Advertisment

அண்ணன் சவாலை ஏற்ற தம்பி... மனைவியின் ஆசையால் கடுப்பாகும் கணவன் : அடுத்து என்ன?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், சந்தியா ராகம் சீரியல்கள் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee tamil Sereial news

அண்ணா - கார்த்திகை தீபம் - சந்தியாராகம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சொத்து விஷயத்தில் அபிராமி வைத்த ட்விஸ்ட்.. ஆனந்த் சவாலை ஏற்று கார்த்திக் வைத்த செக்மேட்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆளாளுக்கு ஒரு பக்கம் வீட்டை நம்ம பேருக்கு வாங்கிட வேண்டும் என்று யோசித்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்

அபிராமி லாயரை வீட்டிற்கு வர வைத்து அவரையும் அருணாச்சலத்தையும் தனியாக அழைத்து சென்று ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல அருணாச்சலம் அதிர்ச்சி அடைகிறார். இது மட்டும் நம்ம புள்ளைங்களுக்கு தெரிந்தா என்ன நடக்கும் என்று அதிர்கிறார். பிறகு அபிராமி லாயரை வரவைத்து பேசிய விஷயத்தை சொல்ல ஐஸ்வர்யா, ஆனந்த் ஆகியோர் வீடு வேண்டும் என்று கேட்கின்றனர்.

கார்த்திக் அம்மா என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் தான், ஆனால் அம்மாவும் அப்பாவும் என்கூட இருக்கனும் என்று சொல்கிறான். மறுநாள் லாயர் வந்து டாக்குமென்டுகளை கொடுக்க அபிராமியும் அருணாச்சலமும் கையெழுத்து போட்டு கொடுக்கின்றனர். லாயர் சொத்துக்கள் அனைத்தும் கார்த்தி பெயருக்கு எழுதி இருப்பதாக சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ஆனந்த் என்னம்மா எல்லாத்தையும் இவனுக்கு எழுதி கொடுத்துட்டீங்க என்று கேட்க, நான் உனக்கு ஒரு பொண்ணை கட்டி வச்சா நீ இன்னொருத்தியை கல்யாணம் பன்னிட்டு வந்து நிற்கிற, நீ அவ பேச்சை கேட்டுட்டு சொத்துக்களை அவ பேருக்கு மாத்தி எழுத மாட்டேன்னு என்ன நிச்சயம் என்று பதிலடி கொடுக்கிறாள். அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா அப்போ எங்களுக்கு ஏன் எழுதி வைக்கல என்று கேட்க அருணுக்கு இன்னும் பொறுப்பு வரல, அதை நான் ரிசார்ட் விஷயத்திலேயே பார்த்துட்டேன்.

நீ என்னை கொல்ல பிளான் போட்டது, தீபாவை வெளியே துரத்த பிளான் போட்டது என எல்லாமே எனக்கு தெரியும். அருண் எப்போ சுயமா சிந்தித்து பொறுப்பா இருக்கானா அப்போ எனக்கு சொத்தை கொடுக்க தெரியும் என்று பதிலடி கொடுக்கிறாள். ஆனந்த் நான், அப்பா, அருண் என மூணு பேரும் மில்லுல இரவும் பகலுமா உழைத்துனால தான் இவன் வெளிநாட்டுல படிச்சு ஏசில உட்கார்ந்து வேலை பார்க்க முடியுது, ஒரு மாசம் அவனை மில்லுல வேலை பார்க்க சொல்லுங்க பார்க்கலாம் என்று சொல்கிறான்.

ஆனந்தின் சவாலை ஏற்றுக்கொள்ளும் கார்த்திக் நீ சொல்ற மாதிரி நான் வேலை பார்க்குறேன். ஆனால் அதுக்கப்புறம் சொத்தை பிரிக்கிறது பத்தி பேசவே கூடாது என்று செக்மேட் வைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அல்வா கேட்டு சண்முகத்தை அலைய விடும் பரணி.. சனியனுக்கு விழுந்த அடி

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி சண்முகத்துக்கு 1 வாரம் டைம் கொடுக்க சண்முகம் நல்ல புருஷனாக நடந்து கொள்கிறானா என்பதை கண்டுபிடிக்க சனியனும் அவனது மனைவியும் நியமிக்கப்பட்ட நிலையில் இன்று, பரணியும் சண்முகமும் வீட்டிற்கு வர சனியனின் மனைவி அவர்களை நிறுத்தி ரெண்டு பேரும் ஒண்ணா தான் வீட்டுக்குள் போக வேண்டும், ரூல்ஸ்ல அப்படி தான் இருக்கு என்று சொல்கிறார்.

இதனால் கடுப்பாகும் சண்முகம் வேறு வழியில்லாமல் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்று புதுசா கல்யாணம் ஆனால் என்னவெல்லாம் செய்வார்களோ அதே போல் செய்ய சண்முகம் தங்கைகளை பார்த்து முறைக்கிறான். அடுத்து பரணி சண்முகத்தை வெறுப்பேற்றி கொண்டே இருக்கிறாள், லவ் டார்ச்சர் செய்து சண்முகத்தை லவ்வர் பாயாக மாற்ற முயற்சி செய்கிறாள். இதனையடுத்து சண்முகம் கடைக்கு கிளம்பி செல்கிறான்.

திரும்பி வரும் போது வெறும் கையோடு வீட்டிற்கு வர சனியன் மல்லிகை பூ எங்கே என்று கேட்கிறான். எப்பவும் இப்படி தான் வருவேன் என்று சண்முகம் சொல்ல மல்லி பூவுடன் தான் வரணும், அதான் ரூல்ஸ், இல்லனா இப்பவே பஞ்சாயத்துக்கு தெரியப்படுத்தி விடுவேன் என்று சொல்கிறார். இதனால் இன்னும் கடுப்பாகும் சண்முகம் சனியனை போட்டு அடிக்கிறான். சனியன் நான் சொல்லல, நோட்ல ரூல்ஸ் இருக்கு என்று அழ சண்முகம் மல்லி பூ வாங்கி வர கிளம்பி பரணி எனக்கு அல்வாவும் வேண்டும் என்று சொல்கிறாள்.

கோபத்துடன் வரும் சண்முகம் இரண்டையும் வாங்கி கொண்டு வீட்டிற்கு வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சிவராமனை பார்க்க வந்த மாயா.. வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள்,

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் லிங்கமும் தேன்மொழியும் ரகுராம் வீட்டிற்கு வந்த நிலையில் இன்று, லிங்கம் ஆறுதல் சொல்வது போல் டிராமா போட்டு நான் போய் சிவராமனை கூட்டி வரேன் என்று கிளம்ப ரகுராம் எங்க சந்தோஷத்தில் மட்டும் பங்கெடுத்துகோங்க, இந்த விஷயத்தை நாங்களே பார்த்துக்கறோம், நீங்க தலையிடாதீங்க என்று சொல்ல பார்வதி நீங்களும் அவரை காப்பாத்த எதுவும் செய்யல, செய்ய வரவங்களையும் தடுக்கறீங்க என்று கோபப்பட்டு உடைந்து அழுகிறாள்.

ஜானகி சிவராம் எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டார் என்று சொல்ல ரகுராம் அது எனக்கு நல்லாவே தெரியும், கண்டிப்பா நீதி ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக சொல்கிறார். அடுத்து ரகுராமை மரத்தில் கட்டி போட்டு வைத்திருக்க ஜானகி சாப்பாட்டுடன் காரில் வந்து இறங்குகிறாள். காவல்காரரிடம் அவர் கட்டை அவிழ்த்து விடுங்க, எங்கேயேயும் தப்பித்து போக மாட்டார் என்று சொல்லி சிவராமனுக்கு சாப்பாடு கொடுத்து ஆறுதல் சொல்லி கிளம்பி வருகிறாள்.

அடுத்து சிவராமனை மீண்டும் மரத்தில் கட்டி போட மாயாவும் சீனுவும் யாருக்கும் தெரியாமல் அங்கு வர சிவராம் நீங்க இங்க எல்லாம் வர கூடாது என்று சொல்ல மாயா என்ன நடந்ததுன்னுசொல்லுங்க , இல்லனா உங்க மேல பழி போட்ட மாதிரி அடுத்தடுத்து எல்லார் மேலயும் ஒரு பழியை போட்டு குடும்பத்தை அசிங்கப்படுத்த பார்ப்பாங்க என்று சொல்கிறாள்.

அதன்பிறகு சிவராமன் பொன்னுத்தாயினு ஒரு பொண்ணு வண்டியை நிறுத்தி புருஷனுக்கு பாம்பு கடிச்சி உயிருக்கு போராடுறானு வீட்டிற்கு கூட்டி போச்சு, உள்ளே போனதும் கதவை சாற்றி புடவையை களைத்து போட்டு சத்தம் போட எல்லாரும் தப்பா நினைச்சிட்டாங்க என்று நடந்தவற்றை சொல்ல அதை கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு எந்த ஊருல, எங்க நடந்தது என்ற விவரங்களை கேட்டு கொள்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment