Advertisment

உண்மை சம்பவத்தை காட்டும் அண்ணா : அண்ணியை காப்பாற்றுவாரா ஹீரோ? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக வரவேற்பை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், மற்றும் சந்தியா ராகம் சீரியல் குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Zee tamil Serial Ams

ஜீ தமிழ் சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கடத்தப்பட்ட மீனாட்சி.. கார்த்திக் செக் மேட் வைத்த ரியா, ரம்யா குறித்து உடைந்த உண்மை

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மது ரியாவுக்கு போன் செய்து நான் தற்கொலை பண்ணிக்க போறேன் அதுக்கு காரணம் நீதானே எழுதி வைக்கப் போறேன் என மிரட்டிய நிலையில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது ரியா மதுவை பார்க்க வர மது தற்கொலை செய்வதற்காக செட்டப் ஒன்றை ஏற்பாடு செய்து கேமராவையும் ஆன் செய்து வைக்கிறான். வீட்டுக்கு வந்த ரியாவிடம் நான் தற்கொலை பண்ணிக்க கூடாதுன்னு என் கூட வந்து வாழு. என்கிட்ட இப்ப 10 லட்சம் ரூபாய் இருக்கு, நாம அதை வச்சுக்கிட்டு சந்தோஷமா வாழலாம் என்று சொல்கிறான்.

ரியா என்னது 10 லட்ச ரூபாயா? நான் பல கோடிக்கு சொந்தக்காரி ஆக போறேன். கூடிய சீக்கிரம் அபிராமி அருணாச்சலத்தை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி கார்த்திக் அருண் ஆகியோரை வீட்டை விட்டு வெளியே தள்ளி அந்த மொத்த சொத்துக்கும் சொந்தக்காரியாக போற அதுக்குத்தான் ஆனந்த காதலிக்கிற மாதிரி நடிச்சுக்கிட்டு இருக்கேன். அப்படி இருக்கும்போது நீ 10 லட்ச ரூபாய்க்கு என்னை வானு கூப்பிடுற என்று சொல்லி பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறாள்.

மறுபக்கம் ரம்யா மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பாக பார்க்க தீபா அவளை பிடித்து என் ஹஸ்பண்ட் உன்னை பார்க்கணும்னு சொன்னாரு வா என்று கூட்டிச் சென்று கார்த்திக் முன்னாடி நிறுத்தி இவதான் அம்மு என்று அறிமுகம் செய்கிறாள். கார்த்திக் நீங்க இங்க என்ன பண்றீங்க என்று கேட்க தீபா உங்களுக்கு முன்னாடியே தெரியுமா என்று கேள்வி கேட்கிறாள்.

அம்மு கார்த்திக் என் கம்பெனில தான் வேலை செய்கிறார், எனக்கு முன்னாடியே தெரியும் என்று சொல்லி நான் தீபாவோட ஃபிரண்ட் கேஷுவலாக பேசுகிறாள். அடுத்ததாக ரியா பேசிய வீடியோ ஆதாரத்துடன் மது மண்டபத்துக்கு வர ஐஸ்வர்யாவின் மீது மோத இவனைப் பார்த்த ஐஸ்வர்யா இவன் எதுக்கு இங்கு வந்தான் என்று யோசிக்கிறாள். பிறகு ரியாவிடம் நீங்க இருந்து போயிடு என்று சொல்ல அவள் நான் சவால் விட்ட மாதிரி பரமேஸ்வரி பாட்டி கால்ல ஆனந்தத்தோட சேர்ந்து நான் தான் ஆசீர்வாதம் வாங்குவேன் என்று சொல்கிறாள்.

அடுத்ததாக மது கார்த்திகை சந்தித்து வீடியோ ஆதாரத்தை கொடுக்க கார்த்திக் ஆனந்தை போன் பண்ணி வரவைத்து வீடியோ ஆதாரத்தை காட்ட போகும் சமயத்தில் ரியா அவனுக்கு போன் செய்து மீனாட்சியை கடத்தி வச்சிருக்கேன் அவ உயிரோட வேணும்னா நீ எந்த விஷயத்தையும் சொல்லக்கூடாது என்று மிரட்டுகிறாள். இதனால் கார்த்திக் ஆனந்திடம் உண்மையை சொல்லாமல் சும்மா தான் வர சொன்னேன் என்று சமாளித்து விடுகிறான்.

பிறகு ரியா மண்டபத்துக்கு வந்துவிட கார்த்திக் அப்போ மீனாட்சி பக்கத்துல இங்கே தான் கடத்தி வச்சிருக்கா என்று கணக்கு போட்டு மதுவுடன் கிளம்பிச் செல்ல ரியா தீபாவை சந்தித்து உன் புருஷனால என்னை ஒன்னும் பண்ண முடியாது என்று சவால் விட பதிலுக்கு தீபா என் புருஷன் உன் முகத்தை கிழிச்சு ஜெயிலுக்கு அனுப்ப தான் போறாரு என்று சவால் விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சந்தியா செய்த துரோகம்.. தெரிய வந்த உண்மையால் மாயா எடுத்த முடிவு, ரகுராம் சொன்ன வார்த்தை

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோட்டில் ரகுராம் குடும்பத்தினர் மொத்தமும் கோவிலில் கூடியிருக்க மாயாவின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, மாயா வீட்டில் கல்யாணத்திற்கு தயாராகி கொண்டிருக்க ரகுராம் குடும்பத்தினர் கோவிலில் காத்திருக்க குமரேசன் சீனுவை தேடி செல்ல ஒரு இடத்தில சீனுவின் பைக் நிற்பதை பார்க்கிறான். பிறகு உள்ளே சென்று தேடி பார்க்க சீனு கட்டப்பட்டு இருப்பதை பார்த்து ஷாக்காகி சண்டை போட்டு அவனை மீட்டு கொண்டு வருகிறான். 

சீனு கோவிலுக்கு வர ரகுராம் நீ உன் ப்ரண்ட்டோட கல்யாணத்துக்கு போறதா தானே சொன்ன.. இப்போ என்ன இங்க வந்திருக்க என்று சீனு என் ப்ரண்ட்டே பார்த்துக்கறதா சொல்லிட்டேன் மாமா என்று சமாளிக்கிறான். சீனுவை பார்த்த ஷாரு, லிங்கம் ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர்.

அடுத்து வீட்டில் மாயா கல்யாணத்திற்கு தயாராகிய பிறகு அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்று ரூமில் போட்டோவை தேட போட்டோ கிடைக்காத காரணத்தினால் பெரியம்மா ரூமில் தேடி பார்க்கலாம். அங்க கண்டிப்பா இருக்கும் என்று கிளம்பி செல்கிறாள். மறுபக்கம் தனம் சீனுவிடம் மாமா மாயா கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை யாரு  சொல்லு என்று கேட்க இன்னும் அரை மணி நேரத்தில் உனக்கே தெரிய போகுது என்று சொல்லி சமாளிக்க தனம் நீ சொல்லு மாமா என்று தொந்தரவு செய்கிறாள்.

அடுத்து மாயா ஜானகி ரூமில் பீரோவை திறந்து சந்தியாவின் போட்டோவை தேட சந்தியா கைப்பட எழுதிய டைரி கிடைக்க மாயா அதை திறந்து பார்க்கிறாள். டைரியில் ஜானகிக்காக பார்த்த மாப்பிளையை திருமணம் செய்து கொண்டு துரோகம் செய்தது போன்ற விஷயங்களை படிக்க மாயா அதிர்ந்து போகிறாள். இதையடுத்து அம்மா செய்த துரோகத்தை நானும் செய்ய கூடாது என்று முடிவெடுத்து கோவிலுக்கு வரும் மாயா மணமேடையில் உட்காராமல் ரகுராமை கட்டிப்பிடித்து நான் தப்பு பண்ண இருந்தேன் என்னை மன்னிச்சுடுங்க பெரியப்பா என்று கதறி அழுகிறாள்.

எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் நான் இந்த வீட்டு பெண்ணாகவே இருக்கேன் என்று சொல்ல கிஷோர் நீ என்ன பேசிட்டு இருக்க வா வந்து உட்காரு என்று மாயாவை கூப்பிட ரகுராம் தொடாத அவ எப்போ இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னாளோ அப்பவே அவ என் வீட்டு பொண்ணு ஆகிட்டா, இனிமே அவளுடைய கல்யாண விஷயத்தில் நீங்க தலையிட கூடாது என்று துரத்தி விடுகிறார்.

மாயாவின் முடிவால் ரகுராம், ஜானகி ஆகியோர் சந்தோஷமடைய ஷாரு இந்த கல்யாணம் எப்ப வேணாலும் நடக்கலாம், அதை நடக்க விட கூடாது.. அது எதாவது செய்யணும் என்று திட்டமிடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பரணியை தோற்கடிக்க சௌந்தரபாண்டி தீட்டிய திட்டம்.. சிக்க வைக்கும் இசக்கி

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பரணியை ஜெயிக்க விட கூடாது, அவ ஜெயித்தா நமக்கு ஆபத்து தான் என்று இதை தடுக்க திட்டமிட முடிவெடுத்த நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, ண்முகம் அசந்து தூங்கி கொண்டிருக்க தூக்கத்தில் இருந்து எழும் பரணி அவனை எழுப்பி எதுக்கு எனக்கு ஒட்டு போட மாட்டேன்னு சொல்ற என்று கேட்க மத்தவங்களுக்கு நீ சமைச்சு எல்லாம் கொடுத்து ஒட்டு கேட்டல, அந்த மாதிரி எனக்கு எதாவது பண்ணு என்று சொல்ல பரணி அவனுக்கு கால் கை அமுக்கி விடுகிறாள்.

பிறகு சண்முகம் ஒரு பாட்டு பாட சொல்ல பரணி ரொமான்ஸா பாடுவா என்று நினைத்தால் முருகன் பாட்டை பாடி மொத்த குடும்பத்தையும் அலற விடுகிறாள். வைகுண்டம் உட்பட எல்லாரும் எழுந்து வந்து என்னமா ஆச்சு? யார் புலம்பிட்டு இருக்கறது என்று கேட்க, பரணி நான் பாட்டு பாடினேன் மாமா என்று சொல்கிறாள். மேலும் நான் பாட்டு பாடுனா தான் சண்முகம் ஒட்டு போடுவானாம் என்று சொல்ல சண்முகத்தின் தங்கைகள் அப்போ நாங்களும் பாட்டு பாடி ஒட்டு கேட்கிறோம் என்று பாடுகின்றனர்.

இதையடுத்து சௌந்தரபாண்டி புது போன், புது சிம் வாங்கி வந்து ஒட்டு போட போகும் நிர்வாகிகள் 20 பேருக்கும் தனித்தனியாக போன் செய்து பெண்ணின் குரலில் பேசி நேர்ல பாக்க வர மாட்டீங்களா என்று கேட்க இவர்களும் எங்க வரணும் என்று கேட்க சௌந்தரபாண்டி ஒரு இடத்தை சொல்கிறார். இதே போல் சௌந்தரபாண்டி சண்முகத்துக்கும் போன் செய்து பெண் குரலில் பேச சண்முகம் ஒரு பொம்பள கூப்பிட்டா இந்த சண்முகம் வந்துடுவானா என்று திட்டி போனை வைத்து விடுகிறான்.

இதையடுத்து போன் வந்த 20 பேரும் ஒரு இடத்திற்கு செல்ல சௌந்தரபாண்டியும் அங்கு வந்து எனக்கும் போன் வந்தது என்று சொல்லி எல்லாரையும் ஒரு பஸ்ஸில் ஏற வைத்து அனைவரையும் கடத்தி செல்கிறார். மறுபக்கம் காணாமல் போன 20 ஆண்களின் மனைவிமார்கள் சண்முகம் வீட்டிற்கு ஓடி வந்து என் புருஷனை காணோம் என்று சொல்ல இசக்கி சௌந்தரபாண்டி தான் பொம்பள குரலில் பேசிட்டு இருந்தார் என்று சொன்னதும் சண்முகத்துக்கு 20 பேரையும் கடத்தியது சௌந்தரபாண்டி தான் என்பது தெரிய வருகிறது.

அடுத்து கடத்தி வரப்பட்ட நிர்வாகிகளை ஒரு ரெசார்ட்டில் அடைத்து சரக்கு வாங்கி கொடுத்து ஆட்டம் பாட்டம் என்று சந்தோசப்படுத்துகிறார் சௌந்தரபாண்டி. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment