/indian-express-tamil/media/media_files/2025/01/28/42h315WS9XwkSmOjdXvA.jpg)
விட்னஸ் உடைத்த உண்மை.. கண்மணிக்கு காத்திருந்த அதிர்ச்சி - அதிரடி திருப்பங்களுடன் வீரா இன்றைய எபிசோட் அப்டேட்
வீரா சீரியலின் நேற்றைய எபிசோடில் வீரா விட்னஸை மடக்கி பிடித்த நிலையில் இன்று, வீரா யாரும் இல்லாத இடத்தில் விட்னஸை பிடித்து விசாரிக்க கண்மணி தான் இப்படி சொன்ன சொன்னது என்று விஷயம் தெரிய வருகிறது. அடுத்த நாள் ராமசந்திரன் வீட்டிற்கு வரும் லாயர் உங்க மருமகள் வீட்டில் இருந்து இந்த கேஸை விசாரிக்க கூடாது. இதனால் நாங்க மனஉளைச்சலுக்கு ஆளாகிறோம் என்று ஸ்டே ஆர்டர் வாங்கி இருக்காங்க என்று சொல்கிறார்.
இதை கேட்டு எல்லாரும் சந்தோசப்பட கண்மணி மட்டும் அதிர்ச்சி அடைகிறாள். ராமசந்திரன் யார் ஸ்டே ஆர்டர் வாங்கி இருப்பது? என்று விசாரிக்க உங்க பெரிய மருமகள் கண்மணி தான் என்று சொல்ல கண்மணி நானா என்று இன்னும் ஷாக் ஆகிறாள். உடனே இன்ஸ்பெக்டருக்கு போனை போட்டு யாரோ என் பெயரை பயன்படுத்தி ஸ்டே ஆர்டர் வாங்கி இருக்காங்க. அது யாருனு கண்டுபிடித்து தட்டி விடுங்க என்று சொல்கிறாள்.
அடுத்து வீரா கண்மணியை சந்திக்க கண்மணி இதெல்லாம் உன் வேலை தானா என்று சத்தம் போடுகிறாள். நான் உன் அக்கா மறந்துடாத என்று கண்மணி சொல்ல வீரா அவளை அதட்டி அமைதியாக்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாட்டி கொண்ட மகேஷ்.. கத்திக்குத்தால் காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா சாமுண்டீஸ்வரியிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிய நிலையில் இன்று, கார்த்திக் மற்றும் மயில்வாகனம் என இருவரும் மாயாவை வர சொன்ன இடத்திற்கு வந்து விடுகின்றனர். கார்த்திக் தூரத்தில் மறைந்திருக்க மயில் வாகனம் முகத்தை மறைத்தபடி நிற்கிறான்.
அதே போல் மாயா மற்றும் மகேஷ் என இருவரும் முகத்தை மறைத்தபடி வருகின்றனர். இருவருக்கும் எதிரில் இருப்பது யார் என்ற குழப்பம் உருவாகிறது. பிறகு மாயா பணத்தை கொடுத்த மயில் வாகனம் அதை வாங்கி கொண்டு மகேஷின் முகத்திரையை கிழித்து அவனை பிடிக்கிறான். இந்த சூழலில் மாயா மயில் வாகனத்தை கத்தியால் குத்தி விட்டு இருவரும் சேர்ந்து தப்பிக்கின்றனர்.
கார்த்திக் அவர்களை பிடிக்க முயற்சி செய்ய முடியாமல் போகிறது, மயில் வாகனம் கத்தி குத்துடன் விழ கார்த்திக் அவனை ஹாஸ்பிடல் அழைத்து செல்ல கிளம்ப மயில்வாகன் இப்போ உங்க உயிர் முக்கியம் என ஹாஸ்பிடல் அழைத்து வருகிறான். பிறகு கம்பி குத்தி காயம் ஏற்பட்டதாக சொல்லி குடும்பத்தாரை சமாளிக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வீம்பு பிடிக்கும் வெங்கடேஷ்.. சண்முகம், பரணி இடையே உருவாகும் மோதல் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வெங்கடேஷ் அறிவழகனிடம் இந்த ஸ்கூலுக்குள் எப்படி வரேன்னு மட்டும் பாரு என்று சவால் விட்ட நிலையில் இன்று, வெங்கடேஷ் பரணியை சந்தித்து நான் இங்க வந்து விட்டதால் எல்லாரும் பொண்டாட்டி தாசன் என்று தப்பா பேசுறாங்க. வேலை இல்லாமல் இருக்கேன் என்று கேவலமா பேசுறாங்க. எனக்கு ஒரு வேலை வாங்கி கொடுங்க. நான் கஷ்டப்பட்டு வாத்தியாருக்கு படிச்சேன் என்று சொல்கிறான்.
இதை கேட்டு சண்முகம் கிடைத்த வேலையை சரியா செய்ய முடியல.. இதுல திரும்பவும் வேலையா என்று சொல்ல வெங்கடேஷ் பரணி காலில் விழுந்து எந்த வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்ல பரணி ஷண்முகத்திடம் ஒரு வேலை போட்டு கொடு என்று சொல்கிறாள். ஆனால் சண்முகம் ஸ்கூல் சம்மந்தமா என் தங்கச்சி தான் முடிவு எடுக்கணும். அவ எடுப்பது தான் முடிவு என்று சொல்லி விட ரத்னா இவனுக்கு வேலை போட்டு கொடுக்க முடியாது என்று சொல்லி விடுகிறாள்.
இதனால் வெங்கடேஷ் வீட்டிற்கு வெளியில் சென்று படுகிறான். பரணி இதை பார்த்து உள்ளே கூப்பிட வெங்கடேஷ் எனக்கு இந்த வீட்டுக்குள்ள வரவே பிடிக்கல நான் இங்கேயே இருக்கேன் என்று சொல்கிறான். பிறகு பரணி மீண்டும் சண்முகத்தை சந்தித்து பேசுகிறாள். முத்துப்பாண்டி செய்யாத தப்பா? இசக்கி அவனுக்கு இடம் கொடுத்ததால் தான் அவன் திருந்தினான். அதே மாதிரி ரத்னாவும் வெங்கடேஷ்க்கு இடம் கொடுத்தா தான் திருந்துவான் என்று சொல்கிறாள்.
இதை கேட்டசண்முகம் மீண்டும் ரத்னா தான் முடிவு பண்ணனும் என்று சொல்லி விடுகிறான். இதனால் பரணி ஷண்முகத்திடம் கோபித்து கொண்டு ஹாலில் வந்து படுக்க இதை ரத்னா கவனிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.