Advertisment

மனைவியை காப்பாற்றிய கணவன் : மருமகனிடம் சிக்குவாரா மாமனார்? ஜீ தமிழ் சீரியலில் இன்று!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, நினைத்தேன் வந்தாய், மற்றும் சந்தியா ராகம் சீரியல் குறித்து பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Zee tamil Serial Ams

அண்ணா - நினைத்தேன் வந்தாய் - சந்தியாரா

சீனுவுக்கும் மாயாவிற்கும் கல்யாணம்.. கிஷோர் எடுத்த முடிவு, ரகுராம் கொடுத்த வார்னிங்

Advertisment

சந்தியா ராகம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கிஷோர் மாயாவின் காதல் குறித்து சொல்லி கல்யாணம் செய்து வைக்க போவதாக பேச ரகுராம் காதல் திருமணத்திற்கு இந்த வீட்டில் இடம் இல்லை என்று சொல்லிய நிலையில் இன்று, ரகுராம் மாயாவை சந்தித்து நீ காதல் கல்யாணம் பண்ணிட்டு தாராளமா வாழலாம். ஆனால் உனக்கு இந்த வீட்டில் இடம் இல்ல, இந்த விஷயத்தில் உனக்கு ஆதரவா என்னால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்கிறார்.

உன்னையும் இந்த வீட்டு பொண்ணா தான் நினைச்சேன். அதை நீயும் நிரூபித்து காட்டி இருக்க. ஆனால் காதல் கல்யாணம் பண்ணா சந்தியா மாதிரி நீயும் வீட்டை விட்டு வெளியே தான் போகணும் என்று சொல்கிறார். இதை ஒட்டு கேட்டு விடும் ஷாரு அப்பா லிங்கத்திடம் ஒரு விக்கெட் அவுட்.. மாயா இந்த வீட்டை விட்டு வெளியே போக போறா, அதனால் ரகுராமை ஈஸியா போட்டு தள்ளிடலாம் என்று சொல்லி சந்தோசப்படுகிறாள். இதனை தொடர்ந்து மாயா காதலிக்கிற பையன் சீனுவா இருக்குமோ என்று சந்தேகப்படுகிறாள்.

வீட்டில் உள்ள மணிவண்ணன் உட்பட எல்லாரையும் ஏற்றி விட்டு கிஷோரிடம் பேச அனுப்ப கிஷோர் இவர்களை புரிந்து கொள்ள சீனுவை தான் மாயா காதலிக்கிறா என்ற உண்மையை சொல்லாமல் மறைக்கிறார். அதன் பிறகு மாயாவை கோவிலுக்கு அழைத்து சென்று உனக்கும் சீனுவுக்கும் கல்யாணம் என்று ஷாக் கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்து ஆவியை உணரும் மனோகரி.. அதிர்ச்சியில் அடுத்து செய்ய போவது என்ன?

நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடரின் அப்பா வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று, சுடரின் அப்பா இந்து இருந்த ஹாஸ்பிடல் வார்டன் வந்து சந்திப்பதாக சொல்லி இருப்பதாக சொல்ல அக்கா சீக்கிரம் கிடைச்சிடுவா என்று சுடர் சொல்கிறாள். இதையடுத்து இந்து குழந்தைகளுக்கு தெரியாமல் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளிடம் நேரத்தை செலவிடுகிறாள்.

இந்த நேரம் பார்த்து மனோகரி அங்கு வந்து உட்கார சுடர் பக்கத்திலேயே அமர்ந்து அவளை முறைத்தபடி உட்கார்ந்திருக்க மனோகரிக்கு இந்து அங்கு உட்கார்ந்திருப்பதை போல் தோன்றுகிறது. இதையடுத்து பயந்து போய் வெளியே வருகிறாள் மனோகரி செல்வியிடம் விஷயத்தை சொல்கிறாள். செல்வி எனக்கு தெரிந்த ஒரு சாமியார் இருக்கிறார், அவரை வீட்டுக்கு வர வைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்கிறாள்.

மறுநாள் சாமியாரும் வீட்டிற்கு வருகிறார். ஆனால் போலி சாமியாரான அவர் வீட்டில் உள்ள பொருட்களை திருடும் வேலைகளை செய்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இசக்கி போட்ட ட்ராமா.. சிக்கி கொண்ட சௌந்தரபாண்டி, பரணியை காப்பாற்ற சீறி பாய்ந்த சண்முகம்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் செல்வம் பரணியை கடத்திய நிலையில் இன்று, சண்முகமும் மற்றவர்களும் பரணியை தேடி அலைகின்றனர். ஆனால் இது எதையும் பெருசாக கண்டு கொள்ளாத சௌந்தரபாண்டி பாக்கியம் சாப்பாடு போட சொல்ல அவள் பொண்ணை காணோம்னு தேடிட்டு இருக்கோம், உங்களுக்கு சாப்பாடு கேக்குதா என்று திட்டுகிறாள்.

உடனே சௌந்தரபாண்டி மனதுக்குள் பொண்ணு எங்க இருக்கானு எனக்கு தானே தெரியும் என்று சொல்லி சிரித்து கொள்ள இதை இசக்கி நோட் பண்ணி விடுகிறாள், பிறகு ஷண்முகத்திற்கு போன் செய்து அண்ணா எனக்கு என்னமோ சௌந்தரபாண்டி மாமா மேல சந்தேகமாக இருக்கு, பொண்ணை காணோம்னு அவருக்குள்ள கொஞ்சம் கூட கவலை இல்லை என்று சொல்கிறாள்.

இதையடுத்து சண்முகம் ஐடியா ஒன்றை சொல்ல இசக்கி பரணியோட பிணம் ஆத்துல மிதக்குதாமே என்று அழுது புலம்ப சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். முத்துபாண்டியை தனியாக அழைத்து சென்று ஏ.கே.எஸ் அண்ணாச்சிக்கு போனை போட சொல்கிறார். பிறகு அவரிடம் பரணி குறித்து விசாரித்து அவள் பாதுகாப்பாக இருப்பதை தெரிந்து கொள்ள சிவபாலன் மறைந்திருந்து இதை பார்த்து விடுகிறான்.

இசக்கியிடம் சிவபாலன் உண்மையை சொல்ல அவள் ஷண்முகத்திற்கு தகவல் கொடுக்கிறாள். மறுபக்கம் செல்வம் பரணிக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸை கொடுக்க அவள் குடிக்க மறுத்து ஷண்முகம் என்று கத்த ஷண்முகம் என்ட்ரி கொடுத்து ஏ.கே.எஸ் அண்ணாச்சி மற்றும் செல்வத்தை அடித்து துவைத்து பரணியை காப்பாற்றுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment