Advertisment

போதையில் தள்ளாடும் அண்ணா... நகைகளை அபகரிக்கும் வில்லி : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக TRP புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

author-image
WebDesk
New Update
Zee tamil Anna And Kar Sr

அண்ணா - கார்த்திகை தீபம் - சீதாராமன்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

Advertisment

ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக TRP புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம் ,அண்ணா, சீதா ராமன், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்.

கார்த்திகை தீபம்:

கச்சேரியில் பாடி முடித்ததும் தீபாவுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு‌, நெரிசலில் சிக்கிய அபிராமி

கார்த்திகை தீபம் சீரியல் நேற்றைய எபிசோடில் கச்சேரியில் காத்துக் கொடுத்த ஊக்கத்தால் தீபா நல்லபடியாக பாடிய நிலையில் இன்று தீபாவின் பாடலைக் கேட்ட எல்லோரும் அவளிடம் ஆட்டோகிராப் வாங்கி கைகுலுக்கி சந்தோஷப்படுகின்றனர். இந்த வழியாக சென்ற மியூசிக் டைரக்டர் ஒருவரும் தீபாவின் குரலைக் கேட்டு கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்து உங்களுடைய குரல் ரொம்ப தெய்வீகமா இருக்கு நான் ஒரு மியூசிக் டைரக்டர் ஒரு பெரிய ப்ரொடக்ஷன்ல அடுத்து ஒரு படம் பண்ண கமிட் ஆகி இருக்கேன்.

அந்தப் படத்துல நீங்க தான் எல்லா பாட்டும் பாடி கொடுக்கணும் என்று சொல்ல தீபா மிகுந்த மகிழ்ச்சி அடைந்து கார்த்திக்கு நன்றி சொல்கிறாள். மேடையில் நன்றி சொன்னது மட்டுமின்றி கீழே இறங்கி வந்து கார்த்தியிடம் கைகூப்பி நிற்கிறாள்.  அடுத்ததாக கார்த்திகை தீபா இருவரும் வீட்டிற்கு வர மீனாட்சி அவர்களுக்கு திருஷ்டி எடுத்து பூசணிக்காய் சுற்றி வரவேற்கிறாள். பிறகு கார்த்திக் அபிராமி இடம் தீபா ரொம்ப நல்லா பாடினார்கள் ஒரு மியூசிக் டைரக்டர் படத்துல வாய்ப்பு கொடுத்து இருக்காங்க என்று சொல்ல அபிராமி அப்படியா சரிப்பா என்று பெரிதாக ரியாக்ட் செய்யாமல் பேசுகிறாள்.

அதன் பிறகு அபிராமி தீபாவை கூப்பிட்டு கோவிலுக்கு அழைத்துச் செல்ல அங்கு விளக்கு போட்ட பிறகு தீபாவை பார்த்த மக்கள் நீங்க பல்லவி தானே என்று ஒன்று கூடி விடுகின்றனர். கூட்ட நெரிசலில் அபிராமியும் கீழே தள்ளிவிட கையில் அடிபட்டு ரத்தம் வர தொடங்குகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அண்ணா:

போதையில் தள்ளாடும் சண்முகம்.. மானத்தை வாங்கிய சௌந்தரபாண்டி

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகத்தை சூடாமணி என் முகத்திலேயே முழிக்காத என்று திட்டி அனுப்பிய நிலையில் இன்று சண்முகம் வீட்டிற்கு வராததால் விஷயம் அறிந்த பரணி உடன்குடிக்கு போன் போட்டு கேட்க, அவன் எங்கயாச்சும் போயிருப்பான், வந்திருவான் என்று சொல்லி போனை வைத்து விட்டு கையில் வைத்திருந்த சரக்கை ஜூஸ் பாட்டிலில் ஊற்றி மிக்ஸ் செய்து சண்முகத்தை தேட கிளம்புகிறான்.

ஒரு இடத்தில சண்முகம் சோகமாக உட்கார்ந்திருக்க உடன்குடி என்னப்பா இங்க இருக்க வீட்டுக்கு போ பா என்று சொல்ல வீட்டுக்கு போகவே பிடிக்கல, இசக்கி ஞாபகமாகவே இருக்கு என்று வருத்தப்படுகிறான். அந்த சௌந்தரபாண்டியை சும்மா விட மாட்டேன் என்று கொந்தளிக்க, உடன்குடி சரக்கு கொடுத்து இதை குடிப்பா உன் சோகம் எல்லாம் பறந்து போய்டும் என்று சொல்லி கொடுக்க சண்முகமும் அது சரக்கு என்று தெரியாமல் குடித்து விடுகிறான்.

இதனையடுத்து சண்முகம் குடி போதையில் அவர்களையே அடித்து துரத்தி விட்டு தள்ளாடி கொண்டு நடந்து வர ஒரு குச்சியை வைத்து காரை அடிக்க போக உள்ளே இருந்து சௌந்தரபாண்டி மற்றும் சனியன் வெளியே வருகின்றனர். சண்முகம் குடி போதையில் இருப்பதை ஊரே வேடிக்கை பார்க்க இதை பார்த்த சௌந்தரபாண்டி சந்தோஷப்படுகிறான்.  இவன் தான் உங்க பஞ்சாயத்து தலைவரா? இவன் தான் உங்க வருங்கால தர்மகத்தாவா என்று அவமானப்படுத்தி பேசுகிறான்.

மேலும் சனியனிடம் நைசா வேட்டியை உருவி விடு என்று சொல்ல அவனும் முயற்சி செய்ய சண்முகம் இவர்களை நடக்க விடாமல் தடுத்து விடுகிறான். அடுத்து வீட்டிற்கு வந்த சௌந்தரபாண்டி பாண்டியம்மா மற்றும் முத்துபாண்டியிடம் நடந்த விஷயத்தை சொல்லி சந்தோசப்பட இதை கேட்ட இசக்கி அயோ அண்ணா என்று பதறியடித்து ஓடி வருகிறாள். சண்முகம் குடிபோதையில் ரோட்டில் விழுந்து கிடக்க இதை பார்த்த இசக்கி அண்ணா அண்ணா என்று தலையில் அடித்து கொண்டு புலம்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சீதா ராமன்:

நகையை கண்டு ஆசை கொள்ளும் கல்பனா.. சீதா, சத்யாவுக்கு அடுத்தடுத்து வரும் சந்தேகம்

சீதா ராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதாவுக்கு எதிராக நான்சியும் சேஷாத்திரியும் கை கோர்த்த நிலையில் இன்று, ராமும் சீதாவும் ரூமுக்குள் முதல் பங்க்ஷன் நடக்க போவதை நினைத்து சந்தோஷமாக பேசி கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கல்பனா அர்ச்சனாவின் நகைகளை எடுத்து பார்த்து சந்தோசப்படுகிறாள். இவ்வளவு நகை இருக்கா என்று எல்லாத்தையும் எடுத்து போட்டு பார்த்து நகைகள் மீது ஆசைப்படுகிறாள்.

அடுத்து நைட் நேரத்தில் சுபாஷ் ரூமுக்குள் வந்ததும் அர்ச்சனாவை நெருங்க நினைக்க வாங்கிய அடி ஞாபகத்திற்கு வர பயந்து போகிறான். மறுநாள் காலையில் அர்ச்சனா மீண்டும் நகைகளை எடுத்து போட்டு பார்த்து கொண்டிருக்க சத்யா வந்து மடியில் படுத்து கொள்ள அவள் தூங்கிய பிறகு மீண்டும் நகைகளை எடுத்து பார்த்து கொண்டிருக்க சந்தியாவிற்கு சந்தேகம் வருகிறது.

சீதாவும் அர்ச்சனா கெட்டப்பில் இருக்கும் கல்பனா நகைகளை எடுத்து போட்டு பார்த்து கொண்டிருப்பதை பார்த்து சந்தேகத்துடன் என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்க கல்பனா பதில் சொல்ல முடியாமல் தவிக்க நான்ஸி அந்த இடத்திற்கு வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? கல்பனா சிக்கி கொள்வாளா? என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment