மீண்டும் முதலிடத்தில் தீபா: சண்முகத்திற்கு என்ன ரேட்டிங்? ஜீ தமிழ் சீரியல்கள் இந்த வார டி.ஆர்.பி

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கை பார்ப்போம்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கை பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Zee tamil ams

சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் முக்கியமான ஒன்று ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் சீரியல்களின் ரேட்டிங் நிலவரங்களை பார்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

Advertisment

அந்த வகையில் இந்த வாரத்திற்கான ரேட்டிங் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.  ஜீ தமிழில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

கார்த்திகை தீபம் :

ஆனந்திற்கு ஆபத்து அதற்காக அவரது மனைவி பரிகாரம் செய்ய வேண்டும் என்று ரியாவை சிக்க வைத்து கோவிலில் பரிகாரம் செய்ய தீபாவின் அதிரடி பிளான் போன்ற காட்சிகளுடன் ஒளிபரப்பாகிய கார்த்திகை தீபம் சீரியல் 4.66 என்ற ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

Advertisment
Advertisements

அண்ணா :

ஸ்கூல் நிகழ்ச்சியின் சண்முகம் தலைமை தாங்க சௌந்தரபாண்டி அதுக்கு போட்டியாக கபடி போட்டி நடத்த சண்முகம் கலந்து கொள்ள இருந்த நிலையில், அண்ணனுக்காக வீரா பங்கேற்று வெற்றியை சூடிய கதையாக ஒளிபரப்பாகிய அண்ணா சீரியல் 4.04 என்ற ரேட்டிங்குடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

சந்தியா ராகம் :

மாயாவை மீண்டும் வெளிநாட்டுக்கு அனுப்ப சாரு செய்த சதி, மாயாவின் காதலை அறிந்த சீனு என எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிய சந்தியா ராகம் சீரியல் 3.97 என்ற ரேட்டிங்குடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

நினைத்தேன் வந்தாய் : 

சுடரை கடத்தி வேலு கல்யாணம் செய்ய போக எழில் அதை கடைசி நொடியில் தடுத்து அஞ்சலிக்காக அவளை வீட்டிற்கு அழைத்து சென்ற கதையாக ஒளிபரப்பாகிய நினைத்தேன் வந்தாய் சீரியல் 3.33 ரேட்டிங் புள்ளிகளுடன் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

நினைத்தாலே இனிக்கும் :

ஷில்பாவின் ஆவியை கிணற்றுள் அடைக்க நடக்கும் பூஜை, சித்தார்த் மாலையை கழட்டுவது போன்ற கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிய நினைத்தாலே இனிக்கும் சீரியல் 3.13 என்ற ரேடிங்குடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: