Advertisment

பாட்டியை கடத்திய ஹீரோ... மாமனாரை கெஞ்சவிட்ட மருமகன் : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, சீதாரமன் சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
zee tamil Anna KD See

ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதாராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

கார்த்திக் வீசிய வலையில் சிக்க போகும் தீபா.. ரூபஸ்ரீக்கு காத்திருந்த அதிர்ச்சி

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் இளையராஜா கோகிலாவை பணத்தாசை காண்பித்து தூக்கிய நிலையில் இன்று  பல்லவி வந்து பாடியே ஆகணும் இல்லனா கோகிலா விடமாட்டோம் என்று சொல்லி மிரட்ட, ரூபஸ்ரீ அதிர்ச்சி அடைகிறாள். உடனே தீபாவுக்கு போன் போட்டு இந்த ஒரே ஒரு முறை மட்டும் பாடி கொடு என்று கெஞ்ச தீபா இனிமே அவர ஏமாத்திட்டு வந்து நான் பாட மாட்டேன் என மறுத்து விடுகிறாள்.

இது கார்த்திக்கு செய்ற பிராயசித்தமா இருக்கட்டும் இந்த ஒரு முறை மட்டும் பாடி கொடு என ரூபஸ்ரீ கெஞ்சி கூத்தாட தீபா பாடுவதற்கு ஒப்புக்கொள்கிறார். மேலும் பாட்டு பாடுவதற்காக கண் பார்வை அற்ற குழந்தைகளின் ஆசிரமத்திற்கு வர சொல்ல, தீபாவும் அங்கு செல்ல ரூபஸ்ரீ பல்லவியாக அறிமுகம் செய்து வைக்கிறாள். குழந்தைகள் எல்லோரும் தீபாவின் கையைப் பிடித்து உங்க குரல் ரொம்ப நல்லா இருக்கு உங்க பாட்டு எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என பேசுகின்றனர்.

வீட்டுக்கு வரும் தீபா மீனாட்சியிடம் ரூபஸ்ரீக்காக பாட போகும் விஷயத்தை சொல்ல, மீனாட்சி வேண்டாம் நீ போகாத என்று சொல்ல தீபா இந்த ஒரு முறை பாடி கொடுக்கிறேன் என சொல்கிறாள். அடுத்ததாக வீட்டுக்கு கெஸ்ட் வர அபிராமி அவர்களை அழைத்து உட்கார வைத்து உபசரிக்கிறார். கல்யாணத்துக்காக பத்திரிக்கை வைக்க வந்திருந்த அவர்களிடம் உங்க பொண்ணோட கல்யாண புடவையை நான் தான் எடுத்து கொடுப்பேன் என சொல்கிறார்.

அதன் பிறகு தன்னுடைய மருமகள்கள் என ஐஸ்வர்யா மற்றும் மீனாட்சி அறிமுகம் செய்யும் அபிராமி தீபாவை அறிமுகம் செய்யும்போது கார்த்தியோட பொண்டாட்டி என சொல்கிறாள். இதனால் தீபா வருத்தப்பட்டு நிற்க கார்த்திக் அம்மா சொன்னது நெனச்சு கவலைப்படுறீங்களா என்று ஆறுதல் கூறுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

சௌந்தரபாண்டியை வெறுப்பேற்றி கோவிலில் வைத்து சண்முகம் கொடுத்த வாக்கு

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் முத்துப்பாண்டிக்காக தட்டு மாற்றும் விழாவுக்கு கிளம்பி வந்த நிலையில், இன்று சண்முகம் மற்றும் வைகுண்டம் மட்டும் கோவிலுக்கு வரும்போது சவுந்தரபாண்டி வைகுண்டத்தை பற்றி தர குறைவாக பேச சண்முகம் அவங்களா வந்து கூப்பிடுற வரைக்கும் நாம உள்ள போகக்கூடாது என சொல்லி விடுகிறான்.

சௌந்தரபாண்டி நான் வந்து கூப்பிட மாட்டேன் என்று வீம்பு பிடிக்க ஒரு கட்டத்தில் பாண்டியம்மாவும் முத்துப்பாண்டியும் இப்படி வீம்பு பண்ணிட்டு இருந்தா சந்தேகம் வந்துடும் என்று சொல்ல, சௌந்தரபாண்டி வெளியே சென்று அவர்களை வேண்டா வெறுப்பாக கூப்பிட சிரித்துக் கொண்டே கூப்பிட்டால் தான் வருவோம் என சண்முகம் அவரை வெறுப்பேற்றுகிறான்.

பிறகு சௌந்தரபாண்டி வேறு வழி இன்றி சிரித்துக் கொண்டே கூப்பிட இருவரும் உள்ளே வருகின்றனர். முத்துப்பாண்டிக்காக பார்த்திருக்கும் பெண் பவானி சாமி கும்பிட்டு விட்டு சண்முகம் காலில் வந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள். எனக்கு அக்கா மாமா மட்டும்தான் வேற யாரும் சொந்தம்னு கிடையாது. நீங்க நினைச்சா தான் இந்த கல்யாணம் நடக்கும்னு சொன்னாங்க என்று சொல்கிறாள்.

இனிமே உனக்கு ஒரு அண்ணனா நான் இருக்கேன், நான் இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன் என சண்முகம் வாக்கு கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதா ராமன்:

மகா கொலை கேஸை கையில் எடுக்கும் ராம்.. மரண பயத்தில் அர்ச்சனா

சீதா ராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம் சித்திய கொண்டது யாராயிருந்தாலும் சும்மா விடமாட்டேன் என சபதம் எடுத்த நிலையில் இன்று, ராம் பயிற்சி முடிந்து போலீஸ் அதிகாரியாக பதவியேற்கிறான். முதல் கேசாக மகாவின் கொலை வழக்கு ராமிடம் ஒப்படைக்கப்படுகிறது. வீட்டுக்கு வந்து ராம் இந்த விபத்து நடந்த விஷயங்களை ஆராய்ச்சி செய்ய அர்ச்சனாவுக்கும் சுபாஷுக்கும் பயம் வருகிறது. அர்ச்சனா கல்பனாவுக்கு போன் போட்டு புலம்புகிறாள்.

சுபாஷ் ரவுடிகளுக்கு போன் போட்டு பேசுகிறார். ராமின் தங்கைகள் சித்தியை கொன்றவர்களை சும்மா விட கூடாது என கண் கலங்குகின்றனர். சீதா அவங்கள விலங்க மாட்டி கூட்டிட்டு போங்க பாஸ் என்ன சொல்கிறார். சேதுவிடமும் ராம் இது குறித்து விசாரிக்க சீதாவிடம் இனிமே நீதான் மகா இடத்தில இருந்து இந்த குடும்பத்தை வழி நடத்தணும் என சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment