Advertisment

திருட்டு வேலை செய்த அப்பா : தோழியின் காதலனுக்கு கடிதம் எழுதும் நாயகி ; உண்மை தெரியவருமா?

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா கார்த்திகை தீபம் சீதாராமன் சீரியல் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee tamil Anna M
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ரம்யாவின் காதலனுக்காக காதல் கடிதம் எழுதிய தீபா.. ஐஸ்வர்யா செய்த சதி

Advertisment

கார்த்திகை தீபம் சீரியல் நேற்றைய எபிசோடில் தீபா கார்த்திக்கு இனிமே யாரையும் பைக்கில் கூட்டிட்டு போகக்கூடாது என கண்டிஷன் போட்ட நிலையில் இன்று, இரவு நேரத்தில் தீபா துணி துவைத்துக் கொண்டிருக்க அங்கு வந்த அபிராமி அந்த நேரத்துல என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்க அவரோட துணியை துவைச்சிட்டு இருக்கேன் நான் துவைக்கிறேன் என்று சொன்னேன் அவர் வேண்டாம் என்று சொல்லிட்டார். அதனால அவர் தூங்குற வரைக்கும் காத்திருந்து துவைச்சிட்டு இருக்கேன் என்று சொல்கிறாள்.

இதைக் கேட்ட அபிராமி நீ எவ்வளவு நல்லவளா இருக்க உன்னை புரிஞ்சுக்காம நான் ரொம்ப உன்னை காயப்படுத்திட்டேன் என்று வருத்தப்படுகிறாள். மேலும் நான் என் புள்ளைங்கள சரியா வளக்கல என்று வருந்த, தீபா ஆறுதல் சொல்ல இருவருக்கும் இடையேயான பிணைப்பு அதிகமாகிறது. அதன் பிறகு மறுநாள் காலையில் தீபா ரம்யாவை கோவிலில் சந்தித்து பேச ரம்யா சரியா சாப்பிட முடியல தூங்க முடியல என புலம்புகிறாள்.

இது காதல் பண்ற வேலை என்று கலாய்க்கும் தீபா ரம்யாவின் காதலனுக்காக ஒரு காதல் கடிதத்தை கொடுத்து இதை உன் ஆள் கிட்ட கொடு கண்டிப்பாக உன்னை ஏத்துப்பான் என்று கொடுக்கிறாள். இதையெல்லாம் மறைந்து நின்று பார்த்த ஐஸ்வர்யா தீபாவின் வாழ்க்கையில் விளையாட சரியான வாய்ப்பு கிடைத்திருப்பதாக நினைத்து சந்தோஷப்படுகிறாள்.

அடுத்ததாக ஆனந்த் வீட்டுக்கு வரும்போது தீபாவும் மைதிலியும் மீனாட்சி கோவிலுக்கு போய் இருக்காங்க அநேகமா அந்த மாப்பிள்ளை பார்க்க தான் நினைக்கிறேன். மீனாட்சி கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடுவாங்க போல என்று பேசிக் கொண்டிருக்க, இதை கேட்ட ஆனந்த் பதறி அடித்து கிளம்ப கார் ஸ்டார்ட் ஆகாமல் இருக்க ஒரு ஆட்டோவை பிடித்து கோவிலுக்கு வேக வேகமாக வருகிறான். கோவிலில் கல்யாணம் மீனாட்சிக்கு இல்லை என்று தெரிந்து அவன் நிம்மதி அடைகிறான்.

அப்போது அங்கு வந்த மீனாட்சி என்ன பதறிட்டீங்க போல என்று கேட்க அப்படியெல்லாம் இல்லனா கோவிலுக்கு தான் வந்தேன் என்று சொல்லி சமாளித்து அங்கிருந்து கிளம்பி செல்கிறான். பிறகு தீபா ஆனந்துக்கு உங்க மேல காதல் இருக்கு என்பதை நிரூபிக்கிறாள். மறுபக்கம் தீபா கொடுத்த காதல் கடிதத்துடன் ஆபீஸ் வந்த ரம்யா அதை பைலுக்குள் வைத்து கார்த்தியிடம் கொடுக்க சொல்லி அனுப்ப உள்ளே வந்த ஐஸ்வர்யா அந்த தீபாவிடம் பணத்தை கொடுத்து இதை கார்த்தி இடம் கொடுக்காத நான் கொடுக்கிற லெட்டரை கார்த்திக் கொடுத்ததாக சொல்லி ரம்யாவிடம் கொடு கடிதம் ஒன்றை மாற்றி வைத்து அனுப்புகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஸ்லிப்பாகி விழ போன எழில்.. தாங்கி பிடித்த சுடர், ரொமான்ஸ் அள்ளுதே

நினைத்தேன் வந்தாய் சீரியலின் நேற்றைய எபிசோடில் காவியாவை தொடர்ந்து கவினுக்கு ஹோம் வொர்க் செய்து கொடுப்பதாக சொல்லி சுடர் மாத்திரையை கொடுத்து அனுப்பிய நிலையில் இன்று, கவின் மாத்திரை கொண்டு வந்து கொடுக்க பின்னாடியே சுடர் ரூம்க்கு வர யாரோ என்னை யாருமே பார்த்துக்க மாட்டாங்கனு சொன்னாங்க, ஆனால் என் புள்ளைங்க என்னை பார்த்துக்கறாங்க என்று பேசி சுடரை வெறுப்பேற்றுகிறான்.

அதன் பிறகு அஞ்சலியிடம் உனக்கு சாக்லேட் தரேன் நான் சொல்றதை செய்யறீயா என்று கேட்க அவள் முடியாது நீ அப்பா ரூமுக்கு போக சொல்லுவ என்று மறுக்க சுடர் அவளிடம் கெஞ்சி சம்மதிக்க வைக்கிறாள். அதன் பிறகு அஞ்சலி எழில் ரூமுக்கு போய் எதையோ கொடுக்க அவன் எனக்காக நீங்க இதையெல்லாம் செய்வீங்க என்று சந்தோசத்தோடு கேட்க நாங்களா செய்யல சுடர் தான் செய்ய சொல்லி அனுப்பினா என்று நடந்த காவியா, கவினை கரெக்ட் செய்த விஷயத்தை சொல்ல எழில் டென்ஷன் ஆகிறான்.

செல்வி பால் கொண்டு வர நீயா கொண்டு வந்தியா என்று கேட்க இல்ல சுடர் தான் கொண்டு வந்தாங்க என்று சொன்னதும் கோபப்படுகிறான். அது முடிந்ததும் எழில் அவனாக எழுந்து கீழே வர ஸ்லிப்பாகி விழ போக சுடர் அவனை தாங்கி பிடிக்கிறாள். எழில் சுடரை எனக்காக நீ எதுவும் செய்ய வேண்டாம் என்று திட்டுகிறான். வேலு விஷயம் முன்னாடியே தெரிந்து இருந்தால் உங்ககிட்ட சொல்லி இருப்பேன், தெரிந்த உடனே தான் உங்களை காப்பாற்ற ஓடி வந்தேன் என்று சொல்ல எழில் நீ என் முகத்திலேயே முழிக்காத என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,

சூடாமணியிடம் சிக்கிய சௌந்தரபாண்டி.. கைவிரித்த பாண்டியம்மா

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பிளாஷ்பேக்கில் சௌந்தரபாண்டி கோவில் நகையை திருட பிளான் போட்டு கேரளாவில் இருந்து ஒரு திருடனை இறக்கி இருந்த நிலையில் இன்று, சூடாமணிக்கு விடியற்காலையில் முருகன் கனவில் தோன்றி என்னுடைய நகையை திருட பார்க்கிறாங்க என்று சொல்ல கண் முழித்து விடும் சூடாமணி கோவிலுக்கு கிளம்பி வருகிறாள். கோவிலில் சனியனும் கேரளா திருடனும் முகமூடி அணிந்து நகையை திருடி கொண்டு வெளியே வர சூடாமணி அதை பார்த்து விடுகிறாள்.

சனியன் சூடாமணியை பிடித்து கொண்டு கேரளா திருடனை தப்பிக்க வைத்து விட்டு அவளை தள்ளி விட்டு சனியனும் எஸ்கேப் ஆக சூடாமணி போலீசில் பிடித்து கொடுக்கிறேண்டா என்று கிளம்பி செல்ல சனியன் சௌந்தரபாண்டி போனை போட்டு விஷயத்தை சொல்லி சூடாமணியை தடுத்து நிறுத்த சொல்கிறான். அதன் பிறகு சௌந்தரபாண்டி அங்கு வந்து முதலில் திருடனை பிடிக்கலாம், அதுக்கப்புறம் போலீசில் புகார் கொடுக்கலாம் என்று சொல்ல சூடாமணி போலீசுக்கு சொல்லலாம் என்று சொல்கிறாள்.

அதன் பிறகு சௌந்தரபாண்டி ஒரு வழியாக சூடாமணியை தடுத்து நிறுத்தி கேரளா எல்லைக்கு வந்த திருடனை பிடித்து நீ இங்கேயே இரு, அவனை பிடித்து நகையை வாங்கிட்டு வரேன் என்று தனியாக வருகிறார் சௌந்தரபாண்டி. நீ திருடியதை அவ பார்த்துட்டா அவளை கொன்னுடு என்று திருடனிடம் சொல்ல திருடறது தான் என் வேலை நான் கொலை பண்ண மாட்டேன் என்று சொல்கிறான்.

இதனால் திருடனுக்கு சனியன், சௌந்தரபாண்டிக்கும் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் சௌந்தரபாண்டி திருடனை குத்தி கொன்னு விடுகிறார். பிறகு சனியனிடம் பழியை ஏற்றுக்கொள்ள சொல்ல அவன் நோ சொல்ல அக்கா பாண்டியம்மாவிடம் உதவி கேட்க அவளும் நோ சொல்கிறான். இதனால் சூடாமணியிடம் பழியை ஏற்றுக்கொள்ள சொல்லி பேச செல்கிறார் சௌந்தரபாண்டி.  இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment