Advertisment

பொய்யான கர்ப்பம்... கொலை மிரட்டல் : இன்னும் எத்தனை சீரியல்களில் இந்த வைலன்ஸ்?

ஜீ தமிழின் அண்ணா மற்றும் கார்த்திகை தீபம் சீரியலின் இன்று மற்றும் நாளைய எபிசோடுகள் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
anna Kd Sr

ஜீ தமிழ் சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தீபாவுக்கு எதிராக நடந்த சதி.. ட்விஸ்ட் வைத்த கார்த்திக்

Advertisment

கார்திகை தீபம், சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவின் கச்சேரி குறித்து தமிழகம் முழுவதும் போஸ்டர் ஓட்ட அதை பார்த்து தர்மலிங்கம் ஆனந்த கண்ணீர் விட்டு நன்றி கூறிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, போஸ்டரை பார்த்து கடுப்பாகும் ரூபாஸ்ரீ இந்த தீபாவை பாடவே விட கூடாது என முடிவு செய்து நேராக போலீசை கூப்பிட்டு கொண்டு இவர்கள் பொண்ணை பாட வைப்பதாக சொல்லி 10 லட்சம் ரூபாய் பணம் வாங்கி இருக்காங்க, அதை கொடுத்தா தான் கச்சேரி நடக்கணும் என்று சொல்ல இவர்கள் எதிர்பாராத ட்விஸ்ட்டாக தர்மலிங்கம் 10 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து இவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தாச்சு, அதை வாங்கிட்டோம்னு எழுதி கொடுக்க சொல்லுங்க என்று செக்மேட் வைக்க போலீஸ் இருப்பதால் வேறு வழியின்று எழுதி கொடுத்து விட்டு வெளியேறுகின்றனர்.

அடுத்து தீபா பணம் எப்படி வந்தது என்று கேட்க கார்த்திக் மாப்ள தான் இப்படியெல்லாம் பிரச்சனை நடக்க வாய்ப்பிருக்குனு சொல்லி பணத்தை கொடுத்தாரு என்று சொல்கிறார். அடுத்ததாக இங்கே எல்லாரும் சாப்பிட உட்கார தீபா பரிமாற அபிராமிக்கு சாப்பாடு வைக்க போகும் போது அவள் நானே பரிமாறிக்கிறேன் என்று சொல்கிறாள். தீபாவுக்கு கல்யாண வீட்டில் வைத்து அபிராமி சொன்ன வாரத்தை நினைவுக்கு வருகிறது.

பிறகு திடீரென ஐஸ்வர்யா வாந்தி எடுத்து மயங்கி விழ டாக்டர் வந்து பரிசோதனை செய்து விட்டு மூன்று மாதம் கர்ப்பம் என்று சொல்ல எல்லாரும் சந்தோசப்படுகின்றனர், இந்த நேரம் பார்த்து ஐஸ்வர்யாவின் அம்மா வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்க அபிராமி நீங்க வந்த நேரம் என்று ஐஸ்வர்யா கர்ப்பம் என்று சொல்லி சந்தோசப்படுகிறார்.

இதனையடுத்து ஐஸ்வர்யாவும் அவளது அம்மாவும் பேசும் போது இது அனைத்தும் டிராமா என்பது தெரிய வருகிறது. அடுத்து கார்த்திக்கும் தீபாவும் ரூமுக்குள் இருக்கும் போது கார்த்திக் நீங்க பாடுறதுல மட்டும் கவனத்தை செலுத்துங்க என்று சொல்ல தீபா ஒரு காதல் பாடலை கார்த்திக்காக பாட இந்த நேரத்தில் பூஜை செய்து கொண்டிருக்கும் அபிராமி டிஸ்டர்ப் ஆக ஐஸ்வர்யா இதையே சாக்காக வைத்து ஏற்றி விடுகிறாள். அதே போல் தீபாவுக்காக கார்த்திக் பணம் கொடுத்த விஷயத்தையும் சொல்லி ஏற்றி விடுகிறாள்.

அதன் பிறகு தீபா பாட கூடாது, எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஐஸ்வர்யா, மாயா மற்றும் ரூபாஸ்ரீ ஆகியோர் கூட்டு சேர்ந்து பேச ஸ்ரீஜா ஒரு பிளானை சொல்ல மாயா செம பிளான் என்று கூறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இசக்கியின் தற்கொலை முயற்சி.. சௌந்தரபாண்டியை நடுங்க வைத்த சண்முகம்

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் இசக்கி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்றும் நாளையும் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது இசக்கி எங்கோ நடந்து செல்வதை பார்த்த ரமேஷ் சண்முகத்துக்கு தகவல் கொடுக்க முயற்சி செய்ய முடியாமல் போகிறது, இசக்கியை காணாமல் வீட்டில் எல்லாரும் பதறி கொண்டிருக்க சண்முகம் கோவிலுக்கு வந்து என் தங்கச்சியை என்கிட்டே ஒப்படைத்து விடு என்று வேண்டுகிறான். சிவபாலன் இன்னொரு பக்கம் இசக்கியை தேடி செல்ல ரமேஷ் அவனை பார்த்தும் இசக்கி நடந்து போன விஷயத்தை சொல்ல இவள் கிணத்தில் குதிக்க போகும் கடைசி நிமிடத்தில் அங்கு வரும் சிவபாலன் அவளை தடுத்து நிறுத்துகிறான்.

நீ செத்து போய்ட்டா எல்லா சரியாகிடுமா? அந்த முத்துப்பாண்டி தான் உங்க அக்கா ரத்னாவை விட்டுடுவானா? நீ செத்து சரி செய்யணும்னு நினைக்கிற பிரச்னையை உயிரோட இருந்து சரி செய் என்று வீட்டிற்கு கூட்டி செல்கிறான். வீட்டில் மற்ற சகோதரிகள் இசக்கியை பார்த்து கண் கலங்க கனி நீ தற்கொலை பண்ணிக்கிட்டா நானும் அடுத்த நொடியே தற்கொலை பண்ணிக்கிட்டு செத்து போய்டுவேன் என்று சொல்கிறாள். சண்முகம் இனிமே இப்படி முடிவு எடுக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணு இல்லனா நாங்க எல்லாரும் தற்கொலை செய்து கொள்வேன் என்று சத்தியம் செய்து இசக்கியை சத்தியம் செய்ய வைக்கிறான். அதனை தொடர்ந்து ஷண்முகம் எல்லாருக்கும் சாப்பாடு ஊட்டி விட பரணியும் எனக்கும் ஊட்டி விடு என்று சண்முகம் கையால் சாப்பிடுகிறாள்.

மறுநாள் சண்முகம் பரணியை கிளினிக்கிற்கு அழைத்து செல்லும் போது முதல் முறையாக அவன் மீது காதலோடு சாய சண்முகம் என்ன மயக்கம் வந்துடுச்சா என்று கேட்க இவள் இல்ல மயங்கிட்டேன் என்று சொல்கிறாள். அடுத்து சண்முகத்தை கோவிலுக்கு கூட்டி வர அவன் வர மறுக்க பரணி அவனை கூட்டி சென்று இசக்கியை காணும்னு தெரிந்ததும் நீ இங்க தான் வந்த, எனக்கு அது தெரியும். நீ இங்க வேண்டியதும் தான் அங்க இசக்கி பற்றி சிவபாலனுக்கு தெரிய வந்தது என்று சொல்கிறாள்.

பிறகு சண்முகம் கழட்டிய சாமி கயிற்றை பரணியே கட்டி விடுகிறாள். அடுத்து கிளினிக் வந்து வேலையை முடித்ததும் நேராக சௌந்தராண்டி வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர். கவிதாவோட சாவுக்கு நீங்க தான் காரணம்னு ஒத்துக்கிட்டா முத்துபாண்டியை எதுவும் பண்ண மாட்டேன், இல்லனா கொன்னுடுவேன் என்று வார்னிங் கொடுத்து அங்கிருந்து கிளம்பி வர இவர்கள் பயத்தில் நடுங்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வக்கீலுக்கே செக்மேட் வைத்த சீதா.. கோர்ட்டில் செம ட்விஸ்ட்

சீதா ராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதாவை ஸ்டேஷனில் ஆஜர் படுத்திய நிலையில் இன்று நீதிபதி விசாரணையை தொடங்க வழக்கறிஞர் சீதாவுக்கு எதிராக ஆதாரங்களை கொடுத்து சிக்க வைக்கிறார், இதனால் சீதா குற்றவாளி தான் என்று உறுதியாகும் நிலை உருவாகிறது.

இந்த நேரத்தில் சீதா யாருக்கும் தெரியாமல் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு வருகிறாள், அங்கே கடவுளிடம் என்னையும் என் குழந்தையும் தூக்குல போட பாக்கறியா? அதனால் உன்னுடைய திட்டமா? நான் என்ன தப்பு பண்ணேன்? எனக்கு எதுக்கு இந்த தண்டனை. நீ எல்லாம் கடவுளே இல்லை என கோபமாக பேசி விட்டு அங்கிருந்து கிளம்பி வருகிறார். 

சீதாவை காணாததால் இங்கே நீதிபதி தண்டனைக்கு பயந்து தப்பி இருக்கலாம் என்று அவள் தான் குற்றவாளி என தீர்ப்பு சொல்லும் நேரத்தில் சீதா என்ட்ரி கொடுக்கிறாள். நான் எங்கேயும் போகல, பக்கத்துல இருக்கிற கோவிலுக்கு தான் போய் இருந்தேன். சொல்லாமல் போனது தப்பு தான் என்று மன்னிப்பு கேட்கிறாள்.

நான் நிரபராதி தான் என்பதை நிரூபிக்க எனக்கு 10 நிமிஷம் அவகாசம் வேண்டும் என்று கேட்க வழக்கறிஞர் புதுசா கதை சொல்லி திசை திருப்ப பார்க்கறாங்க அனுமதி கொடுக்க கூடாது என பேச சீதா தரப்பு வழக்கறிஞர் அனுமதி தர வேண்டும் என்று சொல்ல நீதிபதியும் அனுமதி கொடுக்கிறார். பிறகு தன்னை விசாரணை செய்த எதிர்தரப்பு வக்கீலை விசாரணை செய்ய வேண்டும் என்று கூண்டில் ஏற்ற எல்லாரும் ஷாக் ஆகின்றனர்.

சீதாவுக்குள் அந்த முத்தாரம்மனே வந்திருக்கா என்று சொல்கிறாள் உமா, ராஜசேகரும் சீதா காரணம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டா என்று சொல்லி கொண்டிருக்க சீதா நீங்க பெண்களை மதிக்கிறவங்களா என்று கேட்க அந்த வக்கீல் பெண்களை தெய்வமாக நினைக்கிறவன், என் குடும்பத்துல இருக்க பெண்களுக்கு அவ்வளவு மரியாதை தருவேன், இப்போ வரைக்கும் என் கிட்ட நிறைய ஜூனியர் பெண்கள் தான் என்று சொல்ல சீதா இவர் பொய் சொல்றாரு என்று தன்னிடம் அநாகரிகமாக பேசிய வீடியோவை சமர்பிக்கிறாள்.

பிளாஸ்கட்டில் கோவிலில் இந்த வக்கீலிடம் ஜூனியராக வேலை பார்க்கும் பெண் அவர் எப்போது அவமரியாதையுடன் பேசுவார் என்று சொல்லி உங்களிடம் பேசும் போது இந்த விடியோவை எடுத்தேன் என்று கொடுத்ததும் சீதா கடவுளுக்கு நன்றி கூறி அங்கிருந்து கிளம்பி வந்ததும் தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து வக்கீலை எச்சரிக்கும் நீதிபதி சீதாவின் கேஸை தள்ளி வைப்பதாக உத்தரவிடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment