நபர் கார்த்திக்கு தெரிவது போல் ஆனந்துக்கு போன் செய்து நீங்க சொன்ன மாதிரியே செய்துட்டேன் என்று சொல்லி பேச கார்த்திக் ஆனந்த் தான் இப்படி செய்ய சொன்னதாக புரிந்து கொண்டு அவனிடம் கேட்க அவன் நான் எதுவும் பண்ணல என்று சொல்கிறான். பிறகு ரம்யா கார்த்தியை கூப்பிட்டு கம்பெனி விஷயமா பெங்களூர் போறேன், நீங்களுடம் கூட வாங்க என்று சொல்லி கூப்பிட கார்த்திக்கும் ஓகே சொல்ல பி.ஏ-விடம் ரெண்டு பேருக்கும் டிக்கெட் போட சொல்கிறாள்.

இந்த விஷயம் அறிந்த மாணிக்கம் கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக்கோ.. அப்புறம் இந்த கம்பெனியோட அடுத்த ஓனர் நீ தான் என்று சொல்ல கார்த்திக் தனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புவனேஷ்வரிக்கு ரகுராம் கொடுத்த வாக்கு.. காதலை சொன்ன கார்த்திகை, வீட்டை விட்டு வெளியேறும் தனம் 

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரகுராம் மாயாவை பற்றி முடிவெடுக்கும் உரிமை எனக்கு இல்ல என்று சொல்லிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். ரகுராம் மாயாவை பற்றி சொல்லிய விஷயத்தை கேட்ட மாயாவுக்கு அவர் மீதான மரியாதை அதிகமாகிறது, பிறகு ஜானகி அப்போ நீங்க மாயாவை கொடுக்க சம்மதம் சொல்ல மாட்டிங்களா என்று கேட்க நிச்சயம் சொல்ல மாட்டேன் என்று சொல்கிறார்.

ஆனால் மறுபக்கம் வில்லிகள் டீம் ஒன்று சேர்ந்து இந்த குடும்பம் உனக்காக என்னவெல்லாம் செய்திருக்க, அதையெல்லாம் மறந்துடாத.. ரகுராம் வாக்கு கொடுத்து இருக்காரு. அவருடைய கௌரவம் உன்னுடைய முடிவில் தான் இருக்கு.. இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு என்று சொல்ல மாயா இவர்கள் பேசுவதை கேட்டு கண் கலங்குகிறாள்.

பிறகு புவனேஸ்வரி வீட்டிற்கு வர ரகுராம் என்ன சொல்ல போகிறார் என்று எல்லாரும் எதிர்பார்க்க மாயா இந்த வீட்டுக்கு வந்த விருந்தாளி. அவளோட வாழ்க்கையை பத்தி முடிவெடுக்கிற உரிமை எனக்கு இல்ல, நீ என்னுடைய பொண்ணு தனத்தை கேட்டு இருந்தா கூட நான் மறுக்காமல் சம்மதம் சொல்லி இருப்பேன் என்று சொல்ல தனம் ஷாக்காக புவனேஷ்வரி எனக்கு உன் குடும்பத்துல சம்மந்தம் பண்ணனும்னு தான் ஆசை, உன் பொண்ணை கேட்டா தர மாட்டேன்னு நினைச்சு தான் மாயாவை கேட்டேன் என்று சொல்கிறாள்.

பிறகு தனத்தை கூப்பிட்டு பக்கத்தில் நிற்க வைத்து உன் பொண்ணு என் அண்ணன் வீட்டு மருமகளா வரதுல எனக்கு முழு சந்தோசம் என்று சொல்ல மாயா தன்னை நினைத்து நிம்மதி அடைகிறாள். தனம் அப்பா கொடுத்த வாக்கால் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாள். அடுத்து தனம் காலேஜில் நின்று கண் கலங்கி கொண்டிருக்க கார்த்திக் அவளை கூப்பிட இவள் திரும்பாமல் இருக்கிறாள்.

பிறகு கார்த்திக் தனத்தின் முன்பு வந்து நின்று ஐ லவ் யூ என்று சொல்ல தனம் எதுவும் சொல்ல முடியாமல் திகைத்து நிற்கிறாள், இதுக்கு தானே ஆசைப்பட்ட, இப்போ ஒன்னும் சொல்ல மாட்டுற என்று கார்த்திக் கேட்க ரகுராம் கொடுத்த வாக்கு பற்றி சொல்ல கார்த்திக் அது உங்க அப்பா உன்னை கேட்காமல் கொடுத்தது, அதை பத்தி எனக்கு கவலை இல்லை. நீ உன் அப்பா கிட்ட நம்ம காதலை பற்றி பேசு என்று சொல்லி அனுப்பி வைக்க தனமும் அப்பாவிடம் ஆர்வமாக காதலை பற்றி பேச வருகிறாள்.

இந்த நேரத்தில் ரகுராம் ஜானகியிடம் தனம் என்னுடைய வார்த்தையை மீற மாட்டா என்று நம்பிக்கை எனக்கு இருக்கு என்று பேச இதை கேட்கும் தனம் காதலை பற்றி சொல்ல முடியாமல் தவிக்கிறாள். பிறகு ரூமுக்குள் அழுது கொண்டிருக்க இதை பார்த்த ஷாரு கார்த்திக்கு போன் செய்து தனம் உங்க மேல உயிரா இருக்கா.. நீங்க இல்லாமல் அவளால் இருக்க முடியாது.. பேசாமல் நீங்க ஊரை விட்டு ஓடிடுங்க. நீங்க சொல்ற நேரத்துக்கு தனம் தயாரா இருப்பா என்று சொல்ல தனமும் வேறு வழியின்றி இதுக்கு சம்மதம் தெரிவித்து துணிகளை பேக்கப் செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தண்ணீரில் கலக்கப்பட்ட விஷம்.. ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட ஷண்முகம்.. பரணி விட்ட சவால்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டியின் திட்டத்தின் படி ஷண்முகம் தண்ணீர் திறக்க கிளம்பிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

வீராசாமி போதையில் விழுந்து கிடப்பதை பார்த்த சண்முகம் தண்ணீரை திறந்து விட்டு வந்து விடுகிறான், அதன் பிறகு சனியன் சௌந்தரபாண்டிக்கு போனை போட்டு நம்ம பிளான் பண்ண மாதிரி சண்முகம் தண்ணீரை திறந்திட்டான் என்று சொல்கிறான். அடுத்ததாக சனியனும் இன்னொரு ஆளும் சேர்ந்து தண்ணீரில் விஷத்தை கலக்கின்றனர்.

மறுநாள் காலையில் பரணி கிளினிக்கில் இருக்க ஒரு பெண்மணி குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று தூக்கி வர என்னாச்சு? என்ன சாப்பிட்டான் என்று விசாரிக்க தண்ணீர் மட்டும் தான் குடிச்சான் என்று சொல்கிறார். அடுத்தடுத்து ஒவ்வொருத்தராக உடம்பு முடியாமல் வர தொடங்க மறுபக்கம் முத்துப்பாண்டி சண்முகம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தண்ணீரில் விஷத்தை கலந்ததாக சொல்லி சண்முகத்தை கைது செய்கிறான்.

ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து அவனை அடி வெளுக்க சண்முகம் நான் தண்ணீரை மட்டும் தான் திறந்தேன், வேற எதுவும் எனக்கு தெரியாது என்று தனது தரப்பு நியாயத்தை சொல்ல முத்துப்பாண்டி அதை கேட்க மறுக்கிறான், சௌந்தரபாண்டிக்கு போனை போட்டு அந்த சண்முகத்தை கைது பண்ணியாச்சு, நேரில் பார்த்து ரசிக்கிறதா இருந்தா ஸ்டேஷனுக்கு வா என்று சொல்கிறான். விஷயம் அறிந்து ஸ்டேஷனுக்கு வந்த பரணி முத்துபாண்டியிடம் புருஷனுக்காக வாக்குவாதம் செய்கிறாள்.

ஒரு கட்டத்தில் இந்த காக்கி சட்டை இருக்கிறதுனால தானே உன் இஷ்டத்துக்கு அராஜகம் பண்ணிட்டு இருக்க, என் புருஷன் தப்பு பண்ணலன்னு நிரூபித்து உன் காக்கி சட்டையை கழட்டி உட்கார வைக்கிறேன் என்று சவால் விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment