Advertisment

சிக்கலில் இருந்து தப்பிய நாயகி... மாச்சானை எதிர்க்கும் மாமா : இவருக்கு வேற வேலையே இல்லையோ!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா - கார்த்திகை தீபம் - சந்தியாராகம் சீரியலின் சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகள்.

author-image
WebDesk
New Update
Zee tamil ams

அண்ணா - கார்த்திகை தீபம் - சந்தியாராகம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மீனாட்சியின் அப்பா அம்மாவை கிளப்பி விட்ட ரியா.. ட்விஸ்ட் கொடுத்த தீபா - கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு தின சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்

Advertisment

கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோட்டில் கார்த்தியை வேலையில் இருந்து தூங்க ஆனந்த் போட்ட திட்டம் தோல்வியில் முடிந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்

அதாவது, ரியா மீனாட்சி அப்பா அம்மாவை அபிராமியுடன் பிரச்சனை செய்ய வைக்கலாம் என்று பிளான் போட்டு அவர்களுக்கு போன் போட்டு ஆனந்திற்கு இரண்டாவது கல்யாணம் ஆகிடுச்சு என்று போட்டுக் கொடுக்கிறாள். பிறகு மீனாட்சி அப்பா அம்மா வீட்டுக்கு வந்து என்ன பண்ணி எங்களை இப்படி பண்ணலாமா உங்கள நம்பி தானே எங்க பொண்ணு அனுப்பினோம் என்று கேள்வி மேல் கேள்வி கேட்க தீபாவும் மைதிலியும் இதெல்லாம் ஐஸ்வர்யா மற்றும் ரியாவின் வேலையாகத்தான் இருக்கும் என்பதை புரிந்து கொள்கின்றனர்.

இதனால் ரியாவை இழுத்து சென்று வெளியே வராதபடி ஒரு ரூமுக்குள் பூட்டி வைக்கின்றனர். பிறகு மீனாட்சி தன்னுடைய அம்மாவிடம் என்ன சொல்லாமல் வந்து இருக்கீங்க என்று கேட்கிறாள். எந்த பிரச்சினையும் இல்ல நான் நல்லா தான் இருக்கேன் என்று சமாளிக்கிறாள். அபிராமியும் ஒரு பிரச்சனையும் இல்லை, ஏதாவது பிரச்சனை நானே சொல்லி இருப்பேன் என்று கூறுகிறார்.

இதையடுத்து மீனாட்சி நீங்க நம்பலனா ஆனந்த் கிட்ட கூட பேசி பாருங்க என்று போன் போட்டு என்னங்க அப்பா வந்து இருக்காங்க நமக்கு எதுவும் பிரச்சனை இல்லைன்னு சொல்லுங்க என்று போனை கொடுக்க ஆனந்தும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்ல, மீனாட்சியின் அப்பா அம்மா நிம்மதி அடைகின்றனர். அதன் பிறகு அவர்கள் கிளம்பிச் செல்ல மீண்டும் மீனாட்சி ஆனந்துக்கு போன் போட்டு இந்த குடும்பத்தோட மானம் போகக்கூடாது என்று தான் உங்களுக்கு போன் பண்ணி பேச சொன்னேன்.

இத நீங்க அட்வான்டேஜா எடுத்துக்காதீங்க என்று சொல்லி திட்டி போனை வைக்கிறார். அதன் பிறகு ரியாவை திறந்து விட ஐஸ்வர்யா இந்த நேரம் பார்த்து எங்க போன என்று கோபப்பட நடந்ததை சொல்கிறாள். அதன்பிறகு கார்த்திக் வீட்டுக்கு வர டயர்டாக இருக்கும் என்று சொல்லும் அவனிடம் மசாஜ் செய்து விடவா என்று கேட்க அவன் வேண்டாம் என்று சொல்ல தீபா வருத்தப்பட கார்த்திக் கையைப் பிடித்து இழுத்து ரொமான்ஸ் செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரத்னாவை பார்த்து முத்துப்பாண்டி சொன்ன வார்த்தை.. அறிவாளுடன் கிளம்பிய சண்முகம்

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி தூங்காமல் அழுது கொண்டிருக்கிற சண்முகம் என்னாச்சு என்று கேட்க அவள் தனது மனதுக்குள் இருக்கும் காதலை சொல்லிய நிலையில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது சண்முகம் பரணியிடம் நான் உன்னை நம்ப மாட்டேன் என்று சொல்கிறான். பரணி என் மேல உனக்கு காதல் இல்லையா என்று கேட்கும் சண்முகம் இல்லை என்று சொல்கிறான். பிறகு பரணி நான் அழாமல் இருக்க எனக்கு ஆறுதல் சொல்லி சமாதானப்படுத்து என்று சொல்கிறார். அதெல்லாம் செய்ய முடியாது என்று சொல்லும் சண்முகம் என்ன உன்ன சமாதானப்படுத்தணுமா என்று சொல்லி அரிவாளை தூக்கி அவளது கழுத்தில் வைக்க, வைகுண்டம் என் மருமகள் கழுத்துலையா கத்தியை வைக்கிற என்று சொல்ல சண்முகம் எஸ்கேப் ஆகி ஓடுகிறான்.

அடுத்ததாக மறுபக்கம் பாக்கியம் மற்றும் இசக்கி சிவபாலனிடம் நாளைக்கு இங்க நகைகளுக்கு கவரிங் நகை செய்ய ஏற்பாடு பண்ணு. இந்த நகை எல்லாம் கொடுத்து எப்படியாவது சண்முகத்தை அந்த ஸ்கூலை வாங்க வைக்கணும் என்று சொல்கின்றனர். அதேபோல் பணத்தை ரெடி பண்ணி அதை ரத்னாவிடம் கொடுக்க அவள் வேண்டாம் என்று சொல்ல கடனா வச்சுக்கோ என்று சொல்லி கொடுக்கின்றனர். பிறகு கவரிங் நகையுடன் பாக்கியம் வீட்டுக்கு வர சௌந்தரபாண்டி என்னடி நகை‌ புதுசா பளபளக்குது என்று கேட்கிறார்.

ஒரு வழியாக பாக்கியம் சௌந்தரபாண்டியை சமாளித்து உள்ளே செல்கிறாள். பிறகு ரத்னா கனியை ஸ்கூலில் இருந்து கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வரும்போது எதிரே வரும் முத்துப்பாண்டி உன் அண்ணன் எப்படியாவது அந்த ஸ்கூல்ல வாங்கணும்னு நினைக்கிறான் ஆனா பணம் தான் இல்ல. அவனுக்கு தேவையான பணத்தை நான் கொடுக்கிறேன் நீ எதுக்கு இன்னொருத்தனை கட்டிக்கிட்டு போய் கஷ்டப்படணும்? என் வீட்டுக்கே வந்து அக்கா தங்கச்சியும் ஒன்னா சேர்ந்து ஒற்றுமையாக வாழுங்க என்று சொல்கிறான்.

இதைக் கேட்டு கோபப்படும் ரத்னா முத்துப்பாண்டி திட்டி விட்டு அங்கிருந்து வீட்டுக்கு வர கனி நடந்ததை நினைத்து அழுது கொண்டிருக்க சண்முகத்திற்கு விஷயம் தெரிய வந்து முத்துப்பாண்டியை வெட்ட அரிவாளுடன் கிளம்பி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

போலீஸ் வைத்த கெடு.. காதலை சொல்லி வெளிநாடு கிளம்பும் மாயா, சீனு முடிவு என்ன?

சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாருவின் சதியால் போலீஸ் மாயாவை ஸ்டேஷன் அழைத்து சென்ற நிலையில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, தினமும் தினமும் பதறி அடித்துக் கொண்டு ரகுராமிடம் விசயத்தை சொல்கின்றனர். அவர் உடனே ஸ்டேஷனுக்கு கிளம்பி செல்கிறார். ஸ்டேஷனில் போலீஸ் மாயாவின் விசா டைம் முடிந்துவிட்டது இன்னும் 12 மணி நேரத்தில் ஊருக்கு கிளம்பியாக வேண்டும் என்று சொல்கின்றனர். மாயா நான் ஸ்டுடென்ட் விசா இருக்கு அப்ளை பண்ணி இருக்கேன் என்று சொல்ல ஸ்டுடென்ட் விசா வந்ததும் காட்டுங்க, அதுவரை நீங்கள் எங்கே இருக்க முடியாது என்று 12 மணி நேரம் கெடு வைக்கின்றனர்.

அதன் பிறகு தனியாக இருக்கும் மாயா அருகே வந்துச்சாரு என்ன நாயா என் கல்யாணத்தை நிறுத்துவேன்னு சவால் எல்லாம் விட்ட, இப்போ பாவம் ஊருக்கு கிளம்பி போக போறேன் என்று நக்கலாக பேச நாங்க இல்ல நாளும் கல்யாணத்தை நிறுத்துவேன் என்று சவால் விடுகிறாள். சாரு உன்னால எதுவும் செய்ய முடியாது, நீ ஊருக்கு போ கல்யாணம் போட்டோ வீடியோவை அனுப்பி வைக்கிறேன். சீனு தான் என் புருஷன் என்று சொல்கிறாள். பிறகு மாயா இல்லாம நான் எப்படி இருப்பேன்.? என்ன இந்த அளவுக்கு ஊக்கப்படுத்தி கொண்டு வந்தது அவ தானே என்று தனம் கண்கலங்கி அழுகிறாள்.

மாயா ஸ்டுடென்ட் வீசா வந்ததும் திரும்பி வந்து விடுவேன். அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து தான் இருப்போம் என்று சமாதானம் செய்கிறாள். பிறகு ரூமுக்கு வந்து சீனுவை மிஸ் பண்ணுவேன் என்று வருந்துகிறாள். அடுத்ததாக மாயா பட்டு புடவையில் வந்து சீனுவுடன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கூப்பிடுகிறாள். இருவரும் கோவிலுக்கு செல்ல அங்கு மாயா பூ வாங்கி தர சொல்லி வைத்துக் கொள்கிறாள்.

கோவிலில் வைத்து சீனுவிடம் தன்னுடைய காதலை சொல்ல சீனு அதை நம்ப மறுக்கிறான். மாயா சீனு காதலை தேடும் போது பொண்ணுங்க சிரிச்சு பேசினாலே லவ்வுன்னு ஆயிடுமா என்று திட்டிய வார்த்தைகளை திரும்ப சொல்லி வெறுப்பேற்ற மாயா சூலாயுதத்தின் மீது சத்தியம் செய்து காதலை வெளிப்படுத்த சீனு எதுவும் சொல்ல முடியாமல் நிற்கிறான்.

பிறகு கோவிலுக்கு வரும் சிவராமன் மாயாவை கூட்டிச் சென்றுவிட தனியாக வீட்டுக்கு வரும் சீனு மாயாவுக்கு என்ன பதில் சொல்வது எனக்கு தெரியாமல் தவிக்கிறான். அதே சமயம் மாயா ஊருக்கு போகும் விஷயம் தெரிந்து சாரு, பார்வதி, பத்மா ஆகியோர் சந்தோஷமாக இருக்கின்றனர். எல்லாவற்றையும் பேக் செய்துவிட்டு மாயா ரகுராம் ரூமுக்குச் சென்று உங்க வீட்ல என்னால சின்ன சின்ன பிரச்சனைகள் நிறைய நடந்திருக்கு ஆனா எப்போதும் நீங்க என்னை விட்டுக் கொடுக்கல என்று எமோஷனலாக பேசி நன்றி சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment