Advertisment

தாய் பாசத்தை காட்டும் வில்லன்: ஹீரோவிடம் மாட்டுவாரா வில்லி; ஜீ தமிழ் சீரியல் சனி, ஞாயிறு எபிசோடுகள்!

ஜீ தமிழின் அண்ணா, சந்தியா ராகம் மற்றும் கார்த்திகை தீபம் சீரியல்களின் சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகள் பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
zee tamil anna KP Nv

தீபா குறித்து கார்த்திக்கு கிடைத்த தகவல்.. போன் காலால் கதி கலங்கும் ரம்யா

Advertisment

கார்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக், இளையராஜா, மாணிக்கம் ஆகியோர் சேர்ந்து தீபாவை தேட தொடங்கிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்

அதாவது, ரியா சாமியார் வேடத்தில் இருக்க அங்கு வந்த ஐஸ்வர்யா நீ சூப்பர் வேலை பண்ண, தீபாவை தூக்கின மாதிரி அடுத்து மீனாட்சியை தூக்கி காலி பண்ணு.. அப்படியே ஒவ்வொருத்தரா தீர்த்து கட்டிடு, என் புருஷனை மட்டும் விட்டுடு என்று சொல்ல ரியா நான் எல்லாரையும் கொன்னுட்டு ஜெயிலுக்கு போகணும், நீ இங்க சொகுசா வாழணுமா என்று கேட்டு ஷாக் கொடுக்கிறாள்.

மேலும் நான் தீபாவை கடத்தல என்று சொல்ல ஐஸ்வர்யா யாரோ ஒரு சாமியாரை நம்பி தான் தீபா போய் இருக்கா என்ற விஷயத்தை சொல்ல ரியா சந்தோசப்படுகிறாள். இதையடுத்து காட்டம்மன் கோவிலில் தீபா காட்டப்படுகிறாள். சாமியார் அவளது கையை பிடித்து மந்திரத்தை சொன்னதும் அவளுக்குள் ஏதோ ஒரு எனெர்ஜி உருவானது போல் பீல் பண்ணுகிறாள்.

இதையடுத்து சாமியார் பரிகாரத்தை செய்ய தொடங்கலாம் என்று சொல்ல தீபா ரம்யாவுக்கு போன் போட்டு எங்க இருக்க? என்று விசாரிக்க நீ எங்க இருக்க என்று கேட்க தீபா கோவிலில் இருக்கும் விஷயத்தை சொல்ல ரியா கோவிலுக்கு கிளம்பி வருகிறாள். தீபாவை கூட்டி கொண்டு பரிகாரம் செய்யும் இடத்திற்கு கிளம்பி செல்கிறாள்.

மறுபக்கம் கார்த்திக் மைதிலிக்கு போன் செய்து தீபா குறித்து விசாரிக்க செங்கல்பட்டு பக்கத்தில் இருக்க சாமியாரை பார்க்க போய் இருக்கா, ஆனால் பரிகாரம் பத்தி எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல கார்த்திக் இளையராஜாவிடம் செங்கல்பட்டு சாமியார் குறித்து கேட்க எனக்கு அங்க இருக்க முனீஸ்வரன் கோவில் பூசாரி ஒருத்தரை தெரியும். அவரை போய் பார்த்தா நமக்கு தகவல் கிடைக்கும் என்று சொல்கிறான்.

இதையடுத்து கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்ய காரில் தீபாவுடன் இருக்கும் அவள் வாந்தி வருவதாக சொல்லி வெளியே வந்து போனை அட்டென்ட் செய்து பேச அவன் தீபாவை பற்றி விசாரிக்கிறான், எனக்கு எதுவும் தெரியல என்று ரம்யா சொல்ல செங்கல்பட்டு சாமியார் குறித்து விசாரிக்க ரம்யா ஷாக் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தாய் பாசத்தை கொட்டி தீர்க்கும் முத்துப்பாண்டி.. சண்முகத்தை பிரியும் பரணி?

அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் பாக்கியத்தை குத்தியதும் முத்துப்பாண்டி இதுவரை இல்லாத அளவிற்கு உடைந்து அழுத நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

சௌந்தரபாண்டி இனிமே என் முகத்திலேயே முழிக்காத என்று பரணியை துரத்தி விட பாக்கியத்தை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்கின்றனர். சௌந்தரபாண்டி பாக்கியத்துக்கு ஏதாவது ஆகணும், அதையே காரணமா வச்சி அந்த சண்முகத்தையும் பரணியையும் பிரிச்சிடுவேன் என்று கணக்கு போடுகிறார். அடுத்து ஹாஸ்பிடலில் பெரிய டாக்டர் இல்லை என்று அதிர்ச்சி கொடுக்க அழுது துடிக்கும் முத்துப்பாண்டி என் தங்கச்சியே டாக்டர் தான் என்று சொல்லி இசக்கியிடம் பரணிக்கு போன் போட்டு வர சொல்லு என்று சொல்ல சௌந்தரபாண்டி ஷாக்காகி அவ எதுக்கு என்று கேட்க முத்துப்பாண்டி நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க என்று ஆவேசப்படுகிறான்.

இதையடுத்து பரணி ஓடி வந்து அம்மாவுக்கு சிகிச்சை பார்த்து அவளை காப்பாற்ற மறுபக்கம் சண்முகம் கோவிலில் என் அம்மா மாதிரி இருந்த என் அத்தையையே குத்திட்டேன். இனிமே அருவாள் எடுக்க மாட்டேன். என் அத்தையை காப்பாத்திடு என்று வேண்டுகிறான், நைட்டெல்லாம் அப்படியே உட்கார்ந்து கடவுளை வேண்டியபடி இருக்கிறான்.

இதை தொடர்ந்து பாக்கியம் கண் விழிக்க வெட்டுக்கிளி ஓடி வந்து சண்முகத்திடம் விஷயத்தை சொல்லி ஹாஸ்பிடல் அழைத்து செல்கிறான். பாக்கியத்தை பார்க்க வந்த சண்முகம் இனிமே எப்பவும் அரிவாள் எடுக்க மாட்டேன் என்று கண் கலங்கி அழுது மன்னிப்பு கேட்க பாக்கியம் நீ ஜெயிலுக்கு போக கூடாதுனு மட்டும் தான் நான் நினைச்சேன் என்று சொல்கிறாள்.

பிறகு பாக்கியத்தை டிஸ்ஜார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து செல்ல பரணி சண்முகத்திற்கு வேண்டா வெறுப்பாக சாப்பாடு போட அவன் சாப்பிடாமல் எழுந்து சென்று விடுகிறான். அதன் பிறகு பரணி தனது வீட்டிற்கு போன் செய்து என்னுடைய சர்டிபிகேட், பாஸ்போர்ட் எல்லாம் எடுத்திட்டு வாங்க, நான் அமெரிக்கா போக போறேன். இனிமே இவனோட வாழ முடியாது. இந்த வீட்டில் வாழ பிடிக்கல என்று அதிர்ச்சி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தனத்திற்கு தெரிய வந்த மாயாவின் காதல்.. பஞ்சாயத்தில் உடைந்ததா உண்மை?

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த ரகுராம் பஞ்சாயத்தில் நடந்த விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, மணிவண்ணன் சீனுவிடம் பஞ்சாயத்தில் உண்மையை சொல்லிடு என்று சொல்கிறார். அடுத்து மாயா கிஷோரை சந்தித்து எதுக்கு இப்படி பண்ணீங்க என்று கேட்க கிஷோர் ரெண்டு பக்கமும் உண்மை இருக்கு என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறான். அடுத்து லிங்கம் வீட்டிற்கு வந்து என்ன இதெல்லாம் என்று சத்தம் போட ரகுராம் அப்படியல்லாம் இருக்க வாய்ப்பில்லை என்று சொல்ல அதை சீனுவை சொல்ல சொல்லுங்க என்று சொல்கிறான்.

மணிவண்ணன் பஞ்சாயத்தில் சொல்லுவான் என்று பதிலடி கொடுக்கிறான். அடுத்ததாக மாயா யோசனையில் இருக்க அங்கு வந்த தனம் நீ சீனு மாயாவை தான் காதலிக்கிறியா என்று கேட்க மாயா இல்லை என்று சமாளிக்க டைரியை எடுத்து கொடுத்து ஷாக் கொடுக்க மாயா தனது காதலை ஒப்பு கொள்கிறாள். இந்த குடும்பத்துக்காக உன்னுடைய காதலை விட்டு தராத, பஞ்சாயத்தில் உண்மையை சொல்லிடு என்று தனம் அட்வைஸ் செய்கிறாள். 

அடுத்த நாள் காலையில் பஞ்சாயத்து கூட முதலில் மாயாவை கூப்பிட்டு விசாரிக்க அப்பாவா? பெரியப்பாவா? என்று யோசிக்கும் அவள் இறுதியாக சீனுவுடன் காதல் இல்லை, இவங்க சொல்றது பொய் என்று சொல்கிறாள். அதன் பிறகு சீனுவை கூப்பிட்டு விசாரிக்க பிளாஷ்கட் ஒபனாகிறது. சீனுவை சந்திக்கும் மாயா பஞ்சாயத்தில் உண்மையை சொன்னால் என்னை நீ பாக்குறது இது தான் கடைசியா இருக்கும் என்று சொன்னது தெரிய வர சீனுவும் எங்களுக்குள் காதல் இல்லை என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment