Advertisment

மருமகளுக்கு எதிராக மகா சூழ்ச்சி... சண்முகத்தை எதிர்க்கும் மாமனார் : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் கார்த்திகை தீபம், அண்ணா, சீதாராமன் ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

author-image
WebDesk
New Update
Karthigai Deepam Anna Seetharaman

அண்ணா - கார்த்திகை தீபம் - சீதாராமன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அண்ணா

Advertisment

சூடாமணி கண்ட கனவு.. சண்முகத்தால் சௌந்தரபாண்டிக்கு காத்திருக்கும் செக்மேட்

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணி கொடுத்த 40 நாளில் அவ மனதை மாற்றி காட்டுறேன் என்று சண்முகம் கூறியதை தொடர்ந்து, சௌந்தரபாண்டி ஊர்க்காரர்களிடம் சண்முகம் தர்மகத்தா தேர்தலில் நிற்க போவது இல்லை என கூறிய நிலையில் இன்று வைகுண்டம் சண்முகம் அப்படி ஒன்னும் சொல்லலே அவன் தேர்தலில் நிற்பான் என்று சொல்ல, அதை அவனை இங்க வந்து சொல்ல சொல்லு என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்கள்.

வீட்டிற்கு வந்த வைகுண்டம் தர்மகத்தா தேர்தலில் நிற்க போவது இல்லைனு சொன்னியா? ஏன் இப்படி சொன்ன என்று கோபப்பட்டு திட்ட பரணி நிற்க வேண்டாம்னு சொன்ன விஷயத்தை சொல்கிறான். அதை கேட்டதும் வைகுண்டம் பரணி சொன்னா அதில் ஒரு காரணம் இருக்கும், அவ சொல்லிட்டா நிற்க வேண்டாம் என்று சொல்கிறார். பிறகு பரணியிடம் இதுபற்றி மறைமுகமாக பேச போக பரணி நீங்க என்ன கேட்க வரீங்கனு எனக்கு தெரியும் மாமா, நான் எங்க அப்பா சொன்னதால் அவனை தேர்தலில் நிற்க வேண்டாம்னு சொல்லல.

அவனை நம்பி 4 தங்கைகள் இருக்காங்க. சண்முகம் தலைவராக பொறுப்பேற்றதும் சொந்த காசை போட்டு நிறைய செலவு பண்ணிட்டு இருக்கான். அதனால் தான் இன்னொரு பதவி வேண்டாம்னு சொன்னதாக சொல்ல வைகுண்டம் பரணியின் மனதையும் சண்முகத்தின் மீது இருக்கும் அக்கறையையும் புரிந்து கொள்கிறார். மறுப்பக்கம் ஜெயிலுக்குள் இருக்கும் சூடாமணி தர்மகத்தாவாக இருக்கும் சௌந்தரபாண்டி முருகன் கோவில் நகைகளை திருடி வைத்து கொள்வது போல கனவு கண்டு அலறி எழுகிறாள்.

சௌந்தரபாண்டி தர்மகத்தாவாக இருப்பதால் தான் இப்படியெல்லாம் செய்கிறான், அந்த பதவியை அவனிடம் இருந்து பறிக்க வேண்டும் என்று சூடாமணி முடிவெடுக்க இதே நேரத்தில் சண்முகம் அவளை பார்க்க ஜெயிலுக்கு வருகிறாள். இதனால் சூடாமணி இது எல்லாம் முருகனோட வேலை தான் என அறிந்து கொண்டு இது பற்றி சண்முகத்திடம் பேச முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சீதாராமன்

ராம் சீதாவை பிரிக்க மகா செய்த சூழ்ச்சி.. ராஜசேகர் வைத்த செக்மேட்

சீதா ராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதாவின் அப்பா அம்மா வீட்டிற்கு வர மகா சிரித்த முகத்தோடு அவர்களை வீட்டிற்கு அழைத்த நிலையில் இன்று,  மகா சீதாவின் அப்பா அம்மாவை அழைத்து சென்று உட்கார வைத்து பேசும் போது, எல்லாரும் மகாவின் மாற்றம் குறித்து பேச, இவர்களும் அதனை நம்பி விடுகின்றனர். அடுத்ததாக ரூமுக்குள் சென்று சீதாவிடம் பேசி கொண்டிருக்கும் போது மீரா, மகா ஏதோ பிளான் போடுறாங்க என்று உண்மையை உடைக்கிறாள்.

இதனால் ராஜசேகர் சீதாவை ஊருக்கு அழைத்து சென்று விடலாம் என்று முடிவெடுக்க, பாஸ் இதுக்கு ஓகே சொல்லுவாங்களானு தெரியலையே என்று சொல்ல, ராம் அதெல்லாம் நிச்சயம் ஓகே சொல்லுவான் என்று மீரா சொல்கிறாள். பிறகு ராஜசேகர் மகா மற்றும் சேதுவிடம் சீதாவே சின்ன பொண்ணு, அவளுக்குள்ள இப்போ ஒரு குழந்தை வளருது. அதனால் நாங்க அவளை ஊருக்கு கூட்டிட்டு போய் பார்த்துக்கறோம் என்று சொல்ல மகா ஷாக் ஆகிறாள்.

இவ ஊருக்கு போய்ட்டா குழந்தையை பெத்துக்கிட்டு தான் ஊருக்கு வருவா. அப்புறம் ராமிடம் இருந்து இருந்து இவளை பிரிக்கவே முடியாது என கணக்கு போட்டு சீதா இங்கயே இருக்கட்டும் நாங்க அவளை நல்லபடியாக பார்த்துக்கறோம். சீமந்தம் முடிந்ததும் நீங்க ஊருக்கு கூட்டிட்டு போங்க என்று சொல்கிறாள். சேதுவும் அப்படியே சொல்ல ராஜசேகர் தனது மனைவி உமாவை சீதாவுக்கு துணையாக இங்கேயே விட்டு செல்கிறார்.

அடுத்ததாக மகா கடைசி நாள் விரதத்தையும் பெரிய பூஜை செய்து வெற்றிகரமாக செய்து முடிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கார்த்திகை தீபம்

புது கேரக்டரில் என்ட்ரி கொடுக்கும் சாமிநாதன்.. சீரியலில் ஏற்படும் அடுத்த திருப்பம்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சிதம்பரம் தீபாவை சந்தித்து தனக்காக பாடி தர சொல்லி விலை பேச, தீபா மறுப்பு தெரிவித்த நிலையில் இன்று கார்த்தியும் தீபாவும் ரூமில் பேசி கொண்டிருக்கும் போது திடீரென அபிராமி அதெல்லாம் வேண்டாம், நமக்கு சரி வராது என்று அருண் ஐஸ்வர்யாவிடம் சத்தம் போடுகிறார். இதை கேட்டு கார்த்திக் வெளியே வருகிறான். அருண் ரிசார்ட் ஒன்றை வாங்க போவதாக சொல்ல அபிராமி இந்த பிசினலில் நமக்கு அனுபவம் கிடையாது, வேண்டாம் என்று சொல்கிறாள்.

உடனே அருண் ஐஸ்வர்யா, கார்த்திக் ஏதாவது புது பிசினஸ் பண்ணா மட்டும் எந்த மறுப்பும் சொல்லாமல் ஏத்துக்கறீங்க, எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி சொல்றீங்க என்று வாக்குவாதம் செய்ய, கார்த்திக் நாம எல்லாரும் ரிசார்ட்டில் போய் ஒரு வாரம் தங்கி இருக்கலாம். அந்த ரிசார்ட் பற்றி தெரிந்து கொண்டு அதன் பிறகு வாங்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம் என்று சொல்ல எல்லாரும் சம்மதம் தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து எல்லாரும் ரிசார்ட் கிளம்ப மீனாட்சி மாடர்ன் உடையில் ரெடியாகி, தீபாவையும் மாடர்ன் உடையில் வர சொல்ல, அவள் எனக்கு இதெல்லாம் செட்டாகாது என்று மறுப்பு தெரிவித்து விடுகிறாள். கார்த்திக் தீபா காரில் சென்று கொண்டிருக்கும் போது கார்த்திக் உங்களை கேக்காமல் ரிசார்ட் போலாம்னு சொன்னதில் உங்களுக்கு ஒன்னும் கோபமில்லையே என்று கேட்க, அதெல்லாம் இல்லை சார் என்று சொல்கிறாள்.

மேலும் மனதுக்குள் நாம் ரெண்டு பேரும் தனியா போய் இருக்கலாம் என்று நினைக்க, கார்த்திக் அதை அப்படியே சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுக்கிறான். பிறகு எல்லாரும் ரிசார்ட் வந்து இறங்க, ரிசார்ட் மேனேஜராக பிரபல நடிகர் சுவாமிநாதன் என்ட்ரி கொடுக்கிறார். எப்படியாவது இந்த ரிஸார்ட்டை இவர்களிடம் விற்று விட வேண்டும் என கணக்கு போட்டு அருண் என நினைத்து கார்த்திக்கிடம் ரிசார்ட் பற்றி ஓவர் பில்டப் படுத்தி பேச, கார்த்திக் கடைசியில் நான் அருண் இல்லை என்று பல்பு கொடுக்கிறான்.

அடுத்து மீனாட்சியின் கணவர் என்ட்ரி கொடுத்து எல்லாருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment