ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்
ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக TRP புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.
கார்த்திகை தீபம்:
கார்த்தியை பழி தீர்க்க வந்த பாப்பா.. தீபாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவின் பிறந்த நாளை கொண்டாட போவதாகவும் சீப் கெஸ்ட்டாக பல்லவி வர போவதாகவும் சொல்லிய நிலையில் இன்று, பர்த் டே பார்ட்டியில் தீபா தான் பல்லவி என்ற உண்மையை உடைத்து அனைவர்க்கும் அதிர்ச்சி கொடுக்கிறான் கார்த்திக், பிறகு தீபா கார்திக்கியிடம் மன்னிப்பு கேட்க அவன் உங்கள பெரிய பாடகியாக்கி காட்டுறேன் என்று சொல்கிறான்.
அதன் பிறகு ஐஸ்வர்யாவை சந்திக்கும் மாயா நான் நட்சத்திராவின் தங்கச்சி, சிதம்பரத்தின் மனைவி என அறிமுகம் செய்து கொள்கிறாள். அந்த கார்த்தியை சும்மா விட கூடாது, எனக்கு உங்களுடைய உதவி தேவை என்று சொல்ல ஐஸ்வர்யா ரூபஸ்ரீயையும் இந்த கூட்டணிக்குள் சேர்த்து கொள்கிறாள்.
இதெல்லாம் முடிந்த பிறகு கார்த்திக் ஆபிசில் இருக்க அங்கு வரும் மாயா நான் நட்சத்திராவின் தங்கச்சி, உங்க வாழ்க்கையை சின்னாபின்னமாக ஆக்காமல் விட மாட்டேன் என்று சவால் விடுகிறாள். இப்படியான நிலையில் எடுத்தாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அண்ணா:
சௌந்தரபாண்டி திட்டத்துக்கு பலியான கனி.. rண்முகம் செய்ய போவது என்ன?
அண்ணா, சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னா ஸ்கூல் பிள்ளைகளை அழைத்து கொண்டு டூர் கிளம்ப,பாண்டியம்மா ஒரு திட்டத்தை தீட்டிய நிலையில் இன்று, ரத்னாவை எப்படியாவது திரும்ப கல்யாண மண்டபத்திற்கு வர வைக்க வேண்டும் என யோசிக்க சௌந்தரபாண்டி டீயில் ஒரு வித மயக்க மருந்தை கலந்து பாக்கியத்திற்கு கொடுத்து விட்டால் கொஞ்ச நேரத்தில் அவள் மயங்க இந்த விஷயம் அறிந்து ரத்னா உடனே ஓடி வந்து விடுவாள் என கணக்கு போடுகின்றனர்.
உடனே டீயில் மயக்க மருந்தை கலந்து எல்லாருக்கும் டீ கொடுத்து வரும் சிவபாலனை கூப்பிட்டு உங்க அம்மாவுக்கு சுகர் இருக்கிறதால இது சக்கரை கம்மியா போட்ட டீயை கொடுத்து விடு என்று கொடுத்து அனுப்ப எதிர்பாராத ட்விஸ்ட்டாக கனி அந்த டீ-யை குடித்து விடுகிறாள். இதனால் கொஞ்ச நேரத்தில் அவள் துடிதுடிக்க அந்த விஷயம் ரத்னாவிற்கும் தெரியப்படுத்தப்படுகிறது.
சௌந்தரபாண்டி டீம் யார் குடிச்சா என்ன இருக்கு? அந்த ரத்னா திரும்பவும் கல்யாண மண்டபத்திற்கு வந்தால் போதும் என சொல்கின்றனர். பரணி கனிக்கு சிகிச்சை கொடுத்து அவளை நினைவிற்கு கொண்டு வர முயற்சி செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சீதா ராமன்:
பெயிலில் வெளியே வரும் சீதா.. அர்ச்சனாவை ஏற்றி விட்ட கல்பனா
சீதா ராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் சேது, துரை, மீரா ஆகியோர் சீதாவை பெயிலில் எடுக்க வெளியே வந்திருந்த நிலையில் இன்று, ராம் ஜெயிக்குக்குள் இருக்கும் சீதாவை பார்த்து சாப்பிட சொல்லி பேச அவள் மறுப்பு தெரிவிக்கிறாள், உங்களுடைய விசாரணை தப்பான வழியில் போயிட்டு இருக்கு எனவும் உண்மை தெரிந்தால் ரொம்ப கஷ்டப்படுவீங்க எனவும் பதிலடி கொடுக்கிறாள்.
மேலும் பாஸ் என சொல்லி அழைத்து விட்டு சாரி கேட்டு சார் என மாற்றி கொள்கிறாள். அடுத்ததாக சீதாவை பெயில் கேஸ் விசாரணைக்காக கோர்ட்டிற்கு அழைத்து வருகின்றனர். ராம் பெயில் கிடைக்காது என்று சொல்ல, சீதாவுக்கு நீதிமன்றம் பெயில் கொடுக்க ராம் மூக்குடைந்து நிற்கிறான். இங்கே வீட்டிற்கு வரும் கல்பனா அர்ச்சனாவை சந்தித்து மகாவை கொன்றதற்காக பணத்தை கேட்க முதலில் மறுக்கும் அர்ச்சனா பிறகு பணத்தை போட்டு விட செல்வி இதை கவனித்து விடுகிறாள்.
மேலும் கல்பனா சீதாவுக்கு பெயில் கிடைத்த விஷயத்தை சொல்லி வீட்டிற்கு வந்தால் அவளை நீ உள்ளவே விட கூடாது என ஏற்றி விடுகிறாள். இவர்கள் பேசி கொண்டிருக்கும் நேரத்தில் சீதா ராமுடன் ஜீப்பில் வந்து இறங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.