Advertisment

போலீஸ் காட்டும் வில்லத்தனம்... மாமியாரை சுட்டு வீழ்த்தும் மருமகள் : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் சீதாராமன், சந்தியா ராகம், அண்ணா ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Santhiya ragam Anna Seetha

அண்ணா - சந்தியா ராகம் - சீதாராமன்

முத்துபாண்டிக்கு கல்யாணம்.. சண்முகத்துக்கு ஆப்பு வைக்க பாண்டியம்மா போடும் பலே திட்டம்

Advertisment

அண்ணா  சீரியலின் நேற்றைய எபிசோடில், உடம்பு முடியாமல் சமைக்காமல் படுத்திருந்த பாக்கியத்தின் முடியை பிடித்து பாண்டியம்மா சண்டைக்கு போன நிலையில் இன்று, பாக்கியம் பாண்டியம்மா முடியை பிடித்ததும் டேய் சிவபாலா அந்த அரிவாளை எடுத்து வந்து இவை கூந்தலை அறுடா என்று சொல்கிறாள், மேலும் நான் பழைய பாக்கியம்னு நினைசீங்களா என்று கோபப்பட சிவபாலன் என் அம்மா மேல இருந்து கையை எடுக்கறியா? இல்லையா? என்று மிரட்டுகிறான்.

அப்போது சௌந்தரபாண்டி ஓடி வந்த நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இவ இல்ல, இப்போ ரொம்ப மாறிட்டா, இவளை வேற மாதிரி தான் டீல் பண்ணனும் என அழைத்து செல்கிறார். அடுத்து இங்கே சண்முகம் வலியில் தூக்கம் வராமல் தவிக்க, பரணி அவன் தூக்குவதற்கும் வலி குறைவதற்கும் ஊசி போட்டு விடுகிறாள். சண்முகம் பரணியை அம்மா என நினைத்து உருக்கமாக பேசுகிறான், உன் மடியில் படுத்துக்கட்டுமா என்று கேட்க பரணி சண்முகத்தை மடியில் சாய்த்து கொள்கிறாள்.

பிறகு சண்முகம் கண் திறக்காமல் அம்மா என நினைத்து நீ எப்பயும் என்னை விட்டு போக மாட்டானு சத்தியம் பண்ணு என கையை நீட்ட பரணியும் சத்யம் செய்ய வரும் போது சண்முகம் கையை கீழே போட்டு விடுகிறான். மறுநாள் காலையில் சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டி மற்றும் பாண்டியம்மா ஆகியோர் ஒன்று கூடி இருக்க, பாண்டியம்மா முத்துபாண்டிக்கு ஒரு பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று சொல்கிறாள்.

இதை கேட்ட முத்துப்பாண்டி நான் ரத்னா கழுத்தில் தான் தாலியை கட்டுவேன் என்று சொல்கிறான். அதற்கு பாண்டியம்மா முதல்ல ஒரு பொண்ணை பார்த்து கல்யாண ஏற்பாடுகளை கவனிப்போம். நாம மாறிட்டோம்னு நினைச்சிட்டு சண்முகம் குடும்பத்துல எல்லாரும் கல்யாணத்துக்கு வருவாங்க. கடைசி நேரத்துல ரத்னா கழுத்தில் தாலியை கட்டிடு, அப்புறம் அந்த ரத்னா தான் இந்த வீட்டு மருமகள், அதை யாராலும் மாற்ற முடியாது, இது தான் என்னுடைய பிளான் என்று சொல்கிறாள். இதனால் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஜானகிக்கு ஷாக் கொடுத்த ரமணியம்மா.. மாயா விஷயத்தில் ரகுராம் எடுக்க போகும் முடிவு என்ன?

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா மீது பயங்கர கோபத்துடன் ரகுராம் காலேஜ் வர, ஒரு விதவை பெண் பேசிய விஷயத்தை கேட்டு மனம் மாறி மாயாவுக்கு ஆதரவாக பேசிய நிலையில் இன்று, ரகுராம் மாயாவுக்கு ஆதரவாக பேச, தனம் ஆச்சரியத்துடன் நிற்கிறாள், அதன் பிறகு ரகுராம் மாயா மற்றும் தனத்தை அழைத்து கொண்டு வீட்டிற்கு கிளம்புகிறார்.

காரில் வரும் போதும் நீங்க பண்ணதுல எந்த தப்பும் இல்லை என்று சொல்ல, மாயா ஆச்சரியமடைகிறாள். ரகுராம் மீது நல்ல எண்ணமும் வருகிறது. மறுபக்கம் ஜானகி, ரகுராம் இனிமே மாயா இந்த வீட்டில இருக்கவே கூடாது, அவ துணியையெல்லாம் மூட்டை கட்டி வை என்று சொல்லி கிளம்பியதை நினைத்து நினைத்து வருத்தப்படுகிறாள். மாயாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதை எப்படி தடுப்பது என யோசிக்கிறார்.

இந்த நேரம் பார்த்து ஜானகி அருகே வரும் ரமணி பாட்டி, தனம் வழி தவறி போனதையும், அவளை மாயா காப்பாற்றிய விஷயத்தையும் நினைத்து பார்க்கிறாள். ஜானகியிடம் மாயாவை பார்த்துக்கணும்னு நீ உன் பொண்ணை பார்த்துக்க தவறிட்ட என்று சொல்ல, அதை கேட்டு ஜானகி அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உமா மீது விழுந்த திருட்டு பழி.. மகாவை கொல்ல துணிந்த சீதா

சீதா ராமன், சீரியலின் நேற்றைய எபிசோடில் சுபாஷ் பண திருட்டு விஷயத்தில் சிக்க, சீதா மகாவை பார்த்து உங்க முகத்திரையை கிழிக்காமல் விட மாட்டேன் என்று சவால் விட்ட நிலையில் இன்று, சீதாவின் அம்மா உமா சொந்த கார பொண்ணுக்கு குழந்தை பிறந்து இருப்பதால் இரண்டு நாள் ஊருக்கு போயிட்டு வருவதாக கிளம்ப மகா, சீதாவை பழி வாங்க இதை சாதகமாக்கி கொள்ள பிளான் போடுகிறாள். யாருக்கும் தெரியாமல் உமாவின் பையில் தங்க நகைகளை எடுத்து போட்டு விட உமாவும் ஊருக்கு கிளம்பி செல்கிறாள். அதன் பிறகு கொஞ்ச நேரத்தில் நகையை காணவில்லை என்று மகா சொல்ல, எல்லாரும் அதிர்ச்சி அடைய அஞ்சலி, ப்ரியா, காவியா ஆகியோர் சீதாவோட அம்மா தான் இங்க இருந்தாங்க, அவங்க தான் எடுத்து இருக்கணும் என்று சொல்கிறார்கள்.

இதை கேட்ட சீதா அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று சொல்கிறாள். மகா போலீஸ்க்கு தகவல் கொடுக்க போலீஸ் பஸ் ஏற போன உமாவை சுற்றி வளைத்து பேக்கை பரிசோதிக்க அதில் நகைகள் இருப்பதால் உமாவை கைது செய்கின்றனர். உமாவை ஜெயிலுக்குள் அடைக்க இந்த விஷயம் அறிந்த சீதா மீரா மற்றும் சத்யன் உதவியுடன் ஜாமினில் வெளியே கொண்டு வருகின்றனர். உமா சத்தியமா அந்த நகையை நான் எடுக்கல என்று அழுது துடிக்கிறார்.

பிறகு உமாவை கூட்டி கொண்டு வீட்டிற்கு வர, மகா தடுத்து நிறுத்தி நகையை திருடியவள் இந்த வீட்டிற்குள் வர கூடாது என ஆவேசப்படுகிறாள். உமா நான் திருடல என்று சொல்லியும் மகா நம்பாமல் உமாவை அறைய சீதா அதிர்ச்சி அடைகிறாள். ஆவேசத்துடன் உள்ளே போகும் சீதா என் அம்மாவையா அடிச்சீங்க என்று துப்பாக்கியை எடுத்து சுட மகா ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிக்கிறாள்.

இரவு நேரத்தில் மகா ஹாலில் நடந்து கொண்டிருக்க யாரோ அவளை துப்பாக்கியால் சுட்டு தள்ளுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment