Advertisment

தீபாவுக்கு பாட்டு... கடவுளாக அண்ணா... சீதாவுக்கு மன்னிப்பு : ஜீ தமிழ் சீரியல் அப்டேட்

ஜீ தமிழின் அண்ணா, சீதாராமன் மற்றுமு் கார்த்திகை தீபம் சீரியல்களின் இன்றைய எபிசோட்டில் நடப்பது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
zee tamil anna seetha deepa

அண்ணா - கார்த்திகை தீபம் - சீதா ராமன்

முத்து பட பாணியில் நடந்த கூத்து, தீபாவுக்கு தயாரான ஆப்பு

Advertisment

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மலர் எழுதி போட்ட லெட்டர் எல்லாரிடமும் சென்று கடைசியாக பரமேஸ்வரி பாட்டி கைக்கு வந்த நிலையில் இன்றைய எபிசோட்டில், ஒவ்வொருத்தராக தோட்டத்துக்கு வர தொடங்க ஒருவரை பார்த்து ஒருவர் ஓடி ஒளிந்து கொள்கின்றனர்.

இறுதியாக பரமேஸ்வரி பாட்டி அங்கு வந்து யாருடா முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னது வெளியே வாடா என்று மிரட்ட எல்லாரும் வெளிய வர மொத்தமாக இங்க தான் கூடி இருக்கீங்களா? எல்லாம் ஆட்டம் போட வந்தீங்க, ஆரம்பிங்க என்று அனுமதி கொடுக்க எல்லாரும் சேர்ந்து ஆட்டம் போடுகின்றனர். அடுத்து தீபா மீனாட்சியிடம் பாட்டு போட்டி பற்றி பேசி புலம்பி கொண்டிருக்க மீனாட்சி பாடுனா கார்த்திக்கு உண்மை தெரிந்து விடும், பாடலானா அபிராமி கிட்ட கெட்ட பெயர் வரும், என்ன செய்தாலும் பிரச்சனை தான். சரி விடு பார்த்துக்கலாம் என்று ஆறுதல் சொல்கிறாள்.

மறுநாள் பாட்டு போட்டிக்காக சபையில் எல்லாரும் கூடியிருக்க தீபா தயக்கத்துடன் இருக்க அபிராமி இவ என்ன பண்ண போறான்னு தெரியலையே என்று பாத்திரத்தில் இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அரக்கனாக வேஷம் கட்டும் முத்துப்பாண்டி, சண்முகத்துக்கு அம்மன் கொடுத்த வாக்கு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் குறிகேட்க அவனை சிவன் கெட்டப் போட சொல்லியிருந்த நிலையில் இன்றைய எபிசோட்டில், ரத்னா அடுத்ததாக குறி கேட்க அவளை அம்மன் வேடம் போட சொல்லி உத்தரவு வருகிறது, மறுபக்கம் இன்னொருவரிடம் முத்துப்பாண்டி வேஷம் கட்டுவது குறித்து குறி கேட்க அரக்கன் வேஷம் போடு, நீ அரக்கனாக எல்லாரையும் அழிக்க பிறந்தவன் என்று சொல்லி ஷாக் கொடுக்க அவன் வேறு வழியில்லாமல் வேஷம் போட தயாராகிறான். 

அதனை தொடர்ந்து ஷண்முகம் சிவன் வேஷம் போடும் போது சாமி அவனிடம் நீ அரக்கனை அழிக்க பிறந்தவன் என்று சொன்ன விஷயங்கள் நினைவுக்கு வந்து போகிறது. அடுத்து ரத்னா அம்மன் வேஷம் போட்டு கொண்டு சாந்தகமாக கோவிலுக்கு நுழைகிறாள். இன்னொரு பக்கம் முத்துப்பாண்டி வேஷம் கட்டி கொண்டிருக்க அங்கு வரும் பாக்கியம் என்ன வேஷம் என்று கேட்க எல்லாம் கெத்தான வேஷம் தான் என்று சொல்கிறான் ஷ

அப்படி என்ன வேஷம் என்று கேட்கிறாள், முத்துபாண்டி அரக்கன் வேஷம் என சொன்னதும் பாக்கியம் உனக்கு சரியான வேஷம் தான், நீ அரக்கன் தான் என்று கலாய்த்து கிளம்புகிறாள். பிறகு முத்துப்பாண்டி வேஷம் கட்டி கொண்டு ரத்னாவை பார்க்க வர சிவனாக ஷண்முகம் நடுவில் வந்து நிற்க இருவரும் ஒருவரை முறைத்தபடி நிற்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மகாவை வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் சீதா, ஷாக்கான ராம்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இது சீரியலில் நேற்றைய எபிசோட்டில் ராமின் தங்கைகள் மூன்று பேரும் மொத்த குடும்பத்திடம் வசமாக சிக்கிய நிலையில் இன்றைய எபிசோட்டில்,வீட்டுக்கு வந்த மகா 3 பேரையும் போட்டு அடி வெளுத்து எடுக்க அர்ச்சனா மகா உன் கால்ல கூட விழுகிறேன் அவங்கள அடிக்காத என்ன கெஞ்சியும் மகா அதை கண்டுகொள்ளாமல் அடி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

பிறகு சீதா அடிச்சது போதும் மன்னிப்பு கேளுங்க என்று சொல்ல மகா கோபமாக போய் மன்னிப்பு கேளுங்க என்று சொல்ல சீதா மன்னிப்பு கேட்க வேண்டியது அவங்க கிடையாது நீங்களும் அர்ச்சனாவும் தான் என அதிர்ச்சி கொடுக்கிறார். அன்னைக்கு அவங்க தப்பு பண்ணி இருக்காங்கன்னு சொல்லும்போது எங்க வளர்ப்பு சரியாத்தான் இருக்கும்னு நீங்கதானே சொன்னீங்க அப்ப நீங்க தான் மன்னிப்பு கேட்கணும் என்று கூறுகிறார். இதனால் ராம் உட்பட எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

ராம் சீதாவை ரூமுக்கு அழைத்துச் செல்ல நீங்க மன்னிப்பு கேட்டு தான் ஆகணும் இல்லனா இந்த வீட்டை விட்டு வெளியே போகணும் என எச்சரித்துவிட்டு உள்ளே செல்கிறாள். ரூமுக்குள் வந்த சீதாவிடம் சித்தி எதுக்கு மன்னிப்பு கேட்கணும் அவங்க என்ன தப்பு பண்ணாங்க என்ற கேள்வி கேட்க சீதா அவக தானே அன்றைக்கு என்னை அவ்வளவு டார்ச்சர் பண்ணி அவங்க கிட்ட மன்னிப்பு கேட்க வச்சாங்க, அதெல்லாம் மறந்துட்டீங்களா பாஸ் என கேள்வி கேட்கிறாள்.

பிறகு துரை சீதாவுக்கு முழுவதுமாக சப்போர்ட் செய்ய ராம் குழப்பத்தில் இருக்கிறான். இங்கே மகா மற்றும் அர்ச்சனா இருவரும் நாம அந்த தையல்காரி கிட்ட மன்னிப்பு கேட்கணுமா அதுக்கு எல்லாம் வாய்ப்பே கிடையாது என பேசிக்கொண்டு சென்றனர். பிறகு ரூமுக்கு வந்த மூன்று தங்கைகளும் சீதாவிடம் நாங்க உங்ககிட்ட எவ்வளவு வேணாலும் மன்னிப்பு கேட்கவும் ஆனால் சித்தி மட்டும் கேட்க சொல்லாதீங்க என கெஞ்சுகின்றனர்.

ஆனால் சீதா அவர்கள் மன்னிப்பு கேட்டு தான் ஆகணும் என உறுதியாக இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Zeetamil Serial Zee Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment