Advertisment

சூழ்ச்சியை அறியாத ஹீரோயின்... கனவை நம்பி களமிறங்கும் ஹீரோ : என்ன நடக்க போகுதோ!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா - கார்த்திகை தீபம்- சந்தியா ராகம் சீரியலிகளின் இன்றைய எபிசோடு குறித்து இங்கே பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
Anna Kd Sith

ஜீ தமிழ் அண்ணா - கார்த்திகை தீபம்- சந்தியா ராகம்

அருணாச்சலத்தால் உருவான போட்டி.. அபிராமியை சரிய வைத்த தீபா –

Advertisment

கார்த்திகை தீபம், சீரியலின் நேற்றைய எபிசோடில் பொங்கல் விழாவிற்கு தீபா ஏற்பாடு செய்த கெஸ்ட்டுகளாக விவசாயிகளும் வியாபாரிகளும் வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பொங்கல் வைக்க இன்னும் நேரம் இருக்கே, அதுவரைக்கும் எதுக்கு சும்மா இருக்கனும் எதாவது விளையாடலாம் என்று அருணாச்சலம் சொல்கிறார். பிறகு நம்ம வீட்டு பெண்களை மட்டும் வச்சி மியூசிக் சேர் விளையாட்டு விளையாடலாம் என்று சொல்கிறார். அடுத்து விளையாட்டிற்கான ஏற்பாடுகள் தொடங்க ஒவ்வொருத்தராக வெளியேற கடைசியில் தீபா சேரை பிடிக்க அபிராமி சரிந்து கீழே விழுகிறாள்.

பிறகு தீபா அபிராமியிடம் மன்னிப்பு கேட்க நீ வேணும்னு தான் இப்படி பண்ணியிருப்ப என்று திட்டுகிறாள். பொங்கல் வைக்கிற போட்டியில் உன்னை தோற்கடிக்கிறேன் என மனதுக்குள் சபதம் எடுக்கிறாள். அதன் பிறகு பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. தீபா கார்த்திக்கிடம் நீங்க தான் நானும் அத்தையும் செய்யற பொங்கலை சாப்பிட்டு பார்த்து எது நல்லா இருந்ததுனு சொல்லணும் என்று சொல்கிறாள்.

இதற்கிடையில் ஐஸ்வர்யா கல் உப்பை சக்கரை போல் தூள் செய்து அதை சக்கரை பாட்டிலுக்கு மாற்றி தீபா பொங்கல் வைத்திருக்கும் பொருட்களில் வைத்து விடுகிறாள். பொங்கல் வைக்கும் போட்டி தொடங்க தீபாவுக்கு உதவியாக மீனாட்சியும் அபிராமிக்கு உதவியாக ஐஸ்வர்யாவும் களத்தில் இறங்குகின்றனர். அபிராமி சக்கரையை தேட, தீபா வைத்திருக்கும் பொருட்களில் கலந்திருக்கிறது.

இதனால் நீ வெல்லத்தை வைத்து தான் பொங்கல் செய்ய போற? அப்புறம் எதுக்கு சக்கரை என திட்டி விட்டு அதை எடுத்து வந்து பொங்கல் வைக்க இருவரது பொங்கலும் ஒரே நேரத்தில் பொங்குகிறது. பிறகு பொங்கலை எல்லாருக்கும் கொடுக்க அபிராமியின் பொங்கல் உப்பு கரிக்க குடும்பத்தார் யாரும் அதையும் வெளியில் சொல்லாமல் மறைத்து விட கெஸ்ட்டாக வந்திருந்தவர்கள் அபிராமி பொங்கல் உப்பாக இருப்பதாக சொல்லி விடுகின்றனர்.

இதன்பிறகு அபிராமி டேஸ்ட் செய்து பார்த்து விட்டு தீபாவின் பொங்கல் தான் நன்றாக இருப்பதாக ஒப்பு கொள்ள ஐஸ்வர்யா அதிர்ச்சியாக தீபா மகிழ்ச்சியாகிறாள். பிறகு தீபா அபிராமியை சந்தித்து நன்றி சொல்ல நீ வேணும்னு தான் இப்படி பண்ணி இருப்பேனு எனக்கு நல்லாவே தெரியும், மத்தவங்க முன்னாடி நம்ம குடும்ப மானம் போக கூடாதுனு தான் நான் அமைதியா இருந்தேன், நான் என்னைக்கும் உன்னை நம்பவும் மாட்டேன், என் மருமகளா ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன் என்று கோபப்படுகிறாள். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சூடாமணி கண்ட கனவு.. சண்முகத்துக்கு வந்த வார்னிங், நடக்க போவது என்ன?

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் பரணி மடியில் படுத்து கொண்டு அம்மாவாக நினைத்து சத்தியம் கேட்க பரணியும் சத்தியம் செய்ய வந்த நேரத்தில் கையை கீழே போட்ட நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, மறுநாள் தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளும் சண்முகம் கத்திக்குத்து நடந்த இடத்தை தொட்டு பார்த்து வலியை உணர்ந்து கையில் வேல் எடுத்து கொண்டு முத்துப்பாண்டி மற்றும் சௌந்தரபாண்டியை குத்த கிளம்புகிறான், எல்லோரும் தூங்கி கொண்டிருக்க சண்முகம் யாருக்கும் தெரியாமல் வெளியே வரும் போது கனியின் காலை மிதிக்க அவள் கத்த எல்லாரும் எழுந்து கொள்கின்றனர்.

இதனை தொடர்ந்து சண்முகம் வேலுடன் இருப்பதை பார்த்து எல்லாருக்கும் சந்தேகம் வர, சண்முகம் சும்மா வெளிய போயிட்டு வரேன் என்று சொல்கிறான். பரணி நீ எங்க போறேன்னு தெரியும் அதெல்லாம் போக வேண்டாம் என்று சொல்ல, என்ன உன் அண்ணனை காப்பாற்ற பாக்குறியா என்று கேட்க, பரணியும் ஆமாம் என்று சொல்லி வேலை பிடிங்கி கொண்டு உள்ளே சென்று விட, மற்றவர்கள் அவ உன்மேல நிறைய பாசம் வச்சிருக்கா என்று சொல்கின்றனர்.

இருந்தாலும் சண்முகம் ஆவேசமாக பேசி கொண்டிருக்க, நீ வீரனு எங்களுக்கு தெரியும் முதல்ல இந்த டீயை குடி என இசக்கி ஆப் செய்து விடுகிறாள். அடுத்ததாக சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டி, பாண்டியம்மா ஆகியோர் பெண்ணை பார்த்து கல்யாணம் முடிவு செய்கின்றனர். பாண்டியம்மா எப்படியாவது அந்த சண்முகத்தை நம்ப வைத்து குடும்பத்தோடு கல்யாணத்துக்கு வர வைக்கணும் என்று சொல்ல சௌந்தரபாண்டி அதுக்கு பாக்கியத்தை நம்ப வைத்தாள் போதும் என சொல்லி வீட்டிற்கு வந்து தனது கழுத்தில் கத்தியை வைத்து முத்துபாண்டியை மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க பாக்கியமும் நம்பி விடுகிறாள்.

உடனே பாக்கியம் வைகுண்டம் வீட்டிற்கு வந்து இந்த விஷயத்தை சொல்ல எல்லாரும் சந்தோசப்பட சணமுகத்திற்கு மட்டும் ஒரு சின்ன சந்தேகம் இருக்கிறது, இதே நேரத்தில் ஜெயிலில் இருக்கும் சூடாமணி மூன்று குழந்தைகளுடன் இருக்கும் போது யாரோ ஒருவர் ஒரு குழந்தையை தூக்கிட்டு போற மாதிரி கனவு கண்டு அலண்டு எழுகிறாள். அதே போல் சண்முகம் தூங்கி கொண்டிருக்கும் போது சூடாமணி கனவில் வந்து சண்முகம் அம்மா வந்திருக்கேன் கதவை திறடா என்று சொல்வது போல் இருக்க ஓடி வந்து கதவை திறக்க யாரும் இல்லாமல் இருக்கின்றனர்.

வீட்ல எல்லாரும் என்னாச்சு என்று கேட்க சண்முகம் அனைவரையும் சமாளித்து விட்டு சூடாமணியை பார்க்க வர அவள் மூன்று தங்கச்சிகளையும் பத்திரமாக பாத்துக்க எனக்கு என்னமோ தப்பா தோணுது என்று சொல்ல, வீட்டிற்கு வரும் சண்முகம் ஸ்கூல், காலேஜ் என வெளியே கிளம்பும் தங்கைகளை எங்கேயும் போக கூடாது என தடுத்து நிறுத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சந்தியா ராகம் சீரியல் டைம் மட்டுமில்ல ஹீரோயினும் மாற்றம், வெளியேறியது யார்

சந்தியா ராகம் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. காலேஜ்க்கு போன முதல் நாளே மாயா ஆடை கட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டத்தில் இறங்க அவளுக்கு ஆதரவாக மொத்த மாணவிகளும் போராட்டத்தில் குதிக்க, கோபத்துடன் காலேஜ் வந்த ரகுராம் திடீரென மாயாவுக்கு ஆதராவாக பேசி ட்விஸ்ட் கொடுத்தார்.

இதனால் அடுத்து என்ன நடக்கும்? மாயா ரகுராம் இடையேயான உறவு வலுப்படுமா என்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் வரும் ஜனவரி 22-ம் தேதி முதல் சந்தியா ராகம் சீரியல் வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு தகவலும் கிடைத்துள்ளது,

அதன்படி டைம் மட்டுமில்ல இந்த சீரியலின் நாயகிகளில் ஒருவரும் மாற்றப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது, தனிப்பட்ட சில காரணங்களால் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் தாரா சீரியலில் இருந்து வெளியேறி விட்டதாகவும் அவருக்கு பதிலாக பாவனா லஸ்யா என்ற தெலுங்கு நடிகை நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தாராவுக்கு பதிலாக தனம் கதாபாத்திரத்தில் பாவனா லஸ்யா இடம் பெறும் காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment