Advertisment

நாயகியை உயிருடன் புதைக்கும் ரவுடிகள்... உண்மை அறிந்த சண்முகம் : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, சீதா ராமன் சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
New Update
Zee tamil anna Setha

ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, சீதா ராமன் சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சாமியார்.. அபிராமி செய்ய போவது என்ன?

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஐஸ்வர்யா ரூமுக்குள் அருணிடம் நான் எதுவும் பண்ணல எனக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று பேச சரி பார்த்துக்கலாம் என அருண் வாக்கு கொடுக்கிறான். மறுநாள் காலையில் எல்லோரும் கோவிலுக்கு வர அபிராமி சாமியாரிடம் சென்று சந்தித்து பரிகாரம் கேட்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது சாமியார் எதிரே வருகிறார்.

பிறகு அவரிடம் சென்று நடந்த விஷயத்தை சொல்லி அதற்கு பரிகாரம் என்ன என்று கேட்க அவர் ஓலைச்சுவடியில் இதற்கான பரிகாரம் இருக்கும் என்று படித்து பார்த்து செல்வதாக சொல்லி ஓலைச்சுவடியை எடுக்கிறார். சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பூஜை ஒன்றை நடத்த வேண்டும் அந்த பூஜையில் இறுதியில் பாம்பு ஒன்று வந்து சாமி விஷயத்தில் தவறு இழைத்தவரை கொத்தும் என சொல்ல அதைக் கேட்டு ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள்.

பிறகு மைதிலி மற்றும் மீனாட்சி இருவரும் ஐஸ்வர்யாவிடம் வந்து நீதான் தப்பு பண்ணி இருப்பேன் எங்களுக்கு நல்லாவே தெரியும் உண்மையை ஒத்துக்க சமூகமா தீர்த்துவிடலாம் என்று சொல்ல நான் எதுவும் தப்பு பண்ணல முடிந்தால் நிரூபித்துக் கொள்ளுங்கள் என சொல்கிறாள். அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தன்னுடைய அம்மாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி இதிலிருந்து தப்பிக்க ஐடியா கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணா:

சூடாமணியை சந்தித்த வைகுண்டம்.. வெளிவரும் உண்மைகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.  இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில், சூடாமணியை பார்க்க வேண்டும் என வைகுண்டம் தெரிஞ்ச மனுவில் ஒரே ஒரு பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டு இருப்பதாக சண்முகம் சொல்கிறான். பிறகு எனக்கு பதிலாக என்னுடைய அப்பாவை அனுப்புங்க என்று சொல்லி கேட்க போலீஸ் ஜெய்லர் அதுக்கு ஒத்துக்க மாட்டாங்க என மறுப்பு தெரிவிக்கின்றனர்.

பிறகு ஜெயிலர் அம்மா வெளியே வர சண்முகம் அவரிடம் விஷயத்தை சொல்லி கெஞ்ச அவர் இருவரையும் பார்க்க அனுமதி கொடுக்கிறார். முதலில் சண்முகத்தை மட்டுமே பார்த்து வெளியே வரும் சூடாமணி பிறகு வைகுண்டத்தை பார்த்து சந்தோஷப்படுகிறார். இருவரும் நீண்ட நாள் பிரிவில் தொடர்ந்து சந்தித்துக் கொள்வதால் பாசத்தை பரிமாறிக் கொள்கின்றனர். அதன் பிறகு சண்முகம் மற்றும் வைகுண்டம் இந்த சௌந்தரபாண்டியை சும்மா விட மாட்டேன் என கோபம் கொள்ள சூடாமணி வைகுண்டம் தன்னை வந்து பார்த்து திட்டு வாங்கிக் கொண்டு சென்றதைப் பற்றி சொல்கிறாள்.

அதோடு வைகுண்டம் ஜெயிலுக்கு வந்ததற்கான காரணத்தை கேட்க சூடாமணி முழுவதுமாக சொல்லாமல் சௌந்தரபாண்டி தான் காரணம் என்பதை மட்டும் உடைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சீதா ராமன்:

உயிரோடு புதைக்கப்படும் சீதா.. ராம் செய்யப்போவது என்ன?

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில், ரவுடிகள் சீதா தலையில் செங்கலை எடுத்து அடித்து கீழே சரிய வைக்கின்றனர். மறுபக்கம் அஞ்சலி சத்யா மற்றும் பிரியா என மூவரும் காலேஜிலிருந்து வீட்டுக்கு வர மீரா இவங்க தான் ஏதாவது செய்திருக்க வேண்டும் என்று சொல்ல சத்தியனும் சப்போர்ட் செய்து பேசுகிறான்.

பிறகு இவர்களை போலீசை வைத்து தான் விசாரிக்க வேண்டும் என சொல்லிவிட்டு ராம் ரூமுக்குள் சென்று அதை நினைத்து வருத்தப்பட்டு அழுகிறான். இங்கே ரவுடிகள் சீதாவை இப்படியே விடுவது நல்லது இல்லை என உயிரோடு புதைத்து விட திட்டம் போடுகின்றனர்.   இங்கே ராம் ரூமில் முத்தாரம்மன் போட்டோவை வைத்துக் கொண்டு சீதாவை நினைத்து கலங்கி துடிக்கிறான்.

மறுபக்கம் ரவுடிகள் சீதாவை ஒரு சிமெண்ட் தொட்டிக்குள் வைத்து புதைக்க முயன்று வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment