சாமுண்டீஸ்வரியை குத்த வந்த சிவனாண்டி.. ரூமுக்குள் அடைக்கப்பட்ட கார்த்திக், நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம், சீரியலின் நேற்றைய எபிசோடில் சூளைக்கு கிளம்பும் சாமுண்டீஸ்வரியை போட்டு தள்ள சிவனாண்டி திட்டமிட்ட நிலையில் இன்று, ஸ்வேதா சாமுண்டீஸ்வரியை யாரோ வெட்ட வருவது போல் கனவு கண்டு பயப்பட்டு சாமுண்டேஸ்வரியிடம் விஷயத்தை சொல்ல அவள் அதெல்லாம் ஒன்னும் ஆகாது, சூளைக்கு தானே போறேன் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி கிளம்பி ட்ரைவர் எங்கே என்று கேட்கிறாள்.
இந்த சமயத்தில் சந்திரகலா கார்த்தியை ரூமுக்குள் வைத்து வெளியில் தாழ் போட்டு விட ட்ரைவரை தேடிய சாமுண்டேஸ்வரி பிறகு தனியாக கிளம்பி வருகிறாள். அடுத்து கார்த்தி இருக்கும் ரூம் கதவை திறந்து விட அவன் யார் ரூமை லாக் பண்ணது, அம்மா கூப்பிட்டாங்க எங்கே அவங்க என்று கேட்க சூளைக்கு சென்று விட்டதாக சொல்கிறார்கள்.
அடுத்து கார்த்திக் ராஜராஜனை பார்க்க வர அவன் துப்பாக்கிக்கு பாலிஸ் போட்டு கொண்டிருக்க கார்த்திக் என்ன மாமா சாமுண்டேஸ்வரி அத்தை இதை கொண்டு போகலையா என்று கேட்கிறான். சூளைக்கு தானே போய் இருக்கா.. அங்க நம்ம ஆளுங்க தான் இருப்பாங்க. அதனால் துப்பாக்கி தேவையில்லை என்று சொல்கிறார்.
கார்த்திக் ராஜராஜனை மாமா என்று கூப்பிட்டதை பார்த்த சந்திரகலா என்ன மாமானு கூப்பிடுறியே என்று கேட்க எனக்கு இங்கிலிஷ் தெரியாது, அதனால் அப்படி கூப்பிட்டதாக சமாளிக்கிறான். மறுபக்கம் சாமுண்டேஸ்வரி சூளைக்கு வர சிவனாண்டி ஆட்கள் அவளை சுற்றி வளைக்கின்றனர். சிவனாண்டி முதுகில் குத்த வர சாமுண்டீஸ்வரி சுதாரித்து அவனிடம் சண்டை போட்டு பிடித்து தள்ளி விடுகிறாள்.
இருந்தாலும் ரவுடிகள் சாமுண்டீஸ்வரியை லாக் செய்து விட சிவனாண்டி குத்த வர கார்த்திக் என்ட்ரி கொடுத்து சிவனாண்டியையும் அவனது ஆட்களையும் அடித்து ஓட விடுகிறான். சாமுண்டீஸ்வரி சிவனாண்டியை பார்த்து உங்க அப்பா என் கையால் தான் செத்தான், உனக்கும் என் கையால் தான் சாவு என்று சொல்ல கார்த்திக் இதை கேட்டு ஷாக் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோமா ஸ்டேஜில் ரத்னா.. பரணி கொடுத்த அதிர்ச்சி, சண்முகம் செய்ய போவது என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி தனது தோழிகளை வர வைத்து ரத்னாவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க தொடங்கிய நிலையில் இன்று, ரத்னவிற்கு ட்ரீட்மெண்ட் முடிந்து வெளியே வரும் பரணி இனிமே பயப்படுற மாதிரி எதுவும் இல்ல, ஆனால் ரத்னா கோமா ஸ்டேஜ் போக நிறைய வாய்ப்பு இருக்கு என்று அதிர்ச்சி கொடுக்கிறாள்.
மேலும் ரத்னாவிடம் பேசி பேசி தான் அவளை நினைவிற்கு கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறாள். பிறகு பரணி உள்ளே சென்று ரத்னா பக்கத்தில் உட்கார்ந்து என்னை மன்னிச்சுடு டி.. நீ நல்லா இருக்கணும்னு நினைத்து தான் நான் திரும்பவும் உன்னை அந்த வீட்டில் கொண்டு போய் விட்டேன். இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிந்து இருந்தா இப்படி பண்ணி இருக்க மாட்டேன் என்று பேசுகிறாள்.
அதை தொடர்ந்து தங்கைகள் ஒவ்வொருத்தராக உள்ளே சென்று ரத்னாவிடம் பேசி அவளை கண் விழிக்க வைக்க முயற்சி செய்கின்றனர். ஆனாலும் ரத்னாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்க பரணி ஷண்முகத்திடம் நீ போய் பேசு, அவ கண்டிப்பா கண் விழிப்பா என்று சொல்கிறாள்.
பிறகு உள்ளே வரும் சண்முகம் ரத்னா பக்கத்தில் உட்கார்ந்து ஏலே ரத்னா அண்ணாவை மன்னிச்சுடு, இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிந்து இருந்தா உன்னை அந்த வீட்டிற்கு அனுப்பி இருக்க மாட்டேன் என்று கண் கலங்கி பேச ரத்னா கண் திறக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவிலில் வைத்த ரகுராமை அவமானப்படுத்திய புவனேஸ்வரி.. மாயாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்
சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் சீனு மாயா பெயரை பச்சை குத்தி கொண்டிருப்பதை பார்த்து பத்மா ஷாக்கான நிலையில் இன்று, மாயாவுக்கு தனத்தின் தோழியிடம் இருந்து ஒரு போன் கால் வர மாயா அவளை பார்க்க வீட்டிற்கு செல்ல அங்கு மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள், இதற்கு காரணம் தனத்தின் தோழி ஒருவனை காதலிக்க அவன் தப்பான வீடியோ எடுத்து அதை இணையத்தில் பதிவு செய்தது தான் என தெரிய வருகிறது.
இதனை தொடர்ந்து மாயா தனத்திற்கு இந்த மாதிரி பிரச்சனை வர கூடாது, அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் கிளம்பி வருகிறாள். அடுத்ததாக கோவில் திருவிழாவிற்காக எல்லாரும் ஒன்று கூடுகின்றனர். கார்த்திகை தீப திருவிழாவிற்காக ரகுராம் வீட்டில் இருக்கும் கிரீடத்தை ரகுராம் ஐயா கொண்டு வந்து அம்மனுக்கு சாற்ற வேண்டும் என்று சொல்கிறாள்.
புவனேஸ்வரி யாருக்கு அவருடைய வீட்டிலேயே மரியாதை இல்ல.. கொடுத்த வாக்கை தவறிட்டாரு, அவர் கிரீடத்தை கொண்டு வரணுமா என அவமானப்படுத்த ஊர் காரர்கள் நீங்களே யோசித்து முடிவெடுங்க என்று சொல்ல ரகுராம் கோபமாக வீட்டிற்கு வருகிறார். செப்பல் காலுடன் வீட்டிற்குள் நுழைய இதை பார்த்த ஜானகி குழப்பமடைந்து என்னாச்சு என்று சிவராமனிடம் கேட்க நடந்த விஷயத்தை சொல்ல ஜானகி இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறாள்.
அவர் இல்லலைனா என்ன நீங்க கொண்டு வராதா சொல்லி இருக்கலாமே தம்பி என்று சொல்ல நான் அண்ணனை கடவுளாக பார்க்கிறேன், அண்ணன் செய்யாததை என்னால் செய்ய முடியாது என்று சொல்கிறார். மறுபக்கம் புவனேஸ்வரி ரகுராம் கிரீடம் கொண்டு வர மாட்டான் என்று சொல்ல அதற்கேற்றார் போல இங்கே ரகுராம் நான் கிரீடம் கொண்டு போக மாட்டேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.