Advertisment

புது வில்லி என்டரி : அப்பாவுக்கு எதிரான மகளின் ஆக்ஷன் : ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், மற்றும் சந்தியா ராகம் சீரியலின் சனி மற்றும் ஞாயிறு எபிசோடுகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
zee tamil serial 223

ஜீ தமிழ் சீரியல்கள்

தீபாவின் புருஷன் கார்த்தி தான் என்று அறியும் ரம்யா.. அடுத்து எடுக்க போகும் முடிவு என்ன?

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யா காரில் வந்து கொண்டிருக்க ஐஸ்வர்யா வழி மறித்து வம்பிழுத்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ரம்யா ஐஸ்வர்யாவின் சதியை மீறி ஆட்டோவில் கிளம்பி வர அவளது அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் என்று ஹாஸ்பிடலில் இருந்து போன் வருகிறது. ஏற்கனவே ஒருமுறை இதே போல் போன் காலில் ஏமாற்றியதால் ரம்யா அதை நம்ப மறுக்க டாக்டரே போனை வாங்கி உண்மையை சொல்ல பதறியடித்து ஓடுகிறாள். தீபாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி விட இங்கே கல்யாண நாள் கொண்டாட்டம் நடந்து முடிகிறது.

அதன் பிறகு தீபாவும் கார்த்தியும் ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர், ரம்யாவின் அப்பாவை பார்த்து விட்டு கிளம்பி வருகின்றனர். இந்த நேரம் அங்கு ரம்யா இல்லாமல் இருக்க இவள் மேலே வந்ததும் தீபாவும் அவளுடைய கணவரும் வந்துட்டு போனாங்க என்று சொல்ல ரம்யா வெளியே ஓடி வர இவர்கள் லிப்ட்டுக்குள் சென்று விடுகின்றனர். இதனால் ரம்யா படிக்கட்டில் இறங்கி வர லிப்டில் இருந்து வெளியே வந்த தீபா தவறி விழ போக கார்த்திக் அவளை தாங்கி பிடிக்க அதை பார்த்து விடும் ரம்யாவுக்கு கார்த்திக் தான் தீபாவின் புருஷன் என்பது தெரிய வருகிறது.

இதனையடுத்து ரம்யா அப்பாவிடம் கார்த்திக் குறித்து சொல்ல அவங்க தான் உன்னை முதலில் பொண்ணு பார்க்க வந்தாங்க, அப்போ நீ தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்ட என்று சொல்கிறார். இதனால் இரவெல்லாம் தூக்கமின்றி தவிக்கிறாள், மறுபக்கம் ரியா ஒருவனை கூப்பிட்டு மீனாட்சி அவுட் ஹவுசில் தங்கி இருக்கா, நீ அங்க போ நான் திருடன் திருடனு கத்துவேன். அப்போ நீ மீனாட்சி கூப்பிட்டு தான் வந்ததாக சொல்லி எஸ்கேப் ஆகிடு என்று சொல்கிறாள்.

இதனையடுத்து அதே போல் ரியா நைட் நேரத்தில் திருடன் திருடன் என கத்த இவள் ஏற்பாடு செய்தவன் வராத நிலையில் ஆனந்த், அருண் என எல்லாரும் கூடி விடுகின்றனர். அதன் பிறகு அவன் ரியா ரூமில் இருந்து வெளியே வந்து ரியா சொல்லி தான் வந்ததாக சொல்ல ரியா அதிர்ச்சி அடைகிறாள், அதன் பிறகு இவன் மீனாட்சி அக்கா ரூமுக்குள்ள போனதை நான் பார்த்தேன், உண்மையை சொல்லு போலீசில் பிடித்து கொடுத்துவேன்னு சொன்னதும் ரியா தான் இப்படி பண்ண சொன்னதாக உண்மையை உடைக்கிறாள். இதனால் ஆனந்த் ரியாவை பிடித்து அறைந்து விடுகிறான். எல்லாரும் உனக்கு எதுவோ இந்த வேலை என்று ரியாவை மோசமாக திட்டுகின்றனர், அடுத்த நாள் காலையில் ஆபீஸ் வரும் ரம்யா எப்படியாவது கார்த்தியை அடைய வேண்டும் என்று முடிவெடுக்கிறாள்,

பி.ஏ-வை கூப்பிட்டு அன்னைக்கு ஒரு லெட்டர் குடுத்தனே அதை கார்த்தியிடம் கொடுத்தயா என்று கேட்க அவன் ஆமாம் கொடுத்தேன் என்று சொல்கிறான், கார்த்தியும் பதிலுக்கு ஒரு லெட்டரை கொடுத்தார். அதை தான் உங்களிடம் கொடுத்ததாக சொல்ல ரம்யா அவனை அறைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வீட்டு பத்திரத்தை வைத்து விளையாட்டு காட்டும் சௌந்தரபாண்டி.. பூட்டு போட்டு வேட்டு வைத்த பரணி - அண்ணா சீரியல் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி ஷண்முகம் வீட்டு டாகுமெண்ட்டுடன் கிளம்பி வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

வீட்டிற்குள் நுழைந்த சௌந்தரபாண்டி இது என்னுடைய வீடு எல்லாரும் வெளியே போங்க என்று சொல்ல சண்முகத்தின் தங்கைகள் என் அண்ணா இல்லாத போது வீட்டிற்குள் வராதீங்க என்று சொல்ல அதையும் கேட்காமல் அத்துமீறி வீட்டிற்குள் நுழைகின்றனர். அடுத்து முத்துபாண்டியும் சௌந்திரபாண்டியும் வைகுண்டத்தை அடித்து போட்டு விட்டு பொருட்களை தூக்கி வெளியே வீசி விட்டு அராஜகம் செய்து விட்டு செல்ல வைகுண்டம் கிளினிக்கிற்கு ஓடி வந்து சண்முகம் மற்றும் பரணியுடம் நடந்த விஷயத்தை சொல்கின்றனர்,

உடனே கோபமாகும் சண்முகம் வட்டிக்கு பணம் கொடுத்தவனை தேடி போய் சட்டையை பிடித்து அடிக்க அவன் நீங்க பணத்தை திருப்பி தருவீங்களா? இல்லையானு? சந்தேகமா இருந்தது. அப்போ சௌந்தரபாண்டி தான் பணத்தை உங்களுக்கு தர சொல்லி அந்த பத்திரத்தை வாங்கிட்டாரு என்ற உண்மையை உடைக்கிறார்.  இதனால் ஆவேசமாகும் பரணி இந்த விஷயத்தை நான் பார்த்துக்கறேன் என்று ஷண்முகத்துடன் கோபத்துடன் தனது அப்பாவை பார்க்க கிளம்பி வருகிறாள்.

வரும் போது பாக்கியத்திற்கு போன் செய்து இன்னைக்கு உன் புருஷனை சும்மா விட மாட்டேன் என்று நடந்ததை சொல்லி ஆவேசப்படுகிறாள். பாக்கியம் ஏதோ ஒரு ஐடியாவை சொல்ல பரணி நான் பார்த்துக்கறேன் என்று போனை வைக்கிறாள். சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்தவள் பாண்டியம்மாவை கழுத்தை பிடித்து இழுத்து வந்து வெளியே தள்ளி வீட்டிற்கு பூட்டு போடுகிறாள். என்னை மீறி வீட்டை திறந்து உள்ள போனீங்கன்னா உங்களை சும்மா விட மாட்டேன் எச்சரிக்கை விடுக்கிறாள்.

மேலும் முத்துப்பாண்டி அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து வீட்டை காலி பண்ண சொன்னதை வீடியோ எடுத்து வச்சிருக்கோம், அதை SP-க்கு அனுப்பி வேலையை பிடிங்குகிடுவேன் என்று வார்னிங் கொடுத்து வருகிறாள். சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்ததும் அவ பூட்டு போட்டா உள்ள வர கூடாதா என்ன என்று கோபப்பட்டு பூட்டை உடைக்க போக சிவபாலன் பரணி கொடுத்த வார்னிங்கை சொல்ல முத்துப்பாண்டி வேண்டாம் பா, உனக்கு இந்த ஊர்ல செல்வாக்கு இருக்கு. எனக்கு இந்த வேலை போனால் மரியாதை இருக்காது. இதை வேற விதமாக பார்த்துக்கலாம் என்று அப்பாவை தடுத்து நிறுத்துகிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சத்தியம் செய்ய வந்த மாயா.. மனம் மாறிய ஜானகி, உடைந்து போன ரகுராம், நடந்தது என்ன? சந்தியா ராகம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜானகி சந்தியாவின் குழந்தைக்கு மாயா என்று பெயர் சூட்டிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

பிளாஷ்பேக்கை சொல்லி முடித்த மாயா.. அந்த குழந்தையே நான் தான் என்று சொல்ல ஜானகி ஷாக்காகி நீ தானா அந்த குழந்தை என்று ஷாக்காகி கண் கலங்குகிறாள், அடுத்ததாக மாயா இதையெல்லாம் அம்மா அவங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் சொன்னாங்க, என் அக்கா ஜானகி உனக்கு பெரியம்மா இல்ல அவங்க தான் எல்லாமேனு சொன்னாங்க என்று சொல்ல ஜானகி என் தங்கச்சி என்னை பத்தி இவ்வளவு சொல்லி இருக்காளா? என்று கண் கலங்குகிறாள்.

இதனையடுத்து மாயா சொல்லுங்க பெரியம்மா உங்களுக்கு என்ன சத்தியம் பண்ணனும் என்று கேட்டு கையை நீட்ட ஜானகி எனக்கு நீ எந்த சத்தியமும் பண்ண வேண்டாம் என்று ஜானகி கையை எடுத்து கொள்கிறாள். அடுத்து ரகுராம் சாப்பிடாமல் யாரிடமும் பேசாமல் பூஜையறையில் உட்கார்ந்திருக்க ஜானகி என்னங்க ஆச்சு என்று கேட்க அவர் ஓடி போன பெண்ணின் குடும்பத்தை பற்றி கவலைப்படுகிறார்.

நான் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியல என்று கலங்குகிறார். அந்த பொண்ணு ஓடி போனதுமே அவங்க அப்பா செத்து போய்ட்டாங்க என்று சொல்லி கவலைப்படுகிறார். இதனை தொடர்ந்து நம்ம வீட்டுலயும் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கு, இனிமே அது போல் எப்பவும் நடக்க கூடாது என்று சொல்ல ஜானகி தனது கல்யாணத்தை நினைத்து பார்க்கிறாள், சந்தியா கிஷோரை திருமணம் செய்து கொண்டு வந்து நின்றதும் அவரை பார்த்து எல்லாரும் அதிர்ச்சி அடைந்து சந்தியாவை திட்ட என் தங்கச்சியை திட்டாதீங்க என்று சொல்லியதை நினைத்து பார்க்கிறாள்.

அடுத்து ரகுராம் தனது கழுத்தில் தாலி காட்டியதை நினைத்து பார்க்கும் ஜானகி, முதலிரவு அறையில் மாமா சொன்னதால் தான் தாலி காட்டினேன். மற்றபடி உன் மேல எனக்கு எந்தவொரு ஈர்ப்பும் இல்ல, போக போக என்னை மாத்திக்கறேன் என்று சொல்லி முதலிரவை தள்ளி போட்டதும் பிறகு ஜானகி ஒரு பொறுப்பான மனைவியாக நடந்து கொள்ள தொடங்கியதும் ரகுராம் இந்த குடும்பத்தோட கவுரவம் தான் எனக்கு முக்கியம். அது கெட்டு போகாமல் நீ தான் பார்த்துக்கணும் என்று சொல்லியதையெல்லாம் நினைத்து பார்க்கிறாள். இப்படியான நிலையில அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment