Advertisment

மனைவியை கைது செய்யும் கணவன்... தங்கை வாழ்க்கையை காப்பாற்றுவரா அண்ணன்? ஜீ தமிழ் சீரியல்

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி. புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
zee KD Ann Se

அண்ணா - கார்த்திகை தீபம் - சீதாராமன்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி. புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

கார்த்திக்கு டிமிக்கி கொடுத்த கோகிலா.. உண்மையை மறைக்க ரூபஸ்ரீ போட்ட பிளான்

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோட்டில் தீபா பல்லவியாக பாட முடிவெடுக்க கார்த்திக் பல்லவியை கண்டுபிடிக்க கிளம்பிச் செல்ல இன்று, கோகிலா ரவுடிகளிடம் பாத்ரூம் போக வேண்டும் என அடம் பிடிக்க ஒரு கட்டத்தில் ரவுடிகளும் பாவம் பார்த்து கயிற்றை அவுத்து விட கோகிலா அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து எஸ்கேப் ஆகிறார். இதனைத் தொடர்ந்து ரூபஸ்ரீ வீட்டில் டென்ஷனாக உட்கார்ந்து இருக்க அப்போது யாரோ கதவைத் தட்ட கார்த்தி என பதற்றத்துடன் கதவைத் திறக்க கோகிலாம் நிற்பதை பார்த்து சந்தோஷமாகிறாள்.

பிறகு தீபாவுக்கு போன் போட்டு பாட போக வேண்டாம் என சொல்ல முயற்சி செய்ய போன் நாட் ரீச்சபிள் என வருகிறது. இதனால் ரூபஸ்ரீ தீபா பாடுவதில் நமக்கு பிரச்சனை எதுவும் கிடையாது. ஆனால் கார்த்திக்கு பல்லவி தீபா தான் என்ற உண்மை தெரியக்கூடாது என முடிவெடுக்கிறாள். உடனே ரவுடிகளுக்கு போன் போட்டு கார்த்திக் கண் பார்வையற்ற குழந்தைகள் ஆசிரமத்திற்கு போக விடாமல் தடுத்து நிறுத்த சொல்கிறாள்.

இதை எடுத்து ரவுடிகள் கார்த்தியை பாலோ செய்ய மறுப்பக்கம் தீபா ஆசிரமத்திற்கு வந்து சேர்க்கிறாள். ஆசிரமத்தில் கார்த்திக் ஆர்டர் செய்த ஸ்பெஷலான உணவு வந்திருந்தாலும் பல்லவி பாட்டை கேட்காமல் சாப்பிட மாட்டோம் என குழந்தைகள் அடம்பிடித்துக் கொண்டே இருப்பதாக ஆசிரமத்தின் நிர்வாகிகள் சொல்ல தீபா முதலில் நீங்க எல்லாரும் சாப்பிடுங்க உங்களோட சேர்ந்து நானும் சாப்பிடுகிறேன் என சாப்பிட உட்காருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

பரணியால் சோகமான குடும்பம்.. சண்முகம் வைத்த கோரிக்கை 

அண்ணா, சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் கவிதாவுக்கு இந்த கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன் என்று வாக்கு கொடுக்க, இரண்டு குடும்பமும் தட்டு மாற்றி கொண்ட நிலையில் இன்று, வீட்டிற்கு வரும் சண்முகம் ரத்தனாவிடம் இனிமே உன் வாழ்க்கையில் அந்த முத்துப்பாண்டி வர மாட்டான், அவனுக்கு வேறு பெண்ணோட கல்யாணம் நடக்க போகிறது என்று சொல்கிறான்.

உடனே பரணி ரத்னாவுக்கும் இதே மாசத்தில் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று சொல்கிறாள். மேலும் இன்னும் 28 நாளில் நான் தாலியை கழட்டி கொடுத்து விட்டு இந்த வீட்டை விட்டு போய்டுவேன் என்று சொல்கிறாள். இதை கேட்டு எல்லாரும் சோகமடைகின்றனர். பிறகு ரூமுக்குள் வரும் சண்முகம் பரணியிடம் தங்கைகள் இருக்கும் போது நான் போய்டுவேன்னு சொல்லாத, என்னை விட அவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க, அவங்க கஷ்டப்படுறதை என்னால் பார்க்க முடியல என்று சொல்கிறான்.

இதை கேட்டதும் பரணியும் வருத்தமடைகிறாள். இதன் தொடர்ச்சியாக இங்கே கவிதா தன்னுடைய அக்காவுடன் சௌந்தரபாண்டி வீட்டிற்கு வந்து எல்லாரது காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள். உடனே சௌந்தரபாண்டி பாக்கியத்தை கூப்பிட்டு உன் அண்ணன் பொண்ணுங்க எல்லாரையும் வர சொல்லு எல்லாருக்கும் புடவை எடுத்து கொடுக்கலாம் என்று சொல்ல பாக்கியம் சந்தோசத்துடன் எல்லாரையும் கூப்பிட வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதா ராமன்:

கைதாகும் சீதா.. விசாரணை முடிவில் ராம் கொடுக்கும் அதிர்ச்சி

சீதா ராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம் விசாரணையை வேலைக்காரியிடம் இருந்து தொடங்கிய நிலையில் இன்று, வீட்டில் உள்ள ஒருத்தர் விடாமல் அனைவரிடமும் விசாரணையை நடத்துகிறான். செல்வியை தொடர்ந்து சேது, சேதுவை தொடர்ந்து சுபாஷ் என விசாரணை நீண்டு கொண்டே போகிறது. பிறகு சுபாஷிடம் விசாரணை நடக்க ராம் அவரை அடுத்தடுத்த கேள்விகளால் தடுக்க வைக்கிறான்.

பிறகு சீதாவிடம் விசாரணை நடக்கிறது‌. சீதாவை தொடர்ந்து அர்ச்சனாவிடமும் சீதாவை கொல்ல ஏற்பாடு செய்திருந்த ரவுடியிடமும் விசாரணை நடக்கிறது. அர்ச்சனா அந்த ரவுடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அதெல்லாம் மகாவின் ப்ளான் தான் என்ற உண்மையை உடைக்கிறாள். பிறகு தங்கைகளிடமும் விசாரனை நடக்கிறது.

இறுதி ரிப்போர்ட்களுடன் வீட்டுக்கு வரும் ராம் குற்றவாளியை கைது செய்ய போவதாக சொல்ல, அனைவரும் அர்ச்சனா கைதாவாள் என எதிர்பார்க்க சீதாவின் கையில் விலங்கை மாட்டுகிறான் ராம். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment