Advertisment

வில்லனை கடத்திய ஹீரோ: வேகமாகும் இதய துடிப்பு; கார்த்திக் - தீபா திருமணம் என்னவாகும்?

ஜீ தமிழின் இதயம், கார்த்திகை தீபம் மற்றும் சந்தியா ராகம் சீரியல் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Ihdyam Karthigai Deepa

காதலுடன் தீபா கேட்ட கேள்வி.. ஒரே வார்த்தையில் பல்பு கொடுத்த கார்த்திக்

Advertisment

கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவின் அப்பா அவர்களுக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னதும் அதைக் கேட்டு ரம்யா அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று, கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருக்க தீபாவுக்கு மருதாணி போடும் நிகழ்ச்சியை நடத்த முடிவெடுக்கின்றனர். அபிராமி கொஞ்சம் வித்தியாசமா செய்யலாம் கார்த்தியே தீபாவுக்கு மருதாணி போட்டு விடட்டும் என்று சொல்கிறாள். இதற்கு எல்லோரும் ஓகே சொல்கின்றனர்.

அதன் பிறகு கார்த்திக் தீபாவுக்கு மருதாணி போட தயாராக அருண் ஆபீஸ்ல எல்லாரையும் நீ வேலை வாங்கிட்டு இருந்த இப்போ உன் பொண்டாட்டிக்கு மருதாணி போடுற மாதிரி ஆயிடுச்சு உன் நிலைமை என்று கலாய்த்து சிரிக்க, கார்த்திக் நான் தீபாவுக்கு மருதாணி போடுற மாதிரி நீங்க எல்லாரும் உங்க பொண்டாட்டிக்கு மருதாணி போடுங்க என்று மாட்டி விடுகிறான். 

இதையடுத்து அருண் ஐஸ்வர்யாவுக்கும் ஆனந்த், மீனாட்சிக்கும் அருணாச்சலம், அபிராமிக்கும் தர்மலிங்கம், ஜானகிக்கும் என ஒவ்வொருத்தரும் அவர்களது மனைவிக்கு மருதாணி போட்டு விடுகின்றனர்.

தீபா கார்த்தியிடம் எப்படியும் எனக்கு கை நல்லா செவக்கும்னு தெரியும் அப்போ நீங்க காதலை ஒத்துக்குவீங்களா என்று கேட்க ஒரு பார்வை பார்த்த கார்த்திக் பார்க்கலாம் என்று சாதாரணமாக பதில் சொல்கிறான். 

அதன் பிறகு மருதாணி போட்டு கொஞ்சம் நேரம் விட்டு கைகளை கழுவ தீபாவின் கை மட்டும் நன்றாக சிவந்து இருக்கிறது. பிறகு கார்த்திக்கிடம் வந்து இது குறித்து கேட்க அவன் போயிட்டு அண்ணி கிட்ட கேளுங்க என்று சொல்கிறான். பிறகு தீபா மீனாட்சியிடம் கேட்க அவள் உனக்கு போட்டது மட்டும் தான் ரியல் மருதாணி மத்தவங்களுக்கெல்லாம் வச்சது மருதாணி கிடையாது நான்தான் மாத்தி வச்சேன் என்று சொல்கிறாள். 

அடுத்து வீட்டுக்கு தரகரை வரவைத்து மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்று பேசுகின்றனர். இதைக் கேட்டதும் ரம்யா அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

போலீசை வைத்து பதற விட்ட ஆதி.. துரைக்கு நடந்தது என்ன?

இதயம் சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் துரை காணாமல் போன நிலையில் இன்று, ஆதி ரூமுக்குள் இருக்கும் போது அங்கு வந்த பாரதி துரை எங்கே? நீங்க தான் எதாவது பண்ணீங்களா என்று கேட்க, எனக்கு தெரியாது என்று சொல்கிறான். பாரதி திரும்ப திரும்ப கேட்க ஆதி அதே பதிலை மீண்டும் சொல்கிறான்.

அடுத்து வீட்டிற்கு போலீஸ் வர ஆதி எங்க வீட்டு மாப்பிள்ளை துரையை காணோம், நீங்க தான் கண்டு பிடித்து தரணும் என்று கம்பளைண்ட் கொடுத்திருப்பது தெரிய வருகிறது. வீட்டிற்கு வந்த போலீஸ் ஸ்வேதா மற்றும் அறிவு மீது சந்தேகப்பட இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். போலீஸ் கிளம்பியதும் ஆதி வரட்டுமா என்று தலையாட்டி விட்டு அங்கிருந்து நகர ஸ்வேதா எல்லாம் உன் புருஷன் பண்ண வேலை தானா என்று பாரதியை பார்த்து கோபப்பட சாரதா என் பிள்ளையை நான் அப்படி வளர்க்கல என்று பதிலடி கொடுக்கிறாள்.

அடுத்து அங்கு வந்த ஆதி துரை எங்கேன்னு எனக்கு தெரியாது, வேணும்னா போய் கார் டிக்கில தேடி பாருங்க என்று சொல்ல அறிவு மற்றும் ஸ்வேதா கார்களில் தேடி பார்க்கின்றனர். மறுபக்கம் ஒரு ட்ரைவர் ஹாயாக கார் ஒட்டி வர அவனை மடக்கி பிடித்து காரை சோதனையிட டிக்கியில் துரை கிடப்பது தெரிய வருகிறது. ட்ரைவரை அடித்து விசாரிக்க அவன் இவர் எப்படி டிக்கியில் வந்தார்னு எனக்கு தெரியாது என்று சொல்கிறான்.

பிறகு துரையை தண்ணீர் தெளித்து எழுப்பி விசாரிக்க அவன் பிளாஷ்கட்டில் நடந்ததை நினைத்து பார்க்கிறான், அதாவது தமிழை கடத்த போக பின்னாடி வந்த ஆதி துரையை கடத்தியது தெரிய வருகிறது. இதனால் துரை போலீசில் உண்மையை சொன்னா மாட்டிப்போம் என்பதால் எப்படி நான் இங்கே வந்தேன்னு தெரியல என்று சமாளித்து அங்கிருந்து வருகிறான், ஸ்வேதாவும் அறிவும் துரையை சந்தித்து என்னமோ பண்ணிடுவேன்னு வாய் கிழிய பேசுன.. என்னாச்சு என்று பிடித்து திட்டுகின்றனர்.

அடுத்து துரையுடன் வீட்டிற்கு வர சாரதா மாப்பிள்ளை எங்க போனாரு, எப்படி கண்டு பிடிச்சீங்க என்று விசாரிக்கிறாள். அடுத்து போலீஸ் வந்து துரையை விசாரிக்க அவன் தூங்கிட்டு இருக்கும் போது யாரோ 5 பேர் குண்டுக்கட்டாக தூக்கிட்டு போனதாக சொல்கிறான். அவங்க என்ன பேசிக்கிட்டாங்க என்று கேட்க இந்தியில் பேசுனாங்க எனக்கு புரியல என்று சமாளிக்கிறான். 

அதன் பிறகு ஆதி என் மாப்பிள்ளையை கடத்தியவன் யாருனு நீங்க தான் கண்டுபிடிக்கணும், இதுல ஏதோ ஒன்னு இருக்கு என்று கோர்த்து விடுகிறான்,

அடுத்து துரை நான் எவ்வளவோ பேருக்கு பயத்தை காட்டி இருக்கேன், ஆனால் இந்த ஆதி எனக்கே பயத்தை காட்டிட்டான் என்று புலம்புகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமையல்காரன் வேடத்தில் வந்து ஷாக் கொடுத்த சீனு.. மாயா எடுக்க போகும் முடிவு என்ன?

சந்தியா ராகம்சீரியலில் நேற்றைய எபிசோடில் சீனு லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்றுரகுராம் கணக்கு வழக்கு பார்க்க நோட்டு எடுத்துட்டு வரச் சொல்ல மணி நோட்டை எடுத்து வந்து கொடுக்க அதற்குள் சீனு எழுதிய லெட்டர் இருக்கிறது. ரகுராம் இந்த லெட்டரை படித்து விடுவாரா இல்லையா என மணி ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கம் மாயா, தனம் என எல்லோரும் சாப்பிட உட்கார சீனு சமையல்காரன் வேடத்தில் வர அதை பார்த்து ஷாக் ஆகின்றனர். பிறகு மாயா உன்னிடம் தனியாக பேச வேண்டும் என சொல்லி அவளை அழைத்துச் செல்கிறான். இங்கே ரகுராம் லெட்டரை படிப்பாரா இல்லையா என்ற பில்டப் காட்சிகள் நகர நோட்டை திறந்ததும் அந்த பேப்பர் பறந்து போய் ரமணி, ஜானகி என ஒவ்வொருவரிடமும் கை மாறி கடைசியாக பத்மாவிடம் வந்து சிக்க அவள் அதை படித்து விட்டு அதிர்ச்சி அடைகிறாள்.

இங்கே சீனு மாயாவிடம் நடந்த விஷயத்தை சொல்லி நாளைக்கு உனக்கும் எனக்கும் கல்யாணம். இந்த கல்யாணம் மட்டும் நடக்கலனா நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று வார்னிங் கொடுத்துவிட்டு செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment