Advertisment

மருமகனை கொல்லும் முயற்சியில் மாமனார்... கணவருக்கு துரோகம் செய்த மனைவி : எங்கு போய் முடியுமோ!

ஜீ தமிழில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்று வரும் அண்ணா, கார்த்திகை தீபம் மற்றும் இதயம் ஆகிய சீரியல்களின் இன்றைய எபிசோடுகளில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Zee tamil KD Ana

அண்ணா - கார்த்திகை தீபம் - இதயம்

கார்த்திக்கு அவமானத்தை கொடுத்த சிதம்பரம்.. உயிரை விட துணிந்த தீபா ‌

Advertisment

கார்த்திகை தீபம் சீரியல் நேற்றைய எபிசோட்டில் ரெசார்ட்டில் இருந்து எல்லோரும் கிளம்பி வீட்டுக்கு வந்த நிலையில் இன்று, சினேகா தீபாவை தடுத்து நிறுத்தி என்னை நீங்க சொல்லாம கொள்ளாமல் லீவ் போட்டுட்டீங்க என்று கேள்வி கேட்க, நான் பெரிய பாஸ்கிட்ட சொல்லிட்டு தான் லீவு போட்டேன் என்று அவளை ஆப் பண்ணி விட்டு உள்ளே செல்கிறாள்.

கார்த்திக் இளையராஜாவிடம் பல்லவி பாடுவதற்கு தேவையான எல்லாம் ஏற்பாடுகளையும் செய்ய சொல்கிறான். கோவிலுக்கு சென்று வந்ததாக சொல்லி பிரசாதத்துடன் மீனாட்சியும் இங்கு வர, பிறகு ஆபீசுக்குள் வரும் சிதம்பரம் கார்த்திக்கிடம் பல்லவி பாடிய பாடலை காட்ட அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறான். தெரியாம இந்த பீல்டுக்குள்ள வந்துட்டீங்களே தம்பி என்று சொல்லி சிதம்பரம் அங்கிருந்து எழுந்து செல்ல கார்த்திக் கடுப்பாகிறான்.

இளையராஜா கார்த்திக்கிடம் பேச போக என்னை கொஞ்சம் தனியா விடுங்க என்று சத்தம் போட எல்லோரும் கிளம்பி வெளியே வந்து விடுகின்றனர். என்னால் தான் கார்த்திக்கு இந்த அவமானம் என்று தவிக்கும் தீபா இங்கிருந்து வெளியே கிளம்ப மீனாட்சி அவளை பின் தொடர்ந்து செல்கிறாள். தீபா முருகன் கோவில் சென்று இனிமேலும் என்னால் பொய் சொல்லி வாழ முடியாது என்று தற்கொலை முயற்சி செய்கிறாள்.

தீபாவை தடுத்து நிறுத்தும் மீனாட்சி இதற்கான காரணங்களை நிரூபித்து கார்த்தி உடன் நீ வாழ வேண்டும் என தீபாவின் மனதை மாற்றி கூட்டி வருகிறாள். அடுத்ததாக கார்த்திக் தீபா வீட்டுக்கு வர அபிராமி இடம் பல்லவி சிதம்பரத்திற்காக பாடிய விஷயத்தை சொல்ல, இது பெரிய நம்பிக்கை துரோகம் என்று கோபப்படுகின்றனர். ரூமுக்கு வந்த கார்த்தியும் பல்லவி இப்படி செய்திருக்கக் கூடாது என புலம்புகிறான்.

தீபா அவங்களுக்கு ஏதாவது பிரச்சனையோ என்னவோ என்று சொல்ல எப்படி இருந்தாலும் அதை என்கிட்ட சொல்லி இருக்கலாம். இது பெரிய நம்பிக்கை துரோகம் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பரணியை நேரில் சந்தித்து மிரட்டல் விடுத்த பாண்டியம்மா.. சண்முகத்துக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பாண்டியம்மா செம மாஸாக என்ட்ரி கொடுத்த நிலையில் இன்று, முத்துப்பாண்டியிடம் ஜெயில் செல்லை திறந்து விட சொல்ல வெளியே வரும் சௌந்தரபாண்டி அக்காவை பார்த்து பாசத்தை கொட்டுகிறார். என்னுடைய இந்த நிலைமைக்கு அந்த சண்முகம் தான் காரணம் என்று சொல்ல பாண்டியம்மா இப்ப நான் உனக்கு மூணு வாக்கு தரேன். ஒன்னு அந்த சண்முகம் தர்மகர்த்தா ஆக மாட்டான்.

அடுத்து பரணி கையால் அவன் கட்டிய தாலியை கழட்டி எறிஞ்சிட்டு உன் வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன். மூணாவது ரத்னாவுக்கும் முத்துப்பாண்டிக்கும் கல்யாணம் நடக்கும் என்று கூறுகிறார். பிறகு பாண்டியம்மா அங்கிருந்து கிளம்ப சௌந்தரபாண்டி நானும் வரட்டா என்று கேட்க, உன்னையும் கூட்டிட்டு போனா உன்னோட நானும் கலி திண்ண வேண்டியது தான் என்று சொல்கிறார்.

நேராக சண்முகம் வீட்டுக்கு வரும் பாண்டியம்மா பரணியிடம் அவன் கட்டிய தாலியை கழட்டி எறிஞ்சிட்டு வா என்று கூப்பிட இன்னும் 32 நாள்ல வந்துடுவேன் என்று சொல்கிறாள். இன்னும் 32 நாள்ல நீ வரவில்லை என்றால் தாலி அறுத்து பூவை எடுத்து மொட்டை அழிச்சு கூட்டிட்டுப் பாரு என்னை புரியலையா உன் புருஷன் உயிரோடு இருக்க மாட்டான் என்று மிரட்ட சண்முகம் வேல் எடுத்து குத்த வருகிறான்.

ஆனால் பாண்டியம்மா கொஞ்சம் அசராமல் குத்துடா பார்க்கலாம் என்று பேச சண்முகம் திகைத்து நிற்கிறான். அடுத்து பாண்டியம்மா வீட்டுக்கு வர அதை பார்த்து பாக்கியம் பதறுகிறாள். சிவபாலனும் மிரண்டு போய் நிற்கிறான். அடுத்து பாண்டியம்மாவுக்காக முருங்கைக்காய் சாம்பார் எடுத்து வர அதை தூக்கி வீசும் பாண்டியம்மா போய் நாட்டுக்கோழி அடிச்சு குழம்பு வச்சிட்டு வா என்று துரத்தி விடுகிறார்.

பிறகு நாட்டுக்கோழி குழம்பு வைத்து எடுத்து வந்து கொடுக்க அதை சாப்பிட்டுவிட்டு நான் என்ன குழந்தையா காரம் எவ்வளவு கம்மியா இருக்கு என திட்டுகிறார். அடுத்ததாக மூன்று வக்கீல்கள் வீட்டிற்கு வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பர்த்டே பார்ட்டியில் ஆதி கேட்ட கேள்வி.. பாரதி கொடுத்த பதிலடி

இதயம் சீரியலின் நேற்றைய எபிசோட்டில் சாரதாவின் பிறந்தநாளை கொண்டாட பாரதி எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து வைத்த நிலையில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.  இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் பாரதி சாரதாவுக்காக ஒரு கிப்ட் கொடுக்கிறாள். அதன் பிறகு ஆதி பாரதியிடம் தமிழ் பாப்பா என்ன அப்பான்னு கூப்பிட்டா கல்யாணம் பண்ணிப்பீங்களா என்று கேட்க, தமிழ் வாசுவும் மட்டும்தான் அப்பாவா நினைக்கிறான் உங்கள் அப்படி ஒரு நாளும் கூப்பிட மாட்டா என்று சொல்கிறாள்.

அதன் பிறகு வீட்டுக்கு வந்த பாரதி வாசுவின் போட்டோவை பார்த்து ஒரு பக்கம் துறையுடன் கல்யாணம் ஏற்பாடுகள் நடக்க இன்னொரு பக்கம் ஆதி காதலை சொல்வதை பற்றி சொல்லி என்னை எதுக்கு விட்டுட்டு போன என்று கலங்குகிறாள்.  மறுபக்கம் ஆதி பாரதியின் போட்டோவை பார்த்துக் கொண்டே எனக்கு என்னமோ உங்க கூட ரொம்ப நாள் வாழ்ந்த மாதிரியே தோணுது எனக்கு நீங்களும் தமிழும் ரொம்ப முக்கியம் என்ன நடந்தாலும் உங்களை விட்டுட்டு போக மாட்டேன் என்று பேசுகிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Zeetamil Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment