Advertisment

மனைவிக்காக பாடுபடும் கணவன்... மகனை வெறுத்து ஒதுக்கும் அம்மா : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
Anna Mak

அண்ணா - கார்த்திகை தீபம் - சீதாராமன்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

பிரச்சனைக்கு மேல் பிரச்சனை.. தீபாவின் கச்சேரியில் கார்த்தி செய்தது என்ன?

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோட்டில் ரூபஸ்ரீ மயக்க மாத்திரை கலந்த தீர்த்தத்தை தீபா குடித்து மயக்கம் வருவதாக சொல்ல கார்த்திக் உங்களால் பாட முடியும் என்று நம்பிக்கை கொடுத்து மேடையில் உட்கார வைத்த நிலையில் இன்று, தீபா பாடுவதற்கு தயாராக திடீரென பாம் ஸ்குவாட் என்ற பெயரில் சிலர் மண்டபத்திற்குள் வந்து இங்கே பாம் இருப்பதாக தகவல் வந்துள்ளது அதனால் சோதனை செய்ய வேண்டும் என்று சொல்ல கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான்.

இளையராஜா ஏற்கனவே நாங்கள் இரண்டு முறை எல்லாத்தையும் சோதனை செய்து தான் இங்கே கச்சேரியை ஏற்பாடு பண்ணி இருக்கோம் என்று சொல்லியும் அவர்கள் எங்களுக்கு தகவல் வந்திருக்கு எங்களது வேலை செய்ய விடுங்க எல்லாரும் வெளியே போங்க என்று வெளியே அனுப்பி வைத்துவிட்டு மண்டபம் முழுவதும் சோதனை இடுகின்றனர்.

ஆனால் கடைசியில் பாம் எதுவும் இல்லை என்று சொல்லி வெளியே செல்கின்றனர். அடுத்ததாக உள்ளே வந்து பார்க்க அரங்கத்தில் ஒருவர் கூட இல்லாமல் காலியாக இருக்க கார்த்திக் நீங்க பாடுங்க தீபா எல்லாரும் கண்டிப்பா வருவாங்க என்று சொல்லி பாட உட்கார வைத்து இளையராஜாவிடம் ஸ்பீக்கரை வெளியே வைக்க சொல்கிறான்.

அதன் பிறகு தீபா பாடத் தொடங்க இந்த குரலுக்கு தானே எல்லாரும் வந்திருந்தோம் என்று வெளியே சென்ற அனைவரும் மீண்டும் உள்ளே வர தொடங்குகின்றனர். தீபா டிவியில் பாடுவதை பார்க்க அபிராமி அருணாச்சலம் ஆகியோரும் சந்தோஷப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

சண்முகத்துக்கு அதிர்ச்சி கொடுத்த சூடாமணி.. சௌந்தரபாண்டியின் பிளான், பதறி போன குடும்பம்

அண்ணா சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் இசக்கி கல்யாணம் ஆகி போனது மறந்து இசைக்கு காபி கொண்டு வா என்று கூப்பிட பரணி காபியை கொண்டு வந்து கொடுக்க நீ கொடுக்கிற காப்பியை குடிக்க மாட்டேன் என்று தட்டி விடுகிறான். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் இசக்கி முத்துபாண்டிக்கு காபி எடுத்துக் கொண்டு வைக்க ரத்னா இருக்க வேண்டிய இடத்தில் நீ இருக்க நீ எல்லாம் எனக்கு காபி கொண்டு வரியா என்று திட்டி அனுப்புகிறான்.

பிறகு பாக்கியம் என்ன ஆச்சு என்ன சொன்னான் என்று கேட்க இசக்கி நடந்த விஷயத்தை சொல்கிறாள். என்ன பண்றது பொம்பளைங்க வாழ்க்கையே இப்படித்தான் எனக்கும் பிடிக்காமல் தான் இந்த வாழ்க்கை அமைந்துவிட்டது. அதே மாதிரி தான் போகப் போக எல்லாம் சரியாகிவிடும் என்று ஆறுதல் சொல்கிறாள். என் புருஷனை விட உன் புருஷன் நல்லவன் தான். அவனை எப்படியாவது அவங்க அப்பா கிட்ட இருந்து பிரிச்சுடு அப்புறம் எல்லாம் நல்லபடியா மாறும் என்று அட்வைஸ் கொடுக்க இதை பாண்டியம்மா பார்த்து விடுகிறாள்.

இந்த விஷயத்தை சௌந்தரபாண்டி மற்றும் முத்துப்பாண்டியிடம் சொல்ல அவர் அப்படித்தான் என்கிட்ட ஒரு திட்டம் இருக்கு என்று ரகசியமாக ஒரு விஷயத்தை சொல்கிறார். அப்படியே மறுபக்கம் சண்முகம் சூடாமணியை வந்து ஜெயில் சந்தித்து இசக்கிக்கு கல்யாணமான விஷயம், பஞ்சாயத்தில் நடந்தது என அனைத்தையும் சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார்.

உன்னை நம்பி என் பொண்ணுங்கள விட்டுட்டு வந்தேனே என் முகத்திலேயே முழிக்காத போடா என்று கோபப்பட்டு திட்டி அனுப்பி விடுகிறார். இதனால் சண்முகம் மனம் உடைந்து போகிறான். வீட்டில் சண்முகத்தை காணாததால் எல்லோரும் பதறி போய் தேடத் தொடங்குகின்றனர். பரணிக்கும் தகவல் கொடுக்க அவளும் அதிர்ச்சியாகி சண்முகத்தை தேடி அலைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதா ராமன்:

சீதாவை சிக்க வைக்க நான்ஸி போடும் திட்டம்.. நடக்க போவது என்ன?

சீரியல் சீதாராமன் சீரியலின் இன்றைய எபிசோடில் சுபாஷ் மற்றும் துரை இருவரும் உட்கார்ந்து சரக்கடிக்க சுபாஷ் அர்ச்சனா முன்ன மாதிரி இல்ல எதுக்கெடுத்தாலும் கை வைக்கிறா, அடி இடி போல விழுது என்று புலம்ப துரை பேசாம டைவர்ஸ் பண்ணிட்டு அந்த ஹைதராபாத் காரிய கூட்டிட்டு வந்துட்டு என்று ஐயா கொடுக்க சுபாஷ் அங்கிருந்து எழுந்து சென்று விடுகிறான்.

ரூமில் அர்ச்சனா வேடத்தில் இருக்கும் கல்பனா சிகரெட் பிடித்துக் கொண்டிருக்க சுபாஷ் கதவை தட்டியதும் சிகரெட்டை தூக்கிப்போட்டு கதவைத் திறக்க என்னமோ ஸ்மெல் வருது என்று கேட்க குடிச்சிருந்தா ஸ்மெல் வர தான் செய்யும் என்று சுபாஷ் பிடித்து திட்டிக் கொண்டிருக்க இதை பார்த்து சீதா உள்ளே வந்து அவளும் ஏதோ ஸ்மெல் வருது என்று சொல்ல சுபாஷ் மேல இருந்து தான் வருது என்று சமாளித்து விடுகிறாள்.

பிறகு சுபாஷை ரூமில் விட்டு வெளியே செல்ல சுபாஷ் நான்சி வந்ததிலிருந்தே அர்ச்சனா சரி இல்ல என்று சொல்கிறார். இதனால் சீதாவுக்கு அர்ச்சனா மீது சந்தேகம் வருகிறது. அடுத்ததாக எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்திருக்கும் போது சீதாவின் அம்மா உமா சீதாவுக்கு மூணு மாசம் ஆயிடுச்சு மருந்து கொடுக்கணும் நல்ல நாள் பார்த்து கொடுக்கலாமா என்று கேட்கிறாள்.

சேது ஒரு தேதியை முடிவு பண்ணிட்டு சொல்லுங்க என்று சொல்ல கடைசியாக வரும் புதன்கிழமை கொடுக்கலாம் என்று முடிவு எடுக்கின்றனர். அன்னைக்கு சீதாவுக்கு மருந்து கொடுக்கவும் விடக்கூடாது கோர்ட்டுக்கு வரதையும் தடுத்து நிறுத்தனும் என்று பிளான் போடுகிறாள் நான்சி. பிறகு சீதாவுக்கு எதிராக வாதாடிய சேஷாத்திரி வீட்டுக்கு வர உள்ளே கூப்பிட்டு காபி கொடுத்து உபசரிக்க காபி குடிக்க சேஷாத்திரி செல்வியை என் வேலைக்காரி இதெல்லாம் எடுத்துட்டு போ, நான்சி மேடம் வந்தா நான் வந்துட்டு போனதா சொல்லு என்று சொல்கிறார்.

உடனே சீதா அவர்கள் எப்படி வேலைக்காரின்னு சொல்லலாம் அவங்க வேலையை நீங்க செய்ய முடியாது உங்க வேலையை அவங்க செய்ய முடியாது எல்லாருடைய வேலையும் கௌரவமான தான் என்று பதிலடி படுத்தி அவரை மன்னிப்பு கேட்க வைக்கிறார். இதனால் கோபம் அடையும் சேஷாத்ரி உன்னை சும்மா விடமாட்டேன் இன்னைக்கு கேஸ் கோர்ட்டில் இருக்குது என்று எச்சரித்து விட்டு கிளம்புகிறார்.

வெளியே வந்தது நான் ஸ்ரீ காரில் வந்து இறங்குகிறாள். பிறகு சேஷாத்ரியிடம் உனக்கும் எனக்கும் பொதுவான எதிரி சீதா. அவள சும்மா விட கூடாது. நான் சொல்ற மாதிரி செஞ்சேன் அவளை குறைந்தது பத்து வருஷம் ஜெயிலுக்குள்ள தள்ளிடலாம் என்று சொல்லி ஐடியா கொடுக்க சேஷாத்ரி சீதாவின் மீதான பகையை தீர்த்துக் கொள்ள நான்சியோடு கைகோர்க்கிறார்.

பிறகு செல்வி என்ன பேசி இருப்பாங்க சீதா அம்மா என்று கேட்க இரண்டு பேரும் சேர்ந்து ஏதோ பிளான் போடுறாங்க. ஆனா எனக்கு அந்த முத்தாரம்மன் துணையா இருப்பா என்று கூறுகிறார் சீதா. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment