Advertisment

உண்மையை உடைத்த கார்த்தி... திருந்தாத மாமியார் பேச்சு : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம், சீதாரமன் ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Anna Kd Kart

ஜீ தமிழ் சீரியல்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அர்ச்சனாவை அதிர விட்ட சீதா.. சுபாஷ்க்கு செக்மேட்

Advertisment

சீதா ராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் பெயிலில் வெளியே வந்த சீதா வீட்டிற்கு ராமுடன் வந்திறங்கிய நிலையில் இன்றுவீட்டில் உள்ள எல்லாரும் சீதாவுக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்ல தயாராக வெளியே வரும் அர்ச்சனா ஆரத்தி தட்டை தள்ளி விட்டு சீதா உள்ளே வர கூடாதுமகாவை கொன்னவளுக்கு இந்த வீட்டில் இடமில்லை என ஆவேசப்படுகிறாள்.

சீதா தான் கொலை செய்தானு நீங்க பார்த்தீங்களா என உமா கேட்க எல்லாரும் சீதாவுக்கு ஆதராவாக நிற்க அர்ச்சனா இவ உள்ள வந்தா நான் வெளியே போய்டுவேன் என்று சொல்கிறாள்சீதா மகாவை கொன்னவங்கள கண்டுபிடிக்க தான் நான் வந்திருக்கேன் என்று மரண பயத்தை காட்டுகிறாள்இருவருக்கும் இடையே வாக்குவாதம் முத்த அர்ச்சனா கொன்னுடுவேன் என்று சொல்ல சீதா இன்னொரு கொலையா என்று கேட்க அர்ச்சனாவை திணற விடுகிறாள்பிறகு சீதா வீட்டிற்குள் வர சுபாஷும் அவளிடம் வம்பிழுத்து சண்டையிடுகிறான்.

சேது அண்ணா கிட்ட சொல்லிடுவேன் என்று சொல்ல அப்படியே அந்த 300 கோடி பத்தியும் சேர்த்து சொல்லுங்க என செக்மேட் வைக்கிறாள் சீதா. பிறகு அஞ்சலிப்ரியாகாவியா ஆகியோர் சீதாவிடம் வம்பிழுக்க அவர்களையும் வெளுத்து ஓட விடுகிறாள் சீதாசெல்வி கல்பனா வந்து போன விஷயத்தையும் உங்கள வீட்டிற்குள் விட கூடாதுனு சொன்ன விஷயத்தையும் சீதாவிடம் போட்டு உடைக்கிறாள்இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளார்.

வாண்டடாக சௌந்தரபாண்டி வலையில் விழுந்த சண்முகம் காத்திருக்கும் அதிர்ச்சி

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியத்துக்கு ஸ்கெட்ச் போட்டு சௌந்தரபாண்டி கொடுத்து அனுப்பிய மயக்க மருந்தை கனி குடித்து விட்ட நிலையில் இன்று, பரணி உயிரை கொடுத்து கனியை காப்பாற்ற முயற்சி செய்ய சண்முகமும் மற்ற தங்கைகளும் பதற்றம் அடைகின்றனர். அதே நேரத்தில் விஷயம் அறிந்த ரத்னா கண்ணீருடன் பதறியடித்து கொண்டு மண்டபத்திற்கு ஓடி வருகிறாள்.

தடுமாறி கீழே விழ போன அவளை தாங்கி பிடிக்கும் முத்துப்பாண்டி உள்ளே அழைத்து வர கனியை பார்த்து கண்ணீர் விட முத்துப்பாண்டி சௌந்தரபாண்டி ஆகியோர் நம்ம பிளான் சக்ஸஸ் என்று சந்தோசப்படுகின்றனர்இந்த நேரத்தில் ஒருவன் காலையில் பேனர் சரிந்து விழுதுஇப்போ இந்த சின்ன பொண்ணுக்கு இப்படி ஆகிடுச்சுஇந்த கவிதா ராசி இல்லாதவள் போல.. இந்த கல்யாணம் நடக்க கூடாது என்று சொல்கிறான்.

உடனே கவிதாவின் தாய் மாமா கோபப்பட்டு நீங்க என்னடா சொல்றது, நான் சொல்றேன் இந்த கல்யாணம் நடக்காது. கவிதாவுக்கு வேற மாப்பிள்ளை பார்த்துக்கறேன் என்று அழைத்து செல்ல சௌந்தரபாண்டி பிளான் எல்லாம் நாசமாக போய்டும் போலயே என்று பதறுகிறாள். முத்துபாண்டியை அனுப்பி தடுக்க முயற்சி செய்ய அவனுக்கும் கவிதாவின் தாய் மாமாவுக்கும் இடையே கை கலப்பு ஏற்படுகிறது.

இந்த கல்யாணமே நின்று போகும் நிலைமைக்கு வர அங்கும் வரும் ஷண்முகம் எல்லாரையும் அமைதியாக்கி கவிதா என் தங்கச்சி, இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும் என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தீபா குறித்த உண்மையை உடைத்த கார்த்திக்.‌. அபிராமி கேட்ட கேள்வி

கார்த்திகை தீபம்  சீரியலின் நேற்றைய எபிசோட்டில் மாயா கார்த்தியை பார்க்க ஆபீஸ் வந்த நிலையில் இன்று, கார்த்திகை சந்திக்கும் மாயா நான் நட்சத்திராவோட தங்கச்சி என தன்னை அறிமுகம் செய்து கொள்கிறாள். மேடம் உன்னையும் தீபாவையும் பிரிக்காமல் விடமாட்டேன். உங்க வாழ்க்கைய உரு குலைப்பேன் என்று சவால் விடுகிறாள். அபிராமி வாயாலேயே தீபாவ வீட்டை விட்டு வெளியே துரத்துவேன் என்று சொல்ல கார்த்திக் உன்னால முடிந்ததை பாத்துக்கோ என பதிலுக்கு சவால் விடுகிறான்.

அதைத்தொடர்ந்து மாயா ஐஸ்வர்யா மற்றும் ரூபஸ்ரீ என மூவரும் ஒரு ரெஸ்டாரண்டில் சந்திக்கின்றனர்தீபாவின் வாழ்க்கை அழிக்க நாம மூணு பேரும் சேர்ந்து தான் சில வேலைகள் செய்யணும் என்று கை கோர்க்கின்றனர்‌.  இதனைத் தொடர்ந்து வீட்டில் தீபாவின் பிறந்த நாளுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க தீபாவின் பெயருக்கு ஒரு கொரியர் வருகிறதுகார்த்திக் போய் வாங்கி பிரிச்சு பாருங்க என்று சொல்லி அனுப்பி வைக்க தீபாவும் அதை வாங்கி பிரிக்க உள்ளே புடவை இருக்கிறது.

அதை கட்டிக்கிட்டு கேக் கட் பண்ண வாங்க என்று சொல்லும் கார்த்திக் புடவை கட்டிக் கொள்ளும்போது தீபாவிற்கும் உதவி செய்கிறான். அதோட தீபாவுக்கு மேக்கப் போட்டு விடுவதாக சொல்ல அவள் உங்களுக்கு மேக்கப் போட தெரியுமா என்று கேட்க, அபிராமி காஸ்மெட்டிக் கம்பெனி நடத்துறவனுக்கு மேக்கப் போடத் தெரியாதா? எங்க அம்மாவுக்கு எல்லாம் நிறைய நான் தான் மேக்கப் போட்டு விட்டு இருக்கேன் என்று சொல்லி தீபாவுக்கு மேக்கப் போட்டு விடுகிறான்.

பிறகு பர்த்டே பார்ட்டி தொடங்குகிறது தீபா கேக்கை வெட்ட அருணாச்சலம் பல்லவி வரதா சொன்னீயோ எங்கே என்று கேட்க, தீபா அதிர்ச்சி அடைகிறாள். யார் வரப் போறாங்கன்னு தெரியலையே என்று யோசிக்க, கார்த்திக் தீபா தான் அந்த பல்லவி என்ற உண்மையை உடைக்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். மீனாட்சி, அருணாச்சலம் ஆகியோர் சந்தோஷப்பட அபிராமி இவ்வளவு பெரிய உண்மையை மறைத்திருக்கனா நீ எவ்வளவு பெரிய கல் நெஞ்ச காரியா இருப்ப என கோபப்படுகிறாள்.

பிறகு கார்த்திக் தீபா தம்பிக்காக பாட ஒத்துக்கிட்டா. இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு பால் அடிச்சு சத்தியம் செய்ததால் யார்கிட்டயும் சொல்லாம இருந்தா, அவளை நான் பெரிய பாடகி ஆக்குவேன் என்று சொல்கிறான். அதுமட்டுமின்றி நம்ம கம்பெனியில மட்டும் இல்லாம மத்த நிறைய கம்பெனிகள்ல தீபாவ பாட வைப்பேன் என்று சொல்ல, அபிராமி நம்ப கம்பெனியில் பாடுனா போதாதா என்று கேட்க மற்ற கம்பெனிகளில் பாடினால் தீபாவால் நம்ம குடும்பத்துக்கு தான் பெருமை என்று சொல்கிறான்.

இதைத்தொடர்ந்து தீபா கண்ணீருடன் ரூமுக்கு சென்று விட கார்த்திக் பின்னாடியே வர காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறாள் தீபா. நானே உங்ககிட்ட இந்த விஷயத்தை சொல்லலாம்னு தான் இருந்தேன் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொல்லி இருந்ததும் இதைப் பற்றி சொல்ல தான் என்று கண் கலங்கி அழுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment