Advertisment

மருமகளை கடத்திய மாமியார்... கொலை முயற்சியை கண்டுபிடித்த ஹீரோ : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, சீதா ராமன் சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

author-image
WebDesk
Nov 14, 2023 15:06 IST
New Update
Zee tamil anna

ஜீ தமிழ் கார்த்திகை தீபம் - சீதாராமன் - அண்ணா

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்கள் ஒளிபரப்பி வரும் ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை களத்துடன் கூடிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, சீதா ராமன் சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம்:

கார்த்தியின் கையில் சிக்கிய தீபாவின் லெட்டர்.. ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில், தீபா காணாமல் போக கார்த்திக் எல்லா இடத்திலும் தேடி டென்ஷன் ஆகியார். அப்போது ரூமுக்கு செல்லும் போது அங்கு ஒரு லெட்டர் இருப்பதை பார்க்கிறான். அந்த லெட்டரை எடுத்து படிக்கையில் தீபா தன்னுடைய மன நிம்மதிக்காக ஊர் எல்லையில் உள்ள கோவிலுக்கு வேண்டுதல் செய்வதற்காக செல்வதாகவும் தன்னை யாரும் தேட வேண்டாம் மீண்டும் நானே வந்து விடுவேன் என எழுதி இருக்கிறாள்.

மேலும் அந்த லெட்டரில் நான் கொண்டு வந்த சிலையை மண்ணுக்குள் புதைக்கும் அளவிற்கு என் மீது என்ன வன்மம்? ஏன் இப்படி செய்தார்கள் என எனக்கு புரியவில்லை என எழுதி இருப்பதை பார்த்து கார்த்தி ஐஸ்வர்யா மீது மிகவும் கோபம் கொள்கிறான். உடனே ஐஸ்வர்யாவிடம் சென்று நீங்க ஏன் தீபாவுக்கு பிரச்சனை மேல பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்கீங்க. உங்கள மாதிரி அவளும் இந்த வீட்டுக்கு வாழ வந்த மருமகத்தானே என கேள்வி கேட்கிறான்.

நீங்களும் அவளைப் போல இந்த வீட்டுக்கு வாழ தானே வந்தீங்க என ஆவேசப்படுகிறான். ஐஸ்வர்யா நான் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்ல நீங்கதான் கோவில் திருவிழாவில் தீபாவை கொலை செய்ய முயற்சி செய்தது என்பதும் எனக்குத் தெரியும் என உண்மையை போட்டு உடைக்க ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறார். அருண் ஐஸ்வர்யா சின்ன சின்ன தப்பு பண்ண கூடியதுதான் ஆனால் கொலை முயற்சி எல்லாம் செய்திருக்க மாட்டா இன்று சப்போர்ட் பண்ணி பேசுகிறான்.

உடனே அங்கு வரும் அபிராமி இதில் யார் பக்கமும் நான் பேச முடியாது, அது மகன்களுக்குள் பிரச்சனையை உண்டு செய்யும். இது சாமி பிரச்சனை என்பதால் குறி கேட்கலாம் என முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அண்ணா:

அம்மாவை பார்க்க கிளம்பிய சண்முகம்.. அதிர்ச்சி கொடுத்த வைகுண்டம்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில், சண்முகம் வெளியே கிளம்புவதை பார்த்த வெட்டுக்கிளி எங்கே என்று விசாரிக்க கேரளா வரை சென்று வருவதாக சொல்ல வைகுண்டம் சூடாமணியை பார்க்க போவதாக நினைத்து சண்முகத்துடன் செல்ல முடிவெடுக்கிறார். ஆனால் சண்முகம் கீழக்கரை வரை சென்று வருவதாக சமாளித்து அங்கிருந்து கிளம்புகிறான்.

வைகுண்டம் நீ கேரளா தான் போற எனக்கு தெரியும் நானும் வரேன் என்று சொல்ல சண்முகம் இல்லை என மறுத்துவிட்டு கிளம்பிச் செல்ல வைகுண்டம் அவனுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து சொல்கிறார். வீட்டில் ரத்னாவும் பரணியின் வெங்கடேசை சந்திக்க கிளம்புகின்றனர். மறுபக்கம் வெங்கடேஷ் குடும்பத்தோடு ஊரை விட்டு கிளம்ப வழியில் இவர்கள் சந்தித்து விடுவார்களா என பில்டப் எகிற கடைசியில் சந்திக்காமல் வெங்கடேஷ் வீட்டிற்கு வந்து பார்க்க அவர்கள் சொந்த ஊருக்கு சென்று இருப்பதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சொல்கிறார்.

சரி திரும்பி வந்துருவாங்க என நினைத்து இவர்களும் வீடு திரும்புகின்றனர். இங்கே சண்முகம் ஜெயிலுக்கு வந்து சூடாமணியை பார்க்க மனு கொடுத்துவிட்டு திரும்ப அங்கு வைகுண்டம் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். வைகுண்டம் நான் உன் அம்மாவ பார்க்கணும்டா அவள பாத்து 20 வருஷம் ஆயிடுச்சு என கெஞ்சுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதா ராமன்:

மகாவுக்கு ரெடியாகும் ஆப்பு.. சீதாவுக்கு வந்த சிக்கல்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சீதா கடத்தப்பட சேது ஐஜி வரை பேசி சீதாவை உடனடியாக கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் மகாலட்சுமி வீட்டில் கடத்தப்பட்டவர்கள் பணத்திற்காக போன் செய்தால் அவர்களை டிரேஸ் செய்து பிடிப்பதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்திருக்கின்றனர்.

மறுபக்கம் சீதாவை கடத்திய ரவுடி போலீசுக்கு போன் போட்டு கிட்நாப் குறித்து ஏதாவது கேஸ் பைலாகி இருக்கா என கேட்க அந்த போலீஸ் சீதா கடத்தப்பட்ட கேஸ் பதிவாகி இருப்பதாகவும் இப்போதைக்கு போன் பண்ணி மாட்டிக்காத எனவும் எச்சரிக்கிறார். அதனைத் தொடர்ந்து ரவுடி இது பெரிய பிரச்சினையாகி விட்டது, வேற மாதிரி தான் டீல் பண்ணனும் சீதாவுக்கு நம்முடைய முகம் தெரிஞ்சு போச்சு அவ உயிரோட இருந்தா நமக்கு ஆபத்து என அவளை கொன்று விட திட்டம் போடுகின்றனர்.

இங்கே ராம் வீட்டுக்கு வர துரை சீதா காணாமல் போன விஷயத்தை சொல்ல மகாலட்சுமி நீ டென்ஷனாகாத இது ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது என்று சொல்ல எப்படி டென்ஷன் ஆகாமல் இருக்க முடியும் சீதாவுக்காக கவலைப்பட இந்த வீட்டில் நான் மட்டும்தான் இருக்கேன் என ராம் கோபப்படுகிறான். மேலும் இது மூன்று தங்கச்சிகளும் சேர்ந்து செய்த சதியாக கூட இருக்கும் என சந்தேகப்பட மகாலட்சுமியும் அர்ச்சனாவும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இன்னும் பத்து நிமிஷத்துல அவங்க மூணு பேரும் இங்கே இருக்கணும் நடந்தது என்ன என்பதை நான் விசாரிக்கணும் என ராம் ஆர்டர் போட மகாலட்சுமி நான் வர சொல்றேன் என்று சொல்லி போனை வாங்கி கொண்டு கீழே செல்கிறாள். அஞ்சலிக்கு போன் போட்டு சீதா காணாமல் போன விஷயம் வீட்டில் போலீஸ் இருக்கும் விஷயத்தை சொல்லி தண்ணி வாங்குறதுக்காக இறங்கி போனாங்க ரொம்ப நேரம் ஆகியும் வரல, காலேஜ் லேட்டானதால் கிளம்பி போயிட்டோம் என்பதை மட்டும் சொல்லணும், வேற எதையும் பேசக்கூடாது என சொல்லி போனை வைக்கிறாள்.

மறுபக்கம் சீதா ரவுடிகள் பிடியிலிருந்து தப்பி ஓடி வர ரவுடிகள் அவளை பிடிக்க பின் தொடர்ந்து வருகின்றனர். இங்கே வீட்டிற்கு மீராவும் சக்தியனும் வந்து இது திட்டமிட்ட வேலையா கூட இருக்கும் என மகாலட்சுமியை எதிர்த்து கேள்வி கேட்க சேது இது யாரோ பணத்துக்காக பிளான் பண்ணி தான் பண்ணி இருக்காங்க என கூறுகிறார். உண்மை தெரிய வரட்டும் இந்த முறை யாரையும் மன்னிக்கப் போவதில்லை சீதாவுக்கு அண்ணனா நானே துணையாக நிற்பேன் என சத்தியன் கூறுகிறான். அடுத்ததாக தப்பி ஓடும் சீதாவை ரவுடிகள் செங்கல் எடுத்து தலையில் அடித்து சரிந்து விட வைக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
#Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment