Advertisment

பள்ளி மாணவியை கைது செய்த போலீஸ்... மனைவியின் காதலை தெரிந்துகொண்ட கணவன் : ஜீ தமிழ் சீரியலில் இன்று

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் சீதாராமன் சீரியல் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
zee tamil Serial

ஜீ தமிழ் சீரியல்

கனியை கைது செய்த முத்துப்பாண்டி.. ஷண்முகம் செய்ய போவது என்ன?

Advertisment

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் ஸ்கூலில் கனி பேக்கில் துப்பாக்கியை வைத்து கொண்டு தவித்த நிலையில் இன்று, கனி பதற்றமாக இருக்க டீச்சருக்கு சந்தேகம் வந்து பேக்கை திறந்து பார்க்க உள்ளே துப்பாக்கி இருந்து எடுத்து இது எப்படி வந்துச்சு என்று கேட்க கனி துப்பாக்கியை பிடுங்க போக அது வெடித்து சிதறுகிறது. இதனை தொடர்ந்து ப்ரின்சிபிள் முத்துபாண்டிக்கு தகவல் கொடுக்க அவன் விரைந்து வருகிறான்.  

விஷயம் அறிந்த ரத்னா பிரின்சிபாலிடம் போலீசுக்கு எல்லாம் போக வேண்டாம் என்று கெஞ்ச இது போலீஸ் கேஸ் எதுவும் பண்ண முடியாது, தகவல் சொல்லியாச்சு என்று சொல்கிறார். உடனே ரத்னா பரணிக்கும் சண்முகத்துக்கும் தகவல் கொடுக்க இருவரும் பதறியடித்து ஓடி வருகின்றனர். அடுத்து முத்துப்பாண்டி ஸ்கூலுக்கு வர கனி அவளிடம் கெஞ்ச எப்பவும் திமிரா தானே பேசுவ, இப்போ என்ன கெஞ்சுற என்று நக்கல் அடிக்க ரத்னா உனக்கு எங்க மேல தானே கோவம் அவளை விட்டுடு என்று கெஞ்சுகிறாள்.

முத்துப்பாண்டி உன்கிட்ட காதலை சொல்லி உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை இருந்த போது கரிசனம் இருந்தது, ஆனால் இப்போ ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லி கனியை ஜீப்பில் ஏற்ற பரணி வந்து விடுகிறாள், பரணியும் முத்துபாண்டியிடம் கெஞ்ச எதுவும் பண்ண முடியாது என்று ஜீப்பை எடுக்க சண்முகம் வண்டியோடு வந்து கீழே விழுந்து எழுந்து ஜீப் பின்னாடியே ஓடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விடாமல் வெறுப்பேற்றும் சீதா.. உச்சகட்ட டென்ஷனில் நான்ஸி, நடக்க போவது என்ன?

சீதா ராமன் சீரியலின் நேற்றைய எபிசோடில் எக்ஸ்போர்ட் கம்பெனியில் கரண்ட் இல்லாமல் போக சீதா செய்வதறியாது தவிக்க இன்று, சுபாஷ் கோவில் கோவிலாக தேடி விட்டு நான்சியிடம் அவர்கள் எந்த கோவிலிலும் இல்லை என்ற விஷயத்தை சொல்ல நான்சி அப்படினா வந்தவங்க பகதர்கள் இல்ல, டெய்லர்கள் என்ற அறிந்து கொண்டு சீதாவை ஜெயிக்க விட கூடாது என்று ஆவேசப்படுகிறாள்.

இங்கே ராம் எக்ஸ்போர்ட் கம்பெனியில் ஜெனெரேட்டரை ரெடி செய்ய சீதா மீண்டும் மகிழ்ச்சியுடன் வேலையை தொடங்குகிறாள். சாயங்காலம் வீட்டிற்கு தலையில் நூலுடன் வர நான்சி எங்க போயிட்டு வர? தலையெல்லாம் நூலா இருக்கு என்று கேட்க அதான் தெரியுதே, அப்புறம் என்ன கேள்வி என்று பதிலடி கொடுக்கிறாள்.

மறுநாள் சேது மகா போட்டோ முன்பு நின்று பீல் பண்ண அதை பார்த்த நான்ஸி கவலைப்படாதீங்க சேது, சீதாவை தோற்கடிச்சதும் மீண்டும் பழைய மகாவாக உங்க முன்னாடி வருவேன் என்று மனதுக்குள் சொல்லி கொள்கிறாள். அதை தொடர்ந்து சீதாவும் மீராவும் வேலை நடக்குற விஷயம் நான்ஸிக்கு தெரிய கூடாது என்று பேசி கொள்ள நான்ஸி இதை ஒட்டு கேட்டு விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கைதாகும் ராஜேஸ்வரி? தீபாவின் காதல் குறித்து சிக்கிய ஆதாரம்

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் எடிட்டர் ரவியை கூட்டிட்டு வந்து உண்மையை நிரூபிப்பதாக சவால் விட்டது இந்த நிலையில் இன்று, ராஜேஸ்வரி எடிட்டரை தூக்கிவிட கார்த்திக் ஒரு வழியாக அவனை கண்டுபிடித்து வீட்டிற்கு கொண்டுவந்து நிறுத்துகிறான். ஆனால் ராஜேஸ்வரி இவர் யார் என்று எனக்குத் தெரியாது என்று ட்ராமா போடுகிறாள்.

ரவி, ராஜேஸ்வரி தான் தீபாவும் ரக்ஷனும் ஒன்றாக இருக்கும் போட்டோக்களை அனுப்பி நியூஸ் போட சொன்னது என்ற உண்மையை ஆதாரத்துடன் நிரூபிக்கிறான். இதனால் அபிராமி அதிர்ச்சி அடைந்து ஒரு பொண்ணோட வாழ்க்கையில இப்படி விளையாடி இருக்கீங்களே, இந்த வீட்டு சம்மந்தியா இருந்துட்டு நீங்க இப்படி செய்யலாமா என்ற கேள்வி கேட்க ஆளாளுக்கு ராஜேஸ்வரியை பிடித்து திட்டித் தீர்க்கின்றனர்.

கடைசியாக ராஜேஸ்வரி தப்பை ஒப்புக்கொண்டே மன்னிப்பு கேட்க கார்த்திக் அவர்களே உண்மையை ஒத்துக்கிட்டாங்க கூட்டிட்டு போங்க என்று போலீசை கூப்பிட்டு ராஜேஸ்வரி கைது செய்ய சொல்ல அபிராமி ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கிறார் இந்த நேரத்துல இவங்கள கைது பண்ணா அது நல்லா இருக்காது என சொல்லி ராஜேஸ்வரியை காப்பாற்றுகிறார்.

கார்த்திக் தர்மலிங்க மாமாவுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு வேண்டிக்குங்க அவருக்கு ஏதாவது ஆச்சு உங்களை சும்மா விடமாட்டேன் என வார்னிங் கொடுத்து விட, இன்ஸ்பெக்டர் எனக்கு இதுல உடன்பாடு இல்லை கார்த்திக் நீங்க சொல்றதுனால அவங்கள விட்டுட்டு போறேன் என கிளம்பி செல்கிறார். பிறகு அருண் ராஜேஸ்வரி ரூமுக்கு வந்ததன் ஏன் இப்படி எல்லாம் பண்ணி ஒவ்வொரு முறையும் கார்த்திக் கிட்ட அவமானப்பட்டு நிற்கிறீங்க.

ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதினால் தான் நீங்க தப்பிச்சீங்க இல்லனா உங்க கதி என்னவாகி இருக்கும் என திட்டுகிறான். அடுத்து தீபா கார்த்திக்கு போன் செய்து நான் இன்னிக்கி ஹாஸ்பிடல் தங்கிடுறேன் நாளைக்கு வரும்போது எனக்கு ஒரு படம் மட்டும் எடுத்துட்டு வாங்க என்று சொல்ல கார்த்திக் கபோர்ட் திறந்து பார்க்க அதில் அவனது கல்யாண பத்திரிக்கையில் நட்சத்திராவின் பெயரை அழித்துவிட்டு தீபா என எழுதி இருப்பதை பார்த்து மீனாட்சியிடம் என்ன விஷயம் என்று கேட்கிறாள்.

கல்யாணத்துக்கு முன்னாடி தீபாவுக்கு உங்க மேல காதல் இருந்தது ஆனா அவ தான் அதை வெளியில் சொல்லல என்ற உண்மையை உடைக்கிறாள். அதுமட்டுமின்றி பெங்களூர் போயிருந்தபோது கோவிலில் தாலி வந்து தீபாவின் கழுத்தில் விழுந்த விஷயத்தையும் சொல்கிறாள். இதனால் கார்த்திக்கு தீபாவின் காதல் குறித்த விஷயம் தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment